குப்பை மேட்டில் தங்கம்
தரம் பிரித்த பசுமை
இயற்கை உரம்.
தலை கீழாக தொங்கியது
மட்டையில்உரசி காய்ந்த
தென்னைஒலை.
மலைக்க வைக்கும்
மாறுவேடம்
செய்தி.
இலையை மடிக்கும் வினாடி
ப்ரியங்களின் நீள்சரடு
விருந்தோம்பல்.
இருக்கும் இடத்தில்
மதிப்பில்லை
அந்நிய நாடு.
சூடு ஏறிய உடலில்
நீா்த் துளி நடனம்
தோசை கல்.
சக்திபானுஜெயராஜன்.