பருவ கால மாற்றம் -எதிர் நோக்கும்,புதிய அதிர்ச்சி விளைவுகள்!
பருவ காலமாற்றத்தின் காரணமாக, உலகெங்கும் பல்வேறு அதிர்ச்சி தரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பல நாடுகளில் மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் பிரச்சனை அதிகம் சந்திக்கும் நிலையில், வெப்ப
நிலை உயர்வு, மிக மோசமாக மக்கள் வாழ்க்கையினை, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, பொருளாதார இழப்பு ஆகியவை மூலம் தாக்கி வருவது நாம் அறிந்து வரும் இந்த நிலையில் மேலும் சில செய்திகள் அறிவியல் பூர்வ ஆய்வு முடிவுகள் தருவது மிக்க அச்சத்தினை தருகிறது.
புவி வெப்ப உயர்வு,2°C செல்சியஸ் ஆக நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த நூற்றாண்டில் ஒரு பில்லியன் மனிதர்கள் சூழல் பேரிடர்
காரணமாக இறக்கும் நிலை வரபோகிறது என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை செய்கின்றன. உலகில் கார்பன் அளவு மிக வேகமாக, பல்வேறு நாடுகளில், ஆற்றல்
தொடர்பாக, படிவ எரிபொருட்கள் வழி அதிகம் ஆகிவரும் இந்த நிலையில் எதிர் கால மனித ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிட்டது என்பது உண்மை!பணக்கார
மனிதர்கள், தாங்கள் அறியாமல் உலகின் ஏழை மக்கள் இறக்க காரணம் ஆகும் நிலை விரைவில் வர உள்ளது.
ஆற்றல் உற்பத்தி, பயன்பாடு, சிக்கனம், சேமிப்பு, மாற்று முறை ஆற்றல் பயன்படுத்த முயற்சி போன்றவை பற்றிய மிகக் கடுமையான கொள்கை முடிவுகளை அனைத்து நாடுகளின் அரசுகள் எடுத்து அதனை, முறையாக, சரியான வழிகாட்டுதலுடன் பின்பற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.ஆம்!
அதிக கார்பன் உமிழ்வு (CARBON EMISSIONS ) நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி, உயிரினங்கள் இறக்கும் நிலை வரப் போவதை உலக விஞ்ஞானிகள்
அறிந்து கூறுவதை நாம் உற்று நோக்க வேண்டும்.
வெஸ்டன் ஒண்டரியோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசுவா பெயர்ஸ் மற்றும் ஆஸ்திரியா நாட்டு கிரேஸ் பல்கலைக்கழகம் விஞ்ஞானி ஆகிய இருவரும் சூழல் மாற்றம் தொடர்பான 180 ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளியிடப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து கூறுகின்றனர் வெவ்வேறு பணக்கார உலக நாடுகளில் உள்ள, அதிக லாப நோக்கம் கொண்ட, மிக பெரும் எண்ணெய், எரி வாயு நிறுவனங்கள் மட்டுமே
புவி வெப்ப உயர்வுக்கு காரணம். கார்பன் உமிழ்வு 40% சதவீதம் அளவிற்கு, நேரடியாக அல்லது மறைமுகமாக வெளியிடும் நிலையில் இருப்பது அதிர்ச்சி ஆகும். இதனால் பல வளருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளின் மக்கள் இறப்பு தவிர்க்க இயலவில்லை.குறிப்பாக 1000 டன் படிவ எரிபொருள் எரிக்கையில், எதிர் கால மனிதன், இளம் வயதில் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆக உள்ளதாக
தெரிகிறது.எனவே அதிக கார்பன் எரி பொருட்களான நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை பயன்பாடு முற்றிலும் அகற்றப் பட வேண்டும் என்றும்
ஹைட்ரஜன், மின்சாரம் போன்றவற்றின் மூலம் ஆற்றல் உருவாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் தொழிற்சாலைகள், விவசாயம், போக்குவரத்து, வீடுகளில் பயன்படும் ஆற்றல் திறன் மேம்பாட்டில் அரசு துறைகளிலும், உண்மையான கவனம், அக்கறை கொண்டு செயல்படவும் விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். கார்பன் கழிவு மேலாண்மை, இயற்கையான கரியமில வாயு சேகரித்து, சேமித்தல், அதிக கார்பன் உமிழுவுக்கான வரிகள் திட்டமிடுதல் ஆகிய நடை முறைகள் அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
தீவிரமான பருவ கால மாற்றத் தின் மற்றொரு விளைவு சில நாடுகளில் “குழந்தை திருமண நிகழ்வுகள் “அதிகம் ஆகிவிட்டது என்ற செய்தி ஆகும். கொஞ்சம் குழப்பம் ஆக இருக்கிறது அல்லவா!!? இயற்கை பேரிடர்கள், வறட்சி, வெள்ளம், போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து அதிகம் ஆகி வரும் போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் பால் வேற்றுமை சார்ந்த, சமமற்ற நிலை, ஏழ்மை, பாலின வன்முறை, ஆகிய
செயல்கள் நிகழ்வதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நாட்டின் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நடுத்தர, குறைந்த வருவாய் பெறும் அதிக மக்கள் உள்ள நாடுகளில்
