Sakku malai short story by Era. Kalaiyarasi இரா கலையரசியின் சாக்குமாலை குறுங்கதை

சாக்குமாலை குறுங்கதை – இரா. கலையரசி



சாக்குகளை போர்த்திய கூரைக்கு வெயில் ஒத்தடம் கொடுத்தபடி இருந்தது.

வெள்ளை மதிலில் பூத்த கரும்புள்ளிகளாய் அங்கொன்றும், இங்கொன்றுமாக, கருப்பு முடிகள் இருந்தன.

மெலிந்த தேகத்தில் தங்கிய உயிருக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

செருப்புகள் இரண்டு,தைத்துக் கொடுக்க வேண்டி காத்திருப்பில் இருந்தன.

“பெருசு” என்று அறியப்படும் கிழவர் பெரியசாமி, செருப்பு தைப்பவர்.

வரும் சொற்ப ரூபாயில் ஏதாவது சாப்பிட்டு்க் கொண்டு சாலையில் படுத்துக் கொள்வார்.

விரல்கள் ஜதி மாறாமல், தாளம் தட்டியபடி இருந்தன. ஊசியில் நுழைந்த நூல் அழகாக தையலை பார்த்துக் கொண்டன.

கண்கள் அயர்ந்து, இருட்டிக் கொண்டு வர, சரிந்த சாக்கு கூரை, பெரியசாமி உடலுக்கு பூமாலை இட்டது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *