தொழிற்சாலை தீமையில்லா மாசு பிரச்னை
தீர்வுகள் காண என்றுமே இயலாதா!
சமீபத்தில், நான் ஒரு ரயில் பயணத்தில் இருந்த போது, தொழிற் சாலைகள் நிறைந்த பகுதி, கடக்க நேரிட்டது. அப்பகுதியினைப் பார்க்கையில், தொழிற்சாலையில் பயன்படுத்தி வெளியேற்றிய தீமை தராத கழிவுகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்ட காட்சிகள், மனதில் சற்று வருத்தம் அளித்தது. நிச்சயம் இந்த கழிவுகளால் மிக பெரிய பிரச்சனை இல்லை எனினும், அவற்றை முறையாக மேலாண்மை செய்தால் மண்ணுக்கும் தீமை தராது. ஓரளவு மறு சுழற்சி மூலம் வருவாயினை ஈட் இயலும் அல்லவா!? தொழிற்சாலைகளிலிருந்து பொதுவாக வெளியேற்றம் செய்யப்படும் கழிவுகள், இரண்டு வகைப்படும்.
அவையாவன, தீமை தரும் அபாய மாசு கழிவுகள், தீமை தராத சாதாரண கழிவுகள் எனப்படும். தீமை தரும் கழிவுகள் மேலாண்மை சட்டம்,2016 ஆம் ஆண்டு, இதன் படி செயல்பாடு, கண்காணிப்பு ஓரளவு சிறப்பாக இருப்பினும், தீமை தராத, சாதாரண கழிவுகள் எவ்வித சட்ட நடவடிக்கைக்கு உட்படாத நிலையில் நெடு நாட்களாக, பல தொழில் நிர்வாகங்கள் அலட்சியமாக இருந்து வருகிறது. இதனால் இந்த கழிவு மேலாண்மை மிக கடினமாக இருக்கிறது என்றால் மிகையன்று.
தீமை தராத கழிவுகள், பராமரிப்பு செய்ய போதிய அளவுக்கு வசதி மற்றும் இடம் இல்லை. உரிய வழி காட்டுதல்கள் இல்லாத நிலையில், திறந்த வெளிபகுதியில் அவற்றை கொட்டி எரிப்பது, ஒரு விரும்பதகாத வழக்கம் ஆகிவிட்டது.
இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. மேலும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு கூடுதல் பொறுப்பு, பணிசுமை ஏற்படுத்த காரணியாகிறது. நம் இந்தியாவில், தீமை தரும் கழிவு மேலாண்மை பற்றிய போதிய கவனம் நாம் இன்று வரை கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆம்! குறிப்பாக ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா,கர்நாடகா, கோவா, மேற்கு வங்காளம், மகா ராஷ்ட்ரா ஆகிய மாநில மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி விண்ணப்பத்தில் மட்டுமே(Consent to operate -CTO), கழிவு விபரங்கள் (வகை, அளவு, வெளியேற்றம்)தொழிற்சாலைகளிடம் கோரப்பட்டுள்ளது.
இத்தகைய தகவல் அறிந்தால் மட்டும், கழிவு மேலாண்மை முறையாக அதற்குரிய வழி காட்டு நெறி முறைகளை, மாசு கட்டுப்பாடு வாரியங்கள் உருவாக்க இயலும்.
2020 ஆம் ஆண்டில் டெல்லி CSE அறிவியல், சுற்று சூழல் ஆய்வு மையம், டெல்லி பகுதியில் தொழிற்சாலைகள்பிபி பற்றி மேற்கொண்ட ஆய்வில், சோனிபட், பிவாண்டி மற்றும் ஆழ்வார்,பரீதாபாத் போன்ற இடங்களில் உள்ள தொழிற் சாலைகள் வெட்டவெளியில் கழிவுகளை எரிப்பதாக தகவல் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் (கோகுல் ஷிர்கான், ஷிரொலி, காகல் 5ஸ்டார்) கோலாப்பூர் 2022 ஆம் ஆண்டில் கழிவு குவிப்பு மற்றும் கழிவு எரித்தல் அதிகம் ஆகிவிட்டது. இந்த மாநிலத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி தரும் விண்ணப்பத் த்தில் தீமை தராத கழிவு விபரங்கள் கோரிய பின்னரும், அதற்குரிய மேலாண்மை முறைகள், தொழிற்
பேட்டைகளில் எடுக்க இயலவில்லை என்பது உண்மை.
பொதுவாக, திடக் கழிவு மேலாண்மை செய்முறை இலக்கு வைத்தல், கழிவு தடுத்தல், மறு சுழற்சி, மக்கு உருவாக்கும் கம்போஸ்ட் முறை, ஆற்றல் மீட்பு, பராமரிப்பு மற்றும் வெளியேற்றம் என்ற ஒருங்கிணைந்த முறை ஆகும் இதன் மூலம் பசுமை குடில் வாயுக்கள் குறைக்க இயலும்.
