Subscribe

Thamizhbooks ad

தொடர் 30: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

                        கால நிலை மாற்றமும், கடும் காய்ச்சலும்!

சமீபத்தில், ஒரு செய்தி தாளில்,  சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் பற்றி படித்த போது, எனது மனம் வருந்தியது. அறிவியல் மருத்துவ வளர்ச்சியில் நம் மனித இனம் சாதனைகள் புரிந்து வரும் நவீன காலத்தில், சவால் ஆக விளங்கிடும் இந்த நோய் கொசு என்ற கடத்தி (VECTOR )மூலம் பரவி உலகினை துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகிறது. கடும் காய்ச்சல் என்ற டெங்கு நவம்பர் 2022 ஆம் ஆண்டு நம் இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களில் பரவி விட்ட தகவல் அதிர்ச்சி ஆகும். இந்த நூற்றாண்டு துவக்கத்தில், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் இருந்த நோய் பரவல்,100 நபர்களுக்குள் பாதிப்பு ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா, கேரளா பகுதியில் அதிக மக்களை தாக்கிய நிலை வருந்ததக்கது. நாகலாந்து, லட்சதீவு உள்பட, ஒன்றிய நிர்வாக பகுதிகளில் 2012-15 ஆம் ஆண்டுகளில் டெங்கு தொடர்ந்து பரவியது. இந்திய அரசின் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் “கடத்தி மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாடு தேசிய மையம் (NATIONAL CENTER FOR VECTOR BORN DISEASE CONTROL )அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30, ஆம் நாள் வரை உள்ள காலத்தில் 63280 நோயாளிகள் இருப்பதும், மேலும் அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 20000 நபர்கள் தொடர்ந்து பாதித்த நிலை அறியப்பட்டது.

 சரி!இந்த டெங்கு கடும் காய்ச்சல் பரவ என்ன காரணம்!?

பல்வேறு சூழல் காரணிகள், குறிப்பாக மழை, காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலை போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கால நிலை மாற்றம் மேலும் இதன் தீவிர பரவலுக்கு உதவி செய்கிறது. இரண்டு கொசு சிற்றினம் (Aedes aegypti), (Aedes albopictus) மனிதர்களை தாக்கி, கடிப்பது டெங்கு காய்ச்சல் பரவுதலுக்கு முக்கிய காரணம் ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் 5,6 மாதங்கள் காய்ச்சல் எளிதில் பரவும் வாய்ப்பு கொசுக்கள் மூலம் ஏற்படுத்துகிறது.

1951-60 மற்றும் 2012-21 ஆம் ஆண்டுகளில் இந்த நோய் பரவல் ஒப்பு நோக்கினால் 1.6% சதவீதம் நோய்க் காய்ச்சல் சமீபத்தில் அதிகம் ஆகிவிட்டது. இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் (ICMR )வெளியிட்ட பிப்ரவரி 2022 அறிக்கையின் படி, கால நிலை மாற்றத்துக்கு ஏற்றார் போல் டெங்கு நோய் கடத்தி கொசுக்களின் சிற்றினங்கள் தங்கள் பரவலை வகைப்படுத்தி உள்ளன. A. aegypti என்ற சிற்றினம், தென் தீபகற்பம், கிழக்கு கடற்கரை, வட சமவெளி, வட கிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது. A. albopictus என்ற இனம் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாலய மலை அடிவாரம் பகுதியில் பரவியுள்ளது. மேலும் aegypti இனம் வெப்ப, வறண்ட பகுதிகளிலும் (தார் பாலை வனம் )albopictus இனம் அதிக குளிர் உள்ள மேல் இமாலய பகுதிகளில் பருவ கால மாற்றம் காரணமாக விரைவில் பரவ வாய்ப்புள்ளது.

இந்தியாவில், எட்டு மாநிலங்களில் டெங்கு பரவல் தீவிரமாக இருந்து வந்தது. குறிப்பாக, ஒடிசா, பீகார், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காய்ச்சல் பரவ பருவ கால மாற்றம் காரணமாக இருந்தது. காஷ்மிர் சூழல் துவக்கத்தில், கடத்தி கொசுக்கள் உற்பத்தி ஆக ஏற்ற வெப்ப நிலை கொண்டிருக்கவில்லை.2006 ஆம் ஆண்டு வரை எவ்வித தொற்று காய்ச்சல் பிரச்சனையும் வரவில்லை.

2010 ஆம் ஆண்டில் தான்  தொற்று தொடங்கியது. உள்ளூர் கொசுக்கள் அதிகரித்து விட்டது.2017 ஆம் ஆண்டு 488 நோயாளிகள் பதிவாகி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் ஆரம்பித்து, நவம்பர் வரை,  காய்ச்சல் நோய் பரவியது. 30°c-  32°c வரை வெப்ப நிலையில் அக்டோபர் மாதம் அதிக நோய் பரவிய காலமாகும். பீகார் மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டு 510, 2013-1246, 2019 ஆம் ஆண்டு 6712 நோயாளிகள் பதிவாகினர். குறிப்பாக பாட்னா, பெகுசராய், முங்கா மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானது. புவி வெப்பம் உயர்வு, பருவ கால மாற்றம்  ஆகிய காரணிகள் நகரங்களில், காய்ச்சல் பரவலால்  தீவிரமாக ஆகிவிட்டது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் 7, ம் நாள் பதிவு தெரிவித்துள்ளது போல், மொத்த 10933 நோயாளிகள் பதிவில் 8329 நபர்கள் பாட்னா பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ஒடிசாவில் 2010 ஆம் ஆண்டு 30 மாவட்டங்களில் 8 மட்டும் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு 25 மாவட்டங்கள் மற்றும்  கடற்கரை பகுதிகளில் அதிகம் நோய் பரவலாகிவிட்டது.

