சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – பேரா. சோ. மோகனா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – பேரா. சோ. மோகனா

நம்ம குடும்பம் பெரிசு

நம்ம சூரிய குடும்பத்திலே சூரியன்தான் மைய நாயகன். அவர்தான் சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களின் கட்டுப்பாட்டாளர் என்றும் கூட சொல்லலாம் சூரியனைச் சுற்றி, அதனுடன் 8  கோள்கள பெண்கள் வட்டமிட்டு கும்மியடித்துக் கொண்டே சுற்றி சுற்றிவருதைப் போல இந்த கோள்கள் சூரியனைச் சுற்றி சுற்றி வருகின்றன. கோள்களின் எல்லையைத் தாண்டியும், உள்ள குள்ளக் கோள்கள, குயூப்பியர்  வளையம் மற்றும்அதைத் தாண்டி மிகத் தொலைவில் உள்ள  ஊர்ட்  மேகம், அதிலிருந்து  உருவாகி வெளியேறி வந்து அப்பப்ப நம் சூரியனைச் சுற்றி வந்து விட்டுப் போகிற வால்நட்சத்திரங்கள் உட்பட அனைத்தும் சூரிய குடும்ப உறுப்பினர்கள்தான். இப்போது. வந்துள்ள  2025 , ஜனவரி 17 லிருந்து தெரியும், Comet 2024 G3 Atlas  உட்பட

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

 

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

 

சுற்றி சுற்றி வரும் கோள்கள்..

சூரியனைச் சுற்றி அதன் குடுமப் உறுப்பினர்களான 8 கோள்கள சுற்றுகின்றன என்பது நமக்குத் தெரியும். அது எதனால் என்பது தெரியுமா? சூரியனின் ஈர்ப்பு விசையால்தான் அவை சூரியனைச் சுற்றி வருகின்றன. . சூரியனைச் சுற்றி நீள்வட்டத்தில் தட்டாமாலை சுற்றுவதுபோல  சுற்றி வலம் வரும் கோள்கள ஒவ்வொன்றும், அதன் அடர்வு, நிறை மற்றும் அது சூரியனிலிருந்து உள்ள தொலைவு என்பதை எல்லாம் பொறுத்தே, அதன் சுற்று வேகம் உள்ளது என்றால் ரொம்பவும் ஆச்சரியாமான விஷயம்தானே.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 

நாம் இதுவரை அறிந்துள்ள அறிவியல் தகவல்களிலிருந்து,   பூமியில் மட்டும்தான் உயிரினம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உயிரினத்தின் ஒன்றான மனித இனம்தான், சூரியன் , மற்ற கோள்கள மற்றும்  பூமி எல்லாம் உருவான விஷயங்களையும், அவை தொடர்ந்து இடைவிடாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது  உண்மைகளையும்  உலகுக்கு அறிவியல் மூலம் அறிந்து தெரிவித்தனர். இவரைத் தவிர வேறு யாரும் இதனைச் சொல்லவில்லை. நம் பூமி தன மைய அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது என்றும்,  அதனால்தான் பூமி வாழ் உயிர்களுக்கு பருவகாலம்  ஏற்படுகிறது என்பதம் கூட நமக்குத் தெரியும். பூமி மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் சாய்ந்தே உள்ளன.  சூரியனும் கூட தன அச்சில் 7 டிகிரி சாய்மானத்திலேயே சுற்றி கொண்டிருக்கிறது.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

 

Axis and rotation of selected Solar System bodies
Body NASAJ2000.0[38] epoch IAU, 0h 0 January 2010 TT[39] epoch
Axial tilt
(degrees)
North Pole Rotational
period
(hours)
Axial tilt
(degrees)
North Pole Rotation
(deg./day)
R.A. (degrees) Dec. (degrees) R.A. (degrees) Dec. (degrees)
Sun 7.25 286.13 63.87 609.12[A] 7.25[B] 286.15 63.89 14.18
Mercury 0.03 281.01 61.42 1407.6 0.01 281.01 61.45 6.14
Venus 2.64 272.76 67.16 −5832.6 2.64 272.76 67.16 −1.48
Earth 23.44 0.00 90.00 23.93 23.44 Undefined 90.00 360.99
Moon 6.68 655.73 1.54[C] 270.00 66.54 13.18
Mars 25.19 317.68 52.89 24.62 25.19 317.67 52.88 350.89
Jupiter 3.13 268.05 64.49 9.93[D] 3.12 268.06 64.50 870.54[D]

 

Saturn 26.73 40.60 83.54 10.66[D] 26.73 40.59 83.54 810.79[D]
Uranus 82.23 257.43 −15.10 −17.24[D] 82.23 257.31 −15.18 −501.16[D]
Neptune 28.32 299.36 43.46 16.11[D] 28.33 299.40 42.95 536.31[D]
Pluto[E] 57.47 312.99[E] 6.16[E] −153.29 60.41 312.99 6.16 −56.36

     பூமியின் சுற்றுப் பாதை எப்படி?

