பொருளாதார பேதமில்லா கார்பன் உமிழ்வு கணக்கு!
சூழல் பாதிப்பிலும் வருவதில்லை, பாரபட்ச பிணக்கு!
சுற்றுசூழல் பிரச்சனைகள் என்றால், அழகான இயற்கை சூழல், வாழிடம் மாசுபாடு அடைந்து, அதன் தொடர்ச்சியாக அங்கு வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் நோய்,உணவு தட்டுப்பாடு, ஆரோக்கிய குறைபாடு மற்றும் பல பாதிப்புகள் அடைவது ஆகும். இதில் மனித இனம் விதிவிலக்கு அல்ல.
ஆனால், அந்த மாசு பாடு பிரச்சனையினை, தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாக அல்லது மறைமுகமாக மனித இனம், நாம்தான் உருவாக்க காரணம் ஆகிறோம். ஆம், அறிவியல் வளர்ச்சி, நாகரீகம், சொகுசு வாழ்க்கை போன்ற தவிர்க்க இயலாத வளர்ச்சிக்காக மனிதன் செயல்படும் போது, அவன் வெளியேற்றம் செய்யும் கரிம கழிவு (CARBON FOOT PRINT) கார்பன் காலடி தடம் என்று அழைக்கப்படும்.
இத்தகைய பசுமை குடில் வாயுக்கள் (GREEN HOUSE GASES) மீதேன் (CH3, CO2) கார்பன் டை ஆக்சைடு, உலக வெப்பமயம் என்ற நிலை ஏற்பட காரணம் ஆகும். இந்த உலக வெப்பமயமாதலின் தொடர்ச்சியாக,, பருவகால மாற்றங்கள் என்ற பிரச்சனை, தற்போது குறிப்பிட்ட மாற்றங்களை மழை, புயல், வெள்ளம், வறட்சி என வெவ்வேறு பாதிப்புகள் ,நம் இயற்கை சந்திக்கிற நிலை வருகிறது.
கார்பன் காலடி தடம் தனி மனிதனால், மட்டும் அல்ல, ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வசிக்கும் மனித இனம் தாம் பயன்படுத்தி வரும் மோட்டார் வாகனங்கள், உணவு தயாரித்தல், மற்றும் கழிவு, குளிர் பதன சாதனங்கள், படிவ எரிபொருள், மின்சாரம் தயாரிப்பு என்ற வெவ்வேறு நுகர்வு மூலம் ஏற்படுகிறது. கார்பன் காலடி தடம் அல்லது கார்பன் உமிழ்வு வழியாக சுற்றுச் சூழல் பிரச்சினைகள், அந்த இயற்கைபகுதியில் வர வாய்ப்புகள் இருக்கிறது.
சரி! இந்த நிலையில், சூழல் அமில தன்மை அதிகரிப்பு, கடல் மட்டம் உயர்வு, தொடர்ந்து, தீவிர புயல்கள், குறிப்பிட்ட சிற்றினம் முழுவதும் அழியும் பயமுறுத்தல், அபாயம் உள்ளது. உணவு பற்றாக்குறை, பொருளாதார சமநிலை மாற்றம் ஆகிய அபாயங்கள் வரும். இந்த அறிவியல் புரட்சிகளால், நாள் தோறும் மாற்றம், அடைந்து வரும், இப்பூவுலகில், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகள் ஆகியவற்றிற்கு இடையில் கார்பன் உமிழ்வு நிலைவேறுபாடு கொண்டு அமைந்துள்ளது.
மேலும், பணம் உள்ள நாடுகளுக்கிடையிலும், இந்த நிலை தொடர்கிறது. சராசரி தனி நபர் “கார்பன் உமிழ்வு “, வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளவர்களைவிட, வளர்ச்சி அடைந்து வரும் சாதாரண நாடுகளில் (அர்ஜ்ன்டினா, பிரேசில், இந்தியா) உள்ள,10%பணக்கார நபர்கள் வெளியேற்றம் செய்கின்ற அளவு அதிகம் ஆகும். இதில் மெக்ஸிக்கோ மற்றும் தென் ஆப்பிரிக்கா விதி விலக்காக உள்ளது. எனவே வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ள 10%மக்கள் வெளியேற்றி வரும் கார்பன் உமிழ்வு, பணக்கார நாடுகளுக்கு, சமமாகவே உள்ளது.
தனிப்பட்ட நபர்கள், குறிப்பாக, சவூதிஅரேபியா, கனடா, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளில் உள்ள, சாதாரண குறைந்த வருமானம் உள்ளவர்கள் உருவாக்கும், கார்பன் உமிழ்வு அதிகம் இருப்பதாக தகவல் தெரிகிறது. அதேபோல், வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழும் 10% வருவாய் அதிகம் உள்ள நபர்கள் மூலம் 6 முதல் 15 மடங்கு கார்பன் உமிழ்வு கூடுதல் ஆக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே பொருளாதார பேதமில்லாமல், கார்பன் உமிழ்வு, கார்பன் காலடி தடம் அனைத்து நாடுகளிலும் சமமாக உள்ளது. இத்தகைய ஆய்வு ஆஸ்திரேலியா, கனடா, சீனா ஐரோப்பியகூட்டு நாடுகள், ஜப்பான், ரஷ்ய கூட்டு அணி, பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, சவூதி அரேபியா,, துருக்கி ஆகிய வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிக்கோ, ASEAN எனப்படும் தென் கிழக்கு நாடுகள் போன்ற வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளிலும் நடை பெற்றது.
