Subscribe

Thamizhbooks ad

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 3 – என்.குணசேகரன்



மார்க்சியம் “அந்நிய” தத்துவமா?
என்.குணசேகரன் 

சிலர் சில சிந்தனைகளை குறிப்பிட்டு “இது வேற்று நாட்டு சிந்தனை,.. இது வேற்று நாட்டுத் தத்துவம்”, “அவை எதுவும் நம் நாட்டுக்கு ஒத்து வராது” என்று பேசுவார்கள். ஏதோ எல்லா நாட்டு தத்துவங்களையும் அறிந்து ஆராய்ந்தவர்கள் போன்று அவர்கள் பேசுவதை உண்மை என்று நம்புகிற அப்பாவிகளும் இருக்கின்றனர்.

இந்த கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத, அறிவியலற்ற கருத்துக்கள். சில தத்துவங்கள் மீது வெறுப்பு உணர்வுகளை தூண்டி, அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சியாகவே இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஒரு தேசத்திற்குள் நிலவும் பிற்போக்கு சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து தேசிய வெறியை தூண்டுகிற முயற்சியாகவும் இது உள்ளது.

இந்த வகையை சார்ந்ததுதான் தமிழக ஆளுநர் உதிர்த்த சில கருத்துக்கள். மார்க்சியத்தை ஐரோப்பிய தத்துவம் என்று குறிப்பிட்ட அவர், மார்க்சியத்தை பின்பற்றுவது “நமது மேற்கத்திய அடிமை நிலையின் வெளிப்பாடு” என்று சாடினார். கூடவே, “இந்திய பேராசிரியர்கள் ஐரோப்பிய தத்துவத்தை உயர்ந்ததாக தூக்கிப் பிடிப்பது வேதனைக்குரியது” என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்!

வரலாற்று அறியாமை

மனிதர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், பொருளாதார தேவைகளுக்கும் உதவுகிற சிந்தனைகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை தங்களுக்கு உரியதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, அறிவியல், உற்பத்தி, தொழில்நுட்ப துறைகளில் தேச வேறுபாடுகளின்றி பலவற்றை ஏற்றுக் கொண்டும், தழுவிக் கொண்டும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தொன்மைக்காலங்கள் தொட்டு, மக்கள் இடம் பெயர்வது இந்த பரிமாற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணம். தாங்கள் வாழும் பகுதியில் நெருக்கடி ஏற்படுகிறபோது, வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு தங்களது கால்நடைகளுடன், வண்டிகளுடன் மக்கள் குடியேறி வந்துள்ளனர்.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் விவசாயத்திற்கு வாய்ப்பு இருக்கிற இடங்களுக்கு மக்கள் சென்றுள்ளனர். அப்படி செல்கிறபோது, உற்பத்திக் கருவிகள் உள்ளிட்ட தங்களது நாகரிகங்களின் சில அம்சங்களை கூடவே எடுத்துச் சென்று, ஏற்கனவே அங்கிருந்த மக்களுடன் அவற்றை இணைத்து வாழ்ந்தனர். எனவே நாகரீகங்கள் பரவலாகுவது மனித வரலாற்றில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இதை காணத் தவறுவது, வரலாற்று அறியாமையே.

பல்லாயிரம் ஆண்டுக்காலமாக உலகின் பல பகுதிகளில் இருந்து பல சிந்தனைகளையும் வாழ்க்கை நடைமுறைகளையும் அரவணைத்துக் கொண்டு வளர்ந்த வரலாறு இந்தியாவிற்கு உண்டு. இதுபோன்றே, இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் மார்க்சியமும் இந்தியாவில் பரவத் தொடங்கியது.

இந்தியாவில் மார்க்சியம்

மார்க்சியம் இந்தியாவில் பரவத் தொடங்கிய போது, அதனைப் பயின்ற மார்க்சிஸ்ட்கள் மார்க்ஸ் பிறந்த ஜெர்மனியைப் பற்றி அல்லது ஐரோப்பாவை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. அவர்கள் இந்திய சிக்கல்களைப் பற்றி சிந்தித்தனர். விவசாயிகளின் வறுமை நிறைந்த கிராமப்புற வாழ்க்கையையும், நகர்ப்புற தொழிலாளர்களின் வேதனை வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்தனர். இந்தக் கொடுமைகளை அகற்ற, காலனிய சுரண்டல் கொள்கையை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமென்று கருதினர்.

இந்த நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ள மார்க்சியம் அவர்களுக்கு ஒளிவிளக்காக பயன்பட்டது. வர்க்க அடிப்படையில் சமூகத்தை பகுப்பாய்வு செய்யும் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அவர்களுக்கு வழிகாட்டியது.

இவ்வாறு, இந்திய நாட்டின் நிலைமைகளை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்ததால்தான் அன்றைய கம்யூனிஸ்டுகள் ஆங்கிலேய ஆட்சியிடம் அரைகுறை உரிமைகளுக்காகப் போராடுவது பலன் தராது என்றும் பரிபூரண சுதந்திரம், முழு விடுதலை வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். பின்னாளில் அந்த முழக்கம் மக்களின் முழக்கமாக மாறியது. துவக்கத்தில் இதனை எதிர்த்த காங்கிரசும் அதனை ஏற்றுக்கொண்டது.

