பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) என்ற புத்தகத்தை எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறார் கதைகள் இருப்பதையும், அதில் தோழர். தமிழ்செல்வன் (Sa.TamilSelvan) எப்படி எழுதிருக்கிறார் என்று ஆர்வத்தோடு வாசித்து பார்ப்போம் என்று படிக்க வாங்கினேன்.
மனிதர்கள் கை கொடுக்காதபோது தெய்வத்தை நாடுவது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது என்று தொடங்கிய நடராஜனின் சிறுகதை வடிவில் இருப்பதை புத்தகத்தில் இருக்கிறது.
“பரிச்சையிலே பெயிலாப் போயிட்டயாக்குமயா? என்று ஆத்தா கேட்டாள்.
“எந்த நாயி சொன்னான், நான் ஒன்னு பெயிலு இல்லே” என்று நடராஜன் கோபத்தோடு பேசும் காட்சிகள் கிராமத்தில் வாழும் மக்களின் இயல்பான பேச்சுகள் இந்தப் புத்தகத்தில் நிறைந்து இருக்கிறது.
மிகவும் ஏழ்மையான பின்புலம் நிறைந்த நடராஜன் வாழ்க்கையில் பள்ளிப்பருவத்தில் சந்திக்கும் வாழ்வியல் நடைமுறைகளோடு எப்படி அணுகிறார் என்பதுதான் கதையாக செல்கிறது.
“படிச்ச மட்டும் படிய்யா… அதுக்காக போட்டு..” என்று நடராஜன் தந்தை சொல்லும் வார்த்தைகளோடு, மூன்று மாதம் ஆடுமேய்க்க ஆள் கிடைத்ததாக நினைக்கும் தந்தையின் மற்றொரு பார்வையும் எழுத்தாளர் பேசிருக்கிறார்.
நடராஜன் தொடர்ந்து பள்ளி வகுப்பில் தோல்வி அடையும்போது ஆடு மேய்க்க சென்றுவிடுகிறார். அப்போது அங்குவரும் நடராஜன் தாய்மாமன் மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறார். இப்படி கீழத்தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து ஒரு பட்டாளத்துக்காரன் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கதான் செய்கிறான் என்பது உண்மையான நிகழ்வாகவே தோன்றுகிறது.
தன் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருந்தது. ஆங்கிலமும், கணிதமும் நடராஜனுக்கு ஏன் மார்க் வரவில்லை? அதற்காக நடராஜன் செய்யும் முயற்சிகள் எப்படி இருந்தது? என்று புத்தகத்தில் நகர்ந்து கொண்டே சென்றது.
மனிதர்கள் தன்மீது வைக்கும் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கை அதிகமாக இருப்பதை கிராமங்களில் இன்னும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு அறிவியல் பூர்வமான நடவடிக்கை இருக்க வேண்டும் என்று உணர்த்தும் புத்தகமாக இருக்கிறது. உதாரணமாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, ஆடு வெட்டி பொங்கல் வைத்தால் பாஸ் ஆவதும், சர்ச்சுக்கு சென்று முன்னங்கால் போட்டு வேண்டினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையையில் செல்லும் நடராஜனின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்து அறியலாம்.
ஒன்பதாம் வகுப்பில் பாஸ் ஆகும் நடராஜன் பத்தாம் வகுப்பிற்கு செல்ல முடியாமல் தலைமையாசிரியர் என்ன செய்கிறார். பின்பு தாய்மாமன் தொடர்ந்து நாகராஜனுக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் கதையின் முடிவாக இருக்கிறது.
சாதிரீதியான பார்வைகள் நிறைந்த கிராமத்தின் சூழலில், தனக்கு ஒரு வாய்ப்பு மறுக்கும்போது அதை பெறுவதற்காக சாதியை முன்னெடுக்கும் முறையை முற்றிலுமாக மறுக்கும் நாகராஜன் தாய்மாமனின் நடவடிக்கை இந்த புத்தகத்தின் முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
மொத்தத்தில் ஒரு முற்போக்கான எழுத்தாளர் எழுதிய சிறார் கதைகயில் நிறைய பேசப்படும் புத்தகமாக இருப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எத்துணையோ நாகராஜனின் இன்னும் கிராமத்தில் தொடர்ந்து மதரீதியாகவும், சாதீரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது தொடர்ந்து போராடுவோம்.
அருமையான புத்தகம் நிறையக் கேள்விகளோடு முடிந்ததாக இருக்கிறது.
தோழர்.தமிழ்ச்செல்வனுக்கு அன்பும் நன்றியும்.
நூலின் தகவல்கள் :
நூல் : பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu)
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan)
விலை : 20
பக்கம் : 26
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044-24332924
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/pathimoonil-onnu/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
பதிமூணில் ஒண்ணு (Pathimoonil Onnu) – நூல் அறிமுகம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

