Subscribe

Thamizhbooks ad

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?

உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு, வீடு, புதிய வசதிகள் பெருக வைத்துள்ளது. சரி!ஆனால் நம் உணவீட்ட முறைகளில் கூட பல மாறுதல்கள்,உருவாகி அதன் தொடர்ச்சியாக, நாம் வெவ்வேறு நோய்கள், ஆரோக்கிய குறைபாடுகள், போன்ற பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. சமீபத்திய இந்தியாவின் ஆரோக்கிய நிலை தரவுகள் (DATA ), நம் நாட்டின் ஆண்கள் , பெண்கள் ஆகியோரின் ஊட்ட சத்து நலம்,பல குறைகள் கொண்டு அமைந்துள்ள தகவல்களை தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண், பெண் இன தொகை குழுக்கள் 4% பருமன் உடல் பெற்ற (OBESITY )நிலை பற்றி தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பு தகவல் கூறும் நிலை அதிர்ச்சி அளிப்பதாகும். இதே போல இரத்த சோகை நோய், ஆண், பெண், குழந்தை ஆகியோரிடையே 2-9% அளவுக்கு கூடுதல் ஆக பதிவு செய்யப் பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின், முகமை, பன்னாட்டு மக்கள் இன தொகை கல்வி நிறுவனம் (மும்பை) தேசிய, குடும்ப ஆரோக்கியம் கணக்கெடுப்பு (NFHS )செயல் பாடுகள் மேற்கொண்டும் , பொது மக்களின், இனப்பெருக்க, ஊட்ட சத்து ஆரோக்கிய நிலை பற்றிய தகவல் சேகரிப்பு பணிகளை செய்யும் பிரதிநிதித்துவ நிறுவனம் ஆகும்.2019-21 ஆம் ஆண்டுகளில் நடத்திய கணக்கெடுப்புபடி, நாட்டில் உள்ள 24% பெண்கள் அதிக எடை உடையவர்கள் ஆக உள்ளனர்.2015-16 ஆண்டு எடுத்த ஆய்வின் படி  இதே நிலையில் உள்ள பெண்களை விட 20.5% கூடுதல் ஆகும்.

நகரங்களில் உள்ள பெண்கள், (33.2%) பருமன் நிலை, கிராம மகளிர் (19.7%)நிலை விட அதிகமாக உள்ளதாக தெரிகிறது. ஆண்களிலும் (22.9%) இதே உயர்வு, முந்தைய கணக்கெடுப்பினை விட (18.9%) பதிவு உள்ளது. நகர ஆண்கள் இந்த நிலையில், முந்தியுள்ள தகவல், மிகுந்த வியப்பாக இருப்பினும், கவலை தரக்கூடியது ஆகும்.மாநிலங்களில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஓரளவு திருப்தி அளிக்கும் தரவுகள் கொடுத்தாலும் குஜராத்த்தில், ஆண்கள் பருமன் நிலை அதிகம் இருப்பது சமீபத்தில் முக்கிய தகவல் ஆகும். ஹரியானா, கர்நாடகா, மணிப்பூர், ஒடிசா போன்ற மாநிலங்களில் மிக அதிகம் ,11,12%அளவுக்கு உடல் பருமன் நிலை உயர்வு காணப்படும் நிலையும், ஆந்திரம், அசாம், சதீஸ்கர் மாநிலங்களில் ஓரளவு 3-7% உயர்வு ஆண், பெண் பாலினங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது மனித உடல் பருமன் ஆகும் போது அவர்களின் இயல்பான தோற்றம் மாறுவது, தொடர்ந்து பல நோய்கள்,வருவது தவிர்க்க இயலாது.

எனினும் மரபு ரீதியான காரணம் ஒரு புறம் இருப்பினும், உணவு பழக்கம், சூழல்  போன்றவை உடல் பருமனுக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.அதிக கொழுப்பு, இனிப்பு கலந்த உணவுகள்  பல்கி பெருகி வந்து விட்ட நிலையில், குழந்தைகள், இளைஞர்கள் நேரம் காலம், இல்லாமலும் உணவு முறை பற்றிய அலட்சியம்