இந்த முழக்கத்தை ஒரு பெரும் அச்சுறுத்தலாக அன்றைய பிரிட்டிஷ் அரசு கண்டது. அதனால் கம்யூனிஸ்டுகளின் மீது ஏராளமான சதி வழக்குகளைப் போட்டு கம்யூனிஸ்ட்களை வேட்டையாடினர். அன்றைக்கு மார்க்சியம் அந்நிய தத்துவம் என்று நிராகரிக்கப்பட்டிருந்தால், இந்திய விடுதலை இயக்கத்திற்கு சரியான இலட்சியப் பார்வை கிட்டியிருக்காது.

இதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்ற “அந்நிய தத்துவத்தை” வெறுத்த இயக்கங்கள், காலனிய சுரண்டலால் துன்ப துயரங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை; மாறாக, ஆங்கிலேய ஆட்சி நீடிக்கட்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் போராட்டத்திலிருந்து அவர்கள் ஒதுங்கி இருந்தனர்.

மார்க்சிய சிந்தனை ஜெர்மனியில் தோன்றியிருக்கலாம்; இங்கிலாந்தில் வளர்ச்சி பெற்றிருக்கலாம்; பிரான்சில் ஏற்றம் கண்டிருக்கலாம். ஆனால், எங்கு சென்றாலும் ஒவ்வொரு தேசத்தின் தன்மைக்கு ஏற்ப மக்களின் விடுதலைக்கு சரியான தீர்வுகளை கண்டறிய மார்க்சியம் உதவுகிறது.

மார்க்சியத்தின் தனிச்சிறப்பு

மார்க்சியத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், எந்த நாட்டில் மார்க்சிய இயக்கம் தோன்றினாலும், அது உடனடியாக வர்க்க சார்பு பெற்றுவிடுகிறது.

அந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என்ற இரு பிரிவுகளுக்குள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சார்பாக இயக்கம் காணுகிற, போராடுகிற தத்துவமாக மார்க்சியம் பரிணமிக்கிறது. ஆளுகிற வர்க்க நிலைமைகளையும், அடக்கி ஒடுக்கப்படுகிற வர்க்கங்களின் நிலைமைகளையும் கூர்ந்து ஆராய்ந்து, போராட்ட வியூகத்தை மார்க்சியம் உருவாக்குகிறது.

இந்த சார்புத்தன்மையே மார்க்சியத்தின் தனிச்சிறப்பு. உழைக்கும் வர்க்கத்தோடு சார்ந்து, அந்த வர்க்கத்துக்கு ஆதரவாக நிற்கிற பண்பு கொண்டது மார்க்சியம். நடுநிலை என பாசாங்கு செய்யும் தத்துவமல்ல, மார்க்சியம். இதனாலேயே மார்க்சியம் தொடர் எதிர்ப்புக்கும், அவதூறுகளுக்கும் ஆளாகிறது. தமிழக ஆளுநர் உள்ளிட்ட மார்க்சிய எதிர்ப்பாளர்களின் ஆவேசத்திற்கு அடிப்படை காரணம், மார்க்சியம் நடுநிலை வேடம் தரித்து, ஏமாற்று வேலையை செய்யாமல், பாட்டாளி வர்க்கங்களோடு உறுதியாக அது கைகோர்த்து நிற்பதுதான்.

அன்றைய சோவியத் யூனியனில் எழுந்த மார்க்சிய சிந்தனைகள், ஆப்பிரிக்க மார்க்சியம், ஆசிய மார்க்சியம் என நிலப்பரப்பை மையப்படுத்தி மார்க்சிய விவாதங்கள் நடந்துள்ளன. தற்போதும் நடந்து வருகின்றன. மார்க்சியத்தை திரிக்கும் தவறான கருத்துக்களுக்கு எதிரான கருத்துப் போராட்டமும் நடக்கின்றன. இவையெல்லாம் மார்க்சியத்திற்கு வளம் சேர்த்து வந்துள்ளன.

ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைகளோடு நடப்பது வர்க்க விடுதலை. அது, மார்க்சியத்தின் உலக நிகழ்ச்சி நிரலுடன் இணைந்தது. மானுட வரலாற்றில் தற்போது ஒரு வரலாற்றுக் கடமையை மானுடம் சுமந்து கொண்டு பயணிக்கிறது. முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவதுதான், அந்தக் கடமை.

இதற்கு உழைக்கும் வர்க்கங்கள் தேச அளவில் அரசியல் புரிதலோடு ஒன்றுபட வேண்டும். இதற்கான வழிகாட்டியாக விளங்குவது மார்க்சியம். அது அந்நிய தத்துவமா, ஒரு தேச தத்துவமா என்று பேசுவது தேவையற்றது.

(தொடரும்)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

3 COMMENTS

  1. ஒரு தேசத்தின் தத்துவமாகக்கூட ரம்மி ரவி உள்ளிட்டு சங்கிங்க ஏற்றதாக தெரியவில்லை. இந்திய தேசத்தை சிதைத்த தத்துவம் என்று பேசுவதன் பொருள், அது எந்த தேசத்திற்கும் பொருந்தாத தத்துவம் என்கிற உள்ளடக்கம் அதில் ஒளிந்து கிடக்கிறதே. ரம்மி ரவி உள்ளிட்டோரின் உளறல் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். அருமையான அடித்தளம் அமைத்து கட்டுரை செல்கிறது.

  2. மார்க்சியத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமானது மார்க்சியத்தின் தாக்கம் வலுவடைந்து உள்ளதின் பிரதிபலிப்பு

  3. மார்க்சியத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாவது மார்க்சியத்தின் தாக்கம் வலுவடைந்து உள்ளதின் பிரதிபலிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here