2021ஆம் ஆண்டு ஜிக்கா வைரஸ் நோய், கொசுக்கள் மூலம் பரவியது. முன்னரே 2017-18 ஆம் ஆண்டு நம் நாட்டில் பரவினாலும், கால நிலை மாற்ற காரணத்தினால் கடத்தி கொசுக்கள் (aedes)மட்டுமே டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா, மஞ்சள் இரத்தக் காய்ச்சல் ஆகியவற்றிற்கு காரணம் ஆகும். A. aegypti கொசுக்கள் சஹாரன் ஆப்பிரிக்காவை  வாழிடமாகக்  கொண்டு மரப்பொந்துகளிலும்,  நீர் ஓடைகளிலும்,  வசித்து குரங்கினங்களை  கடித்து வந்தன. பின்னர் வறட்சியால் ஆப்பிரிக்காவை விட்டு வெளியே மனித வாழிடங்கள் நாடி சென்றுவிட்டன.

1648 ஆம் ஆண்டில் கொசுக்கடி மஞ்சள் காய்ச்சல், மத்திய அமெரிக்க பகுதியில் பரவியது.aedes albopictus கொசுக்கள் தென்கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்டு முதலில் வன விலங்குகளை கடித்து பின்னர் பசிபிக் கடல் தீவு, ஐரோப்பா நாடுகளில் 1960 ஆம் ஆண்டு முதல் பரவியது.

கொசுக்கள் வசிக்க ஏற்ற பகுதியாக 1.5% அதிகரித்து 1950 முதல் 2000 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டினை மாற்றிவிட்டோம் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. இது 2050 ஆம் ஆண்டு 32-44%ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. மேலும் பசுமை குடில் வாயுக்கள், மனித இனத்தொகை அதிகரிப்பு, நகரங்களில் இந்த பிரச்சினை உருவாக காரணம் ஆகும். கொசுக்கள் தங்கள் இனப்பெருக்க நடத்தை செயல் ஆகியவற்றையும் கால நிலை மாறுதலுக்கு ஏற்ற மாதிரி ஆக்கிக்கொண்ட நிலை சற்று அச்சம் கொள்ள வைக்கிறது. Aedes கொசுக்கள் நன்னீரில் இனப்பெருக்கம் செய்வது மாறி மாசுபட்ட நீரிலும் தம் எண்ணிக்கையை பெருக்கும் போது அறிவியல் ஆய்வு சவால்கள் தொடர்ந்து நடைபெற தேவை உள்ளது.

       aegypti சிற்றின கொசு, பகலில் மதியம் வரை மட்டும் மனிதர்களை கடிக்கின்றன. ஆனால் செயற்கை ஒளியில் அவை, குறிப்பாக, பெண் கொசுக்கள் மாலை, இரவு நேரங்களில் கடிக்கின்றன. அமெரிக்கா நாட்டில் உள்ள நோட்றே டேம் பல்கலைக்கழக ஆய்வாளர் சாமுவேல் ரன்ட் இதனை, தம்மை கொசுக்கள் கட்டுப்பாடு சூழலில் கடிக்க செய்து நிரூபித்தார். மேலும் இவ்வகை  வெப்பம் உயர்வு தாங்கும் கொசுக்கள் எண்ணிக்கை 1950-54ஆண்டுகளுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு 15%அதிகம் ஆகிவிட்டது. albopitcus சிற்றினம் வரையறுக்கபட்ட வெப்பம் தாங்கும் 7% சதவீதம் எண்ணிக்கை உயர்வு அடைந்து விட்டது. பெரும்பாலும் கொசுக்களை கட்டுப்பாடு செய்ய நம் சமூக, பொருளாதார சூழல், நகர, கூட்டம் நெரிசல், வெப்ப உயர்வு, தவிர்த்தல், தூய்மை குடிநீர்,  காற்றோட்ட சன்னல்கள் அமைத்தல்,திட கழிவு மேலாண்மை முறைப்படுத்தல் போன்றவை அவசியம் ஆகும், என ஐக்கிய அமெரிக்கா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உயிரியல் துறை பேராசிரியர் எரின் மார்டிகய் கூறுகிறார்.

கால நிலை மாற்றம்,நோய் உருவாக்க வைரஸ் கடத்தி கொசுக்கள், வெப்ப மண்டல நாடுகளில் பெருகி வரும் நிலையில் மக்கள், அரசு இருவரும்  இணைந்து அவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தூய்மை பேணுதல், நீர் பராமரிப்பு, நோய் தவிர்த்தல் போன்ற பல்வேறு பகுதி செயல்கள் செவ்வனே தொடர்ந்து ஈடுபட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைக்க இயலும்!சிந்தித்து பார்ப்போமா!!??

Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here