நம் பூமியை, வட துருவத்திலிருந்து,அதற்கு மேலேயுள்ள வட துருவ விண்மீனிலிருந்து  பார்த்தால், நம் பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவது நன்றாகவே தெரியும். வடதுருவம்தான் புவியியல் வடதுருவம்(Geographic North Pole) /தரைப் பகுதி வடதுருவம் (Terrestrial North Pole) என்றும்  சொல்லப்படுகிறது. இங்குதான்,. பூமியின் மைய அச்சு அதனுடைய மேற்பகுதியை சந்திக்கிறது. ஆனால் இந்த இடம் வடபகுதி காந்ததுருவத்திலிருந்து (North Magnetic Pole)வேறுபட்டது  ஆகும்.பூமியின் தென்துருவத்தில், அதன் சுற்று அதன் மேற்பகுதியிலிருந்து பிரிக்கப்படுகிறது.

தன்னைத் தானே சுற்றும் நேரம்..

பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் /23 மணி, 56 நிமிடங்கள் & 4 நொடிகள் ஆகின்றன. இதுவே ஒரு முறை சூரியனைச் சுற்றிவர, தன்னுடைய அச்சில்/சுற்றில் 366.6 முறை சுற்று கிறது அதனால் 365.26 நாட்கள் ஆகின்றன. இதுவே பூமியின் ஒரு வருடம் எனப்படுகிறது. ஆனால் பூமியின் சுற்றுவேகம் எப்போதும் இது போலவே இருந்ததா? இல்லை என்பதே .பதில்.. எதனால் என்ற வினாவும் உடனேயே உங்களுக்குள் எழுகிறதா?

 எதனால், எதனால், எதானாலே..

அது சரி .. பூமி ஏன்  சுற்றுகிறது? எதற்காக சுற்ற வேண்டும்.? அதனை சுற்றி விடுவது யார்? சுற்றி சுற்றி வரும் பூமி.. தட்டாமாலை சுற்றும் பூமி. எதனால்? பூமி அது உருவான தன்மையினாலதான் அது இன்னும் அப்படியே சுற்றிக் கொண்டிக்கிறது. நமது சூரிய குடும்பம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்,நெபுலா என்று கூறப்படும் ஒரு பெரிய்..ய.ய..ய வாயு மேகமாய் இருந்தது. அதுவும். அதனுடன் சேர்ந்த தூசுக்களும்  அதனுடைய சொந்த ஈர்ப்புவிசையால்  மிக வேகமாக உடைந்து நொறுங்கின. அப்படி நொறுங்கும்போது உருவானதுதான் நம் சூரிய குடும்பம்.  அந்த மேகம் உடைந்து நொறுங்கிய சடுதியிலே, இந்த மேகக்கூட்டம் மிக வேகமாக அசுர கதியில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் சுற்றத் துவங்கியது. அப்போது இந்த மேகத்துகள் சுற்றும்போது, அவற்றுள் சில தனித்தனியாகி, சுற்றுக் கொண்டே, சுழலும் “சுழல் காற்றாகி”விட்டது. அவையும் கூட தனித் தனியாகி சுற்றத் துவங்கி   விட்டன. அவைகள்தான் “கோள்கள்”.

வேகமாக உருவாக்கி, வேகமாக சுற்றி..

சூரிய குடும்ப கோள்கள் உருவான கணத்திலிருந்து , அவை தன்னை தானே சுற்றிக்கொள்கின்றன.இது  எப்படி தெரியுமா? ஸ்கேட்டின் செய்பவர்கள் சுற்றும்போது, தனது கைகளை உடலுடன் சேர்த்து வைத்து சுற்றும்போது வேகமாக அவர்களால் சுற்ற முடியும். அது போலவே தான் இதுவும். ஒரு கோள் உருவாக போதுமான பொருட்கள் இருந்து விட்டால், அவை தனியாக சுற்றத் தொடங்கிவிடுகின்றன. அது தன்னால் ஈர்க்கப்பட்ட பொருளுடன் சேர்ந்து வேகமாகச் சுற்றுகிறது.தான் சுற்றுவதை/ தன் சுற்றும் வேகத்தை தடை செய்யும் ஒரு பொருள் இல்லாவிட்டால், இது தடையின்றி சுற்றிக் கொண்டே இருக்கும்.  இந்த கதைதான் நம் பூமிக்கும். அதாங்க நம் பூமியும் அன்று தொடங்கி  இன்று வரை சுற்றுகிறது. சூரியன் உள்ளவரை பூமியார் சுற்றிக் கொண்டுதான் இருப்பார் இடையில் யாரும் குறுக்கிடாதவரை..