இந்த பிரச்சினை உள்ளது. பங்களாதேஷ், இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, மாலவி, நேபாள், வியட்நாம், கென்யா, தான்சானியா, சப் சஹாரன் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், இயற்கை பேரிடர் நிகழ்வுகள் நிகழும்போது, ஒவ்வொரு முறையும் அந்த நாட்டில் பொருளாதார பின்னடைவு ஏற்படுகிறது. தொடர்ந்து அங்குள்ள மக்கள் உணவு பாதுகாப்பின்மை என்ற பிரச்சனை சந்திக்கின்ற நிலை, அவர்களின் பெண் குழந்தைகளை விரைவாக திருமணங்கள், செய்து கொடுக்கின்றனர். குறிப்பாக 2010 ஆம் ஆண்டு முதல்,2022 ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் இவை அதிகம் பதிவு ஆகியுள்ளதாக, ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பங்களாதேஷ் நாட்டில் 2009 ஆம் ஆண்டு ஐலா (AYLA)புயல் வந்த பின் மக்கள், தம் பெண் குழந்தைகளுக்கு திருமண பணிகள் முடித்தனர். கென்யா நாட்டில் இளம் திருமண மகளிர் , உணவு, நீருக்காக வெகு தூரம் செல்வதை காரணம் கொண்டும், வேலைக்கு செல்ல, விரைவில் அவர்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. மாலவி நாட்டில், வறட்சி பாதிக்கப் பட்ட பகுதியில் மட்டும் இந்த நிகழ்ச்சிகள், பாதிக்கப் படாத பகுதிகளை விட கூடுதல் ஆக பதிவு உள்ளது. சப் சஹாரன் ஆப்பிரிக்கா மற்றும்
வியட் நாம் நாடுகளில் திருமண மகளிர் விற்கப்படும் அவல நிலை உள்ளது.. இந்த நிலையில் மணமகன்களிடம், பெண் வீட்டார், பெற்றோர் அதிக பட்ச விலையினை தம் மகளை விற்க வறட்சி, பேரிடர் காலங்களில், அதிக தொகை கேட்டு
திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றனர்.
மேலும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெண் குழந்தை மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு, குறிப்பாக, நிவாரண முகாம், தற்காலிக தங்குமிடங்களில், இத்தகைய அத்துமீறல், பாதுகாப்பற்ற சூழலில், பாலியல்
குற்றங்கள் அதிகரித்து விடும் நிலை உள்ளது.எனவே பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சி பற்றி திட்டமிடுதல் பரவலாக காணப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலக
அளவில் 12 மில்லியன் குழந்தை திருமணங்கள் நடை பெறுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் 3.1 மில்லியன் பெண் குழந்தைகள், பாலின முதிர்ச்சி தகுதி அடையும் முன்னரே திருமண நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.3.8 மில்லியன் பெண் குழந்தைகள் வேலைகளுக்கு வற்புறுத்தி அனுப்பப்படுகின்றனர் என்ற தகவல் வேதனை ஆகும். ஆனால், இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பெற்றோர் கல்வி அதிகரித்து வருவதால், இங்கு குழந்தை திருமணங்கள் குறைந்து வருகிறது. ஆங்காங்கே சில பகுதியில் மட்டும் நிகழ்வுகள் இருப்பதும் உண்மை!
பருவ கால மாற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், படிவ எரி பொருட்கள் மூலம் கார்பன் உமிழ்வு உயர்ந்து புவி வெப்ப நிலை உயராமல் தடுக்க அரசுகள் மாற்று எரி பொருள், புதுப்பிக்கப்படும் ஆற்றல் மூலங்கள் பற்றிய விழிப்புணர்வு, செயல் திட்டங்கள் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். மின்சாரம் மூலம் வாகனங்கள் அதிகரிக்க அவற்றை உற்பத்தி நிலையிலும், நுகர்வோர் நிலையிலும் சலுகைகள் அளித்து மக்கள் எளிதில் பயன்படுத்த, வணிக முறைகள் மேம்படுத்த வேண்டும்.
போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு சட்டங்கள், செயல்பட தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பருவ கால மாற்றவிளைவினால் சமூகத்தில் பாதிப்பு, தனிமனித, திருமண நிலை குடும்ப,பிரச்சனைகள்கூட அதிகம் ஆகிவிடும் நிலை உள்ளது. எனவே அரசு பொது சுகாதாரத்துறை, பேரிடர் நிவாரணம்,சமூக நலத்துறை, காவல், நீதி, நிர்வாகம் போன்ற அத்தியாவசிய அலுவல் துறைகளிலும் அவர்கள் நோக்கம்,பார்வை, வேறுபாட்டுடன்,அணுக ஏற்ற நிலையில் பணிகளில் மாற்றம் வரும், அதற்குரிய பயிற்சிகள் தரப்பட வேண்டும். பருவ கால மாற்றம் ஏற்படுத்தும் சமூக சவால்கள் சந்திக்க மக்களிடையே, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை வருமா!!!? நம்பிக்கை கொண்டு காத்திருப்போம்!!