கொண்டு, கொறித்தல் உணவுகள் மீது மோகம் கொண்டு உண்பது, நகர மயமாக்கம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் விளைவுகள் ஆகும். இந்நிலையில் பருமன் ஆகும், ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் உணவில் ஊட்டச்சத்து பற்றிய சிந்தனை , திட்டமிடுதல் தவிர்த்து, ருசி, புதுமை, அந்நிய மேற்கத்திய சாயல், நவீன பதப்படுத்துதல், நேர சிக்கனம் ஆகிய அவசர வாழ்க்கை காரணிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த சோகை நோய், இரும்பு சத்து குறைபாடு, B12 வைட்டமின் குறைவு, போலியட், இரத்த அணுக்கள் சிதைவு, போன்றவற்றால் வரும் நோய் ஆகும். நம் நாட்டில் ௬ மாதம் முதல் 5 வயது குழந்தை வரை 2015-16 கணக்கெடுப்புப் படி 58%,2020-21 ஆண்டு எடுத்த ஆய்வுப்படி 67%இரத்த சோகை நோய் கொண்டு உள்ளதாக தெரிகிறது. இதில், கிராமத்து நிலையில் 68% என்றும், நகரத்தில் 64.2% என்றும் பதிவு உள்ளது. இதே போல தாய்மை பேறு பெற்ற இளம் கிராம பெண்களின் நிலையும் மோசம் ஆகும். அவர்கள் இரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர். ஆண்களில் அவ்வாறு அதிகம் இல்லை. பெண்கள் 2020-21 கணக்கெடுப்புப் படி ௧௯ வயதிற்குப்பட்டவர்கள்( 59%)மீது இந்த குறைபாடு அதிகம் உள்ளது.அசாம், சதீஸ்கர் மாநிலங்களில் இப்பிரச்சினை உயர்வு கொண்டு இருக்கிறது.

மேலும் பீகார், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீவிரமாக, இரத்த சோகை பிரச்சனை இருப்பது கவலை அளிக்கிறது. தமிழ் நாடு மாநிலத்தில் பள்ளி குழந்தைகள் சத்துணவு, காலை உணவு திட்டங்கள், மகளிர், பருவமடைந்த பள்ளி பெண் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள், கர்ப்ப கால ஆரோக்கிய பராமரிப்பு போன்றவை சற்று ஆறுதல் தரக்கூடிய தகவல் ஆகும்.ஆனால் ஹரியானா மாநிலத்தில் குறைவு என்றும் மகாராஷ்ட்ரா மண்ணில், பேறு கால மகளிர் மட்டும் அதிகம் இரத்த சோகை குறைபாடு கொண்டிருப்பது தெளிவு ஆகிறது.மேகலாயா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இப்பிரச்சினை மிகவும் குறைவு என்பது மகிழ்ச்சி ஆகும்.

நம் நாட்டில் உள்ள மற்றொரு சுகாதார, ஆரோக்கிய பிரச்சனை, “அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு “ஆகும். சிசேரியன் என்ற அறுவை மூலம் குழந்தை பிறக்க வைப்பது அசாதாரண சூழலில் மட்டுமே கடைபிடிக்க வேண்டிய நடை முறை, மருத்துவ நிபுணர்களால் மிக பெரும்பான்மையான ஊர்களில், இயல்பாக மகப்பேறு மகளிர் மருத்துவ செயல் முறைகளில் ஒன்றாக மேற்கொள்ளப்படுவது பரிதாப நிலை ஆகும். நம் நாட்டில் 2020-21 ஆம் ஆண்டுகளில் தெலுங்கனா 55% மகப்பேறு, சீசரியன் முறையில் மட்டும் நடைபெற்று வந்த தகவல் அதிர்ச்சி!பொதுவாக தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் ஆகும். ஆனால் கொரோனா காலத்தில்,2019-21 ஆண்டுகளில் 69% அங்கு குறைந்து பொது அரசு மருத்துவ மனைக்கு அதிகம் மக்கள் சென்ற( 22%) நிலை வியப்பு அளிக்கிறது.

மூட நம்பிக்கை, மத, ஆன்மீக ரீதியான எதிர்பார்ப்பும் மக்கள் இந்த அறுவை சிகிச்சை மகவு பிறப்புக்கு ஆதரவு தர ஒரு முக்கிய காரணம் ஆகும். அருணாச்சல பிரதேஷ், சதீஷ் கர், அசாம் ஆந்திரா, கோவா போன்ற மாநிலங்களில் அதிகமாக இந்த நடை முறைகள் உள்ளது. கேரளா மாநிலம் சற்று குறைவு எண்ணிக்கையில் இருப்பது திருப்தியே. நாகலாந்து, மிசோரம், மாநிலங்களில் சீசரியன் அறுவை சிகிச்சை பிரச்சனைகள் மிக, மிக குறைவு ஆகும்.

பருமன், இரத்த சோகை என்ற இரு குறைபாடுகள் மற்றும் சீசரியன் குழந்தை பிறப்பு போன்றவை பற்றிய தேசிய கணக்கெடுப்பு விபரங்கள், இந்தியாவில் பல மாநிலங்கள் ஆரோக்கியம், சுகாதார நடைமுறைகள், ஆகியவற்றினை சரியான திசையில் கொண்டு செல்ல வில்லையோ என்ற ஐயம் நிலவுகிறது. எனினும் கல்வி கற்றவர்கள், தம் உணவு வழக்கம் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை, நடுத்தர, ஏழை மக்கள், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.குழந்தை பிறப்பு பற்றிய செயல்பாடுகள் பற்றி அரசு, பொது மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டும் என்றும் தோன்றுகிறது. வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஆரோக்கியம், சுகாதார சவால்கள் பற்றி அந்த குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ற படி செயல் மேற்கொள்வது நன்று.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here