 பூமியின் சுற்று வேகம்..

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

பூமியின் சுற்று வேகம் எவ்வளவு என்று நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?பூமியின் சுழற்சி வேகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதன் ஒவ்வொரு அட்சரேகைப் பகுதியிலும், அதன் வேகம் வேறு  வேறாக இருக்கிறது. நீங்கள் வடதுருவத்தில் நிற்கிறீர்கள் என்று வைத்துக்  கொள்வோம். அப்ப அந்த இடத்தில் சுற்று வேகம் என்னவாக இருக்கும். சொல்லுங்களேன். .வடதுருவத்தில் பூமியின் சுற்று வேகம் சுழியன்தான்.அதாம்,பா “0” கி.மீ தான் வடதுருவத்தில். அங்கேதானே, சுற்றலின் துவக்கம்..அதான். ஆனால் அதன் மையக்கோட்டில்/ நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்று வேகம் மிக அதிகம். அதன் சுற்றளவு அதிகம் உள்ள இடத்தில். நிலநடுக்கோட்டில்/புவி மையக் கோட்டில்  மணிக்கு,1,670 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.அதாம்பா. அது கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவில் தான், அங்கிருந்து வடக்கும், தெற்கும் செல்லத் துவங்கினால் வேகம் குறைந்து கொண்டே இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா 1125-1450  கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது.

குறைந்து வரும் பூமியின் சுற்று வேகம்..

பூமியின் இப்போதைய சுற்று வேகம் என்பது. நொடிக்கு 29.6 கி.மீ/ மணிக்கு 1,07,200 கி.மீ என்பதாக இருக்கிறது.  இப்போது  சுற்று வதைவிட மிக வேகமாக முன்பெல்லாம் சுற்றியிருக்கிறது.எவ்வளவு வேகம்.? பூமியின் சுற்று வேகம் முன்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. பூமி காலப்போக்கில் அதன் துணைக்கோளான நிலவின் ஈர்ப்பு விசையால்,உராய்வால்,  அதன் வேகம் குறைந்த கொண்டே வருகிறது.  நிலா, தன கோள் நாயகனான பூமியிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் ,3 செ.மீ . விலகி சென்று கொண்டே  இருக்கிறது. கோபித்து கொண்டு பூமியைவிட்டு விலகிச் செல்கிறது என்று சொல்லலாமா? இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும், பூமியின் சுற்று வேகம் குறைந்து, அதன் நாளில் 1.2 மில்லி வினாடிகள் அதிகரிக்கின்றன. நாளின் நேரம் கூடினால் சுற்று வேகம் குறைகிறது என்றுதானே பொருள்?  முன்னொரு காலத்திலேயே.. (4.5 பில்லியன் ஆண்டுக்கு முன். )

சூரியனிலிருந்து பூமி உருவாகும்போது , ஒரு நாள் என்பது 4 மணி நேரம் மட்டுமே,  பூமி உருவான சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு நாள் என்பது 4- 6 மணி நேரம் தான். ஒரு வருடம் என்பது 500 நாட்களுக்கு மேல் இருந்தது..

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

வேகம் குறைவதை கணிக்கும் கணினி யார்?

அது சரி. இப்படி பூமியின் சுற்று வேகம் குறைகிறது என்ற சங்கதியை நமக்கு சொல்வது யார்? அறிவியல் தகவல்கள் நமக்கு இந்த உண்மையை ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன.இது பல  மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரககோ ஸ் (rugose) என்ற பவல் புதைபடிம பவளத்திலுள்ள வளர்ச்சி வளையங்கள்,மூலம் தெரிய வருகிறது. அந்த பவளத்தின் வயது சுமார் 370  மில்லியன் ஆண்டுகள் என்று ரேடியோ கார்பன் முறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  அந்த வளர்ச்சி வளையங்கள்மூலம், அப்போது ஒரு வருடத்துக்கு 425 நாட்களாக  இருந்தன.  மேலும் ஒரு நாள் என்பது 20.6 மணி நேரம் ம்ட்டுமே கொண்டதாக இருந்தது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள அலை விசைகள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம்  ஒட்டுமொத்தமாக குறைகிறது. தோராயமாக ஒவ்வொரு 100 வருடங்களுக்கும், நாள் சுமார் 1.4 மில்லி விநாடிகள் அல்லது ஒரு நொடியில் 1.4 ஆயிரத்தில் ஒரு பங்கு நீளமாகிறது. இது ஒரு கண் சிமிட்டுவதை விட 100 அல்லது 200 மடங்கு வேகமானது என்பது உண்மைதான்.   இப்ப புதுக் குண்டு போடறாங்களே..

