‘அரசியல்வாதி’ – ச.லிங்கராசுவின் மரபுக் கவிதை

Sa Lingarasu Wrote (Politician) Traditional Poetry in Tamil Language. Book Day and Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.மரபுக் கவிதை
*****************

எத்தனை ஜாலங்கள் ஏமாற்றும் பேச்சுகள்
அன்றும் செய்திருப்பார் -அதை
இன்றும் செய்திடுவார் – ஒரு
புத்தரை போலொரு போதனை சொல்லியே
நித்தமும் நடித்திடுவார் – வரும்
சொத்தையும் சேர்த்திடுவார்

சட்டத்தின் ஓட்டையை சாதகமாக்கியே
சாதனை செய்திடுவார் – நம்
வேதனை மறந்திடுவார் – ஒரு
பட்டத்து ராஜாவாய் பவனிகள் வந்துமே
கொட்டங்களடித்திடுவார் – ஏய்த்துப்
பட்டங்கள் பெற்றிடுவார்

ஊழலின் சேற்றினில் உண்மை மறைத்து மே
உத்தமனாகிடுவார் – பெரும்
எத்தனுமாகிடுவார் – இவர்
வீழ்ந்து கிடப்பதை வீதிகள் பார்த்ததும்
வித்தகம பேசிடுவார் – வெற்று
வார்த்தைகள் வீசிடுவார்

பேரங்கள் பேசியே பிழைக்கிற வழியினை
பெரியதாய் செய்திடுவார் – இவர்க்கு
உரியதாய்செய்திடுவார் – நாட்டின்
பாரங்கள் வாழ்க்கையைப் பந்தாடும் போதினில்
பாமரன் போலிருப்பார் – பழியை
வேறிடம் போட்டிடுவார்

கூட்டுக்கள் சேர்ந்துமே கூடி குலவிப்பின்
கூட்டைக் கலைத்திடுவார் – வெறும்
பாட்டைப் படித்திடுவார்-மீண்டும்
ஓட்டுகள் பெற்றிட ஓலை குடிசையில்
ஒருநாள் சாப்பிடுவார் – அதையே
திருநாள் ஆக்கிடுவார்

–ச.லிங்கராசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.