இதனை டெல்லியில் உள்ள ஆற்றல், சூழல், நீர் ஆய்வு குழுமம் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 81%சதவீதம் கார்பன் உமிழ்வு இந்த நாடுகளில் செயல்படுத்த திட்டமிடும் பொருளாதார மேம்பாடு முறைகளில் வழியாக ஏற்படுகின்றது. மேலும் 21% கார்பன் உமிழ்வு, சீனா நாடு பங்களித்து புவியின் வெப்பம் உயரவும் காரணம் ஆகிவிட்டது.எனவே பணக்கார நாடுகளில், வாழும் வசதி படைத்த(10%) மனிதர்கள் தம் வாழ்க்கையில் “நீண்ட நிலைத்த பயன்பாடு கொண்ட வளர்ச்சி “(ADOPTION OF SUSTAINABLE LIFE STYLE,) முறை கடைபிடிக்க முயற்சி செய்யும் நிலை வரவேண்டும்.
குறிப்பாக சீனா நாடு தனது கார்பன் காலடி தடங்களை பாதி அளவு குறைத்தால் 3.4 பில்லியன் டன் கரிமம் சேமிக்க இயலும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள 10% மக்கள் கார்பன் உமிழ்வு வரி முறை அமல் செய்து, அதன் மூலம் 500 பில்லியன் டாலர் தொகை பெற இயலும். இந்த நிதியானது பருவ கால மாற்றங்கள் காரணமாக, ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகள் தடுப்பு, நிவாரணம், அந்த பேரிடர்கள் பற்றிய ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்த இயலும். மேலும் இத்தகைய கார்பன் வரி தொகை, முழுவதும் வளர்ச்சியை நோக்கி நடை போடும் சாதாரண நாடுகள், பொருளாதார குறைவு நிலை நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
ஏனெனில் சூழல் பாதிப்புகள் ஏற்படும் போது, அவை நாடுகளிடையே வேற்றுமை பார்ப்பதில்லை! என்பது நாம் அறிந்த ஒன்று!ஆனால் பொருளாதார மேம்பாடு, அடைந்த நாடுகள் இயற்கை பேரிடர் துன்பங்களில் இருந்து விரைவில் மீண்டு வருவது எளிதாகிவிடுகிறது. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள், தம் இயல்பான நிலைக்கு போராடி முன்னேற்றம், என்பதை மிக மெதுவாக தொடும் நிலையில் பேரிடர் துன்பங்கள், நிவாரணம் என்பது அவர்களுக்கு கூடுதல் சுமை ஆகிவிடுகிறது என்பதை மற்ற வளர்ந்த நாடுகள் உணரவேண்டும்.
வளர்ச்சி பெற்ற நாடுகளிலுள்ள மக்கள், தங்கள் வாழ்வில் நீடித்த நிலைத்த வாழ்வியல் முறைகள் (SUSTAINABLE LIFE STYLES) பின்பற்ற அந்த நாடுகளின் அரசுகள் வலியுறுத்தி மற்ற நாடுகள் வளர்ச்சி பெறும்போது, அவற்றை சமம் செய்வது நன்றாக இருக்கும். கார்பன் காலடி தடம் குறைவு பெற முயற்சி செய்யும் நிலை வர வேண்டும். கார்பன் உமிழ்வு, வளர்ச்சி பெற்ற நாடுகள் அதிகம் உள்ள நிலையில் மற்ற சாதாரண, வளர்ச்சி நோக்கி நடை போடும் நாடுகளை முழுமையாக, கரிம வெளியேற்ற திட்டங்கள் பின்பற்ற, பன்னாட்டு மாநாடுகளில் கூக்குரல் இடுவது, அறிவுரைகள் கூறுவதை ஏற்க இயலாது.
எனினும், இந்தியா போன்ற நாடுகள், தொடர்ந்து பருவ கால மாற்றம் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதால், ஒன்றிய அரசின், சுற்று சூழல் அமைச்சகம், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பருவ கால மாற்றம் விழிப்புணர்வு, மீட்பு, செயல் திட்டங்களை மாநில சுற்றுசூழல் துறை மூலமாக, மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை வழியாக தொடர்ந்து பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. விழிப்புணர்வு பள்ளி, கல்லூரி, பொது மக்கள் மத்தியில் இருந்தாலும் பேரிடர்கள் வருவதற்கு நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் காரணம் என்பதை உணர்வு பூர்வமாக அறிய வேண்டும்.
நம் கார்பன் காலடி தடம், அதாவது சுற்று சூழல் சமநிலை பாதிக்கும் அளவில், மேற்கொண்டு வரும் அன்றாட செயல்பாடுகள் பற்றிய சிந்தனை நாம் பெறுவது, அவற்றை தவிர்த்து கொள்ள வாழ்வியல் முறைகள் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது நன்று. பொருளாதார வளர்ச்சி பெறுவது, வாழ்க்கை வசதி உயர்வு பெற பல்வேறு நாகரீகம், அறிவியல் நுட்ப சாதனங்கள் பயன்பாடு, என்பது மனித இனத்தில் தவிர்க்க இயலாது. ஆனால் அடிப்படை வாழ்விற்கு, இயற்கை பாதுகாப்பு முறை பின்பற்றினால் மட்டும் “நீடித்த நிலையான வளர்ச்சி “ (SUSTAINABLE DEVELOPMENT )ஏற்படும் அல்லவா!!? பொருளாதார பேதம் இல்லாமல் கார்பன் உமிழ்வு, கார்பன் காலடி தடம் அதிகரித்து வந்தால், அதனால் பருவ கால மாற்றங்களின் துன்பங்கள் உலகம் முழுவதும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் பேரிடர்கள், உலக வெப்பம் அதிகரிப்பு, வறட்சி, வெள்ளம் எந்த கணக்கும், பிணக்கும் நாடுகள் இடையே பார்ப்பதில்லை!
இதனை நாமும், பொருளாதார உயர்வு பெற்ற நாடுகளும் புரிந்து கொள்வோமா!!!!?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.