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

வெகுவேகமாக சுற்றிவரும் பூமியின் உட்பகுதியின் புதிருக்கு  இன்று விஞ்ஞானிகளால், விடை கண்டுபிடிக்க்பட்டிருக்கிறது. ஆம், கடந்த 300 ஆண்டுகளாய் விடைகிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த ஒரு புதிரின் திறவு கோல்  2013 செப்டம்பர் 17 ,ம் நாள் லீட் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஏன்னா தெரியுமா? பூமியின் உள்பகுதி கிழக்கு நோக்கி சுற்றுகி கிறதாம். அது எப்படிங்க அதன் வெளிப்பகுதி மேற்கு நோக்கி சுற்றுகிறது  என்கிறீர்களா?அது அப்படித்தாங்க..பூமியின் உட்பகுதி, வெளிப்பகுதிக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கியும், வெளிப்பகுதி மேற்கு நோக்கியும் சுற்றுகிறதாம். (பூமி மேற்கு நோக்கி சுற்றுகிறது என்பதை ஹாலி வால்நட்சத்திரம் கண்டுபிடித்த எட்மண்டு ஹாலிதான் 1692 ல் கண்டுபிடித்தார்). என்ன உங்களுக்கு தலையைச் சுற்றுகிறதா? நல்லா  சுத்தட்டும். இதான்பா உண்மை..வேறு ஏதானு  தகவல் வேணும்னா, இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி லீட் பல்கலைக் கழக புவி  மற்றும் சூழலியல் துறையைச் சார்ந்த டாக்டர்.பிலிப் லைவேர்மோர்(Dr Philip Livermore) என்பவரைத் தான் கேட்க வேண்டும்..அது போதுமா..ஆளை விடுங்கப்பபா..

 

சுற்றும் சுட்டுவிழி நின்றுவிட்டால்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

அதெல்லாம் சரி. இப்ப நாம் ஒரு கேள்வி கேப்போம். ஒருக்கால் பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும். ? இது என்ன மடத்தனமான் கேள்வி என்கிறீர்களா? இதுவும் நடக்கலாம், ஆனால் இன்னும் குறைந்த பட்சம் சில பில்லியன் ஆண்டுகளுக்கு இது நடைபெறும்/ நிற்கும்  வாய்ப்பு இல்லை. ஒருகால் அப்படி நின்று போனா, பூமியிலுள்ள வளி மண்டல் காற்றின் வேகம் பூஜ்யத்துக்கு வந்துவிடும்.பூன்மி உடனே.இப்போது சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் அசுர வேகத்தில்   பயங்கர சூறாவளியாக வேகமாக  சுற்றத் துவங்கும். கட்டிடங்கள் நோருப்கு. பெருங்கடல்கள் நிலப்பகுதிமேல் பாயும். வளிமண்டலத்திலிருந்து சூறாவளி விசிறியடிக்கும். நாம் புவியின் மேல் மணிக்கு 1670 கி.மீ வேகத்தில்  சுற்றுவதால்,அது நின்றதும் அனைத்தும் பயங்கரமாய் வளிமண்டலத்தில் தூக்கி அடிக்கப்பட்டு அங்கே   மலை த் துகள்கள், நீர்த்துகள் களுடன்    சுற்றுவோம்.புவியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், ஆழம்மான் பிடிப்பில் உள்ள மரங்கள், கட்டிடங்கள், பாறைகள், உயிரினங்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் தூக்கி விசிறி   எறியப்படும்.  லூயிஸ்ட் புளூம் பீல்டி (Louis Bloomfield) என்ற வர்ஜீனியாவின் இயற்பியலாளரின்  கருத்துப்படி இந்த பூமியல் வாழும் அனைத்து மனிதர்களும் அப்படியே அமுங்கி, மூச்சுத் திணறி இறந்து போவார்கள், வறுத்து எடுக்கப்படலாம்/உறைந்து போகலாமாம்.  அப்படி ஏதும் பயப்படாதீங்க.. இதெல்லாம் நம்ம காலத்திலே நிச்சயமா நடக்காதுங்கோ…

கட்டுரையாளர் : 

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (Saaithaadamma Sainthadu) - பேரா. சோ. மோகனா (Prof.S.Mohana) - Solar System - https://bookday.in/

– பேரா. சோ. மோகனா

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *