நீயே நேசி….!!!
உன்னை நம்பித்தான்
கண்களை மூடிக்கொண்டு
காற்றில் நடந்தேன்
அடுத்த கட்டம்
பற்றி நீ பேசியவைகள்
காதுகளில்
இதமாக இன்னமும்.
அவ்வளவு தான்
நான் இப்போதும் பார்க்கிறேன்
என் கண்களால்
ஆனாலும்
என் விழியில் பார்வையில்லை
அடுத்த கட்டமும் இல்லை
ஆனாலும்
உன்மேல் கோபப்படவில்லை
உன்னை
இன்னமும் நேசிக்கிறேன்
உன்னை நம்பியதும்
நேசித்ததும்
நான் தானே
நீ சொல்லியவைகளை நீயே
மறந்து போனாய்
நான் இன்னுமும்
மந்திரமாய் தான்
கடைப்பிடிக்கிறேன்
உனக்குப் பதிலாய்
உன் நினைவுகளோடு……!!!!!!!
கவிஞர் ச.சக்தி
பண்ருட்டி