ஏனென்றால், நம் நாட்டில் காற்று மாசு பாடு மிக முக்கிய சூழல் பிரச்சனை என்பதும் அதற்காக தேசிய காற்று தூய்மை திட்டம்(NCAP )ஒன்றை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் திட க் கழிவு மேலாண்மை முறையில் எரித்தல் குறைக்கப் பட வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் விஸ்வகர்மா தொழில் பகுதி ஜெய்ப்பூர் மாநகரத்தில் உள்ள11 பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு உள்ள சிறு, நடுத்தர அளவு தொழில் நிறுவனங்கள் திறந்த வெளி கழிவு எரித்தல் என்ற
முறை மட்டும் பின்பற்றி காற்றினை மாசு ஆக்குகின்றன.
2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ராஜஸ்தான் மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த தொழிற்சாலை பகுதியில் ஆய்வுமேற்கொண்ட போது,(500 தொழிற்சாலைகளுக்கு மேல் ) இரும்பு கேட், சன்னல், பிளாஸ்டிக், பௌண்டரி, மின்சார கேபிள், கல் வெட்டும் தொழில்,, இரும்பு உருக்கு உருட்டு ஆலை, பூச்சி மருந்து, ட்ரான்ஸ்போர்மர், காலணி, உணவு, செராமிக் ஆகிய தொழில் மூலம் வெளியேறும் கழிவுகள் ஒரு ஆண்டுக்கு 1,26412 டன் ஆக இருப்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.
இதில் 72%(90648டன் )மறு சுழற்சி செய்ய கூடிய உலோக கழிவுகள் ஆகும். இவற்றை மறுசுழற்சி செய்யும் வணிகர்களுக்கு அனுப்பப்படுகிறது. 28% தீமை தரா கழிவுகள், இதில் பிவிசி பொருட்கள், சிலிக்கா, பளிங்கு கல் கழிவு,, உணவு, துணி, ரப்பர், மக்கும் கழிவு போன்றவை ஆகும்.
மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் CTO, அனுமதி தரும்
விண்ணப்பங்களில் தீமை தரா கழிவுகள் பற்றிய விபரம் தருமாறு, தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி பெறுவது கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
சில புதிய தொழில் பொருட்களின் கழிவு (ரெக்ஸின் ) இயல்பு பற்றி முன்னரே அறிந்து அவற்றின் மறுசுழற்சி நடவடிக்கை பற்றி திட்டம் இடலாம். மேலும் இத்தகைய கழிவுகள் இருப்பு வைக்க கிடங்கு அல்லது உரிய இடம் பற்றியும் சிந்தித்து அனுமதி
வழங்க முயற்சி செய்யலாம்.
பொதுவாக நேரடி தீமை தராத கழிவுகள் எவ்வாறு மேலாண் செய்யப்படவேண்டும்?
- ஒவ்வொரு தொழில் நிறுவனமும் கழிவு உருவாகும் இடத்தில், அவற்றை முறையாக பிரித்து, மறு சுழற்சி வாய்ப்பு உள்ள பொருட்கள் முறையாக பிரிக்கலாம்.
- SIDCO எனப்படும் மாநில தொழில் வளர்ச்சி கழக நிர்வாகம், தனி போக்குவரத்து ஏற்பாடு மூலம் கழிவு பிரித்து எடுத்து வரலாம்.
- பொது கழிவு இருப்பு வைப்பு பகுதி /கிடங்கு ஒன்று உருவாக்கி, கழிவு அளவு, போக்குவரத்து செய்யும் வாகனம் பற்றிய தகவல், அங்கேயே பிரித்து மேலாண்மை செய்யும் வசதி தர இயலும்.
- கழிவு மேலாண்மை கண்காணிக்க, உரிய தகவல்கள் சேகரிப்பு, மறுசுழற்சி, மறு பயன்பாடு, வெளியேற்றம் பற்றி அதிகார பூர்வ அமைப்பு மேற்கொள்ள வேண்டும். கழிவு மூலம் கிடைக்கும் வருவாய் தொழில் நிறுவனங்கள் எளிதில் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தீமை தராத கழிவுகள் இயல்பு, தன்மை, வேதியியல் பொருட்கள் பற்றிய சோதனை, ஆய்வு நிலையம் அமைத்து பயன் தரும் பொருட்கள் உருவாக்க வாய்ப்பு, அறிதல், பற்றிய நிலை உருவாக்க முயற்சி செய்யலாம். தீமை தரும் கழிவுகள், தீமை தராத கழிவுகள் போன்றவை பிரித்து அறிய முறையான பயிற்சி தொழில் நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப் படவேண்டும். கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யும்போது,எந்த வகையாக இருப்பினும், அதற்குரிய நடவடிக்கை முறையாக செயல்படுத்தப் படவேண்டும். கண்காணிப்பு, தொடர்ந்து விழிப்புணர்வு போன்றவை முக்கியமாகும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்