சமகால சுற்றுசூழல் சவால்கள் World Water Day (உலக தண்ணீர் தினம்)

உலக நீர் பிரச்சனை கலகம் ஓயுமா!!?

ஒருங்கிணைய மனித இனம் முயலுமா!?

 

“உயிரின் ஆதாரம் நீர் “என்பதை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது! அல்லவா!? எனினும் கடந்த 30 ஆண்டுகளாக, குடிநீர் புட்டியில் எடுத்து செல்லும், நிலை, ஒரு புறம், விவசாயத்திற்கு நீர் பெறுதலில், கொடுப்பதில் ஊர்களுக்கிடையில், மாநிலம், நாடு என்று பல்வேறு வகை பிரச்சனைகள் சந்திப்பதும், மாநகர் பகுதிகளில், குடிநீர் லாரி வந்ததும், அங்கு மக்களிடம் ஏற்படும்  கலகங்கள்!

எத்தனை?? எத்தனை!?  நிலத்தடி நீர் குறைபாடு, ஆழ் குழாய் மூலம் நீர் இறைப்பு! வடிவங்கள் மாறினாலும், இவை அனைத்துக்கும் ஒரே காரணம் “பற்றாக்குறை”என்பது மட்டும் தான் அல்லவா!. இதையும் கடந்து, நவீன 21 ஆம் நூற்றாண்டில், சில இந்திய கிராமங்களில், குறிப்பிட்ட சில பிரிவு மக்களுக்கு, குடி நீர் மறுக்கப்படும் சமூக சூழல் அவலங்கள் தொடருவதும், வேதனை அளிக்கும் நிலை ஆகும். 1990 முதல் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குறைந்தது 1473, வன்முறையுடன் கூடிய நீர் பகிர்வு தகராறுகள் உலகம் முழுவதும் நிகழ்ந்ததாக பதிவு செய்யபட்டுள்ளது. இதில் 70%, 2014 ஆம் ஆண்டு முதல் 2023க்குள் நடை பெற்றுள்ளன. பத்து ஆண்டுகளில்,2.4மடங்கு  பிரச்சனை நிகழ்வுகள், அதிகம் பதிவு செய்துள்ள நிலை வருந்ததக்கது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டில் 49, பிரச்சனை, 2023 ல் 117 ஆக உயர்வு பெற்றுள்ளது 2019 ஆம் ஆண்டு இன்னும் மிக மோசமாக, இந்த நீர் சண்டைகள் இருந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் கூட ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் 117 விரும்பத்தகாத நீர் வன்முறை நிகழ்வுகள் (138%), 2014 ஆம் ஆண்டினைவிட இரு மடங்கு கூடுதல் ஆக இருக்கிறது.

நீர் பிரச்சனை உலக அளவில் ஆசியா, ஆப்பிரிக்கா  கண்ட பகுதியில் மட்டும் 80% தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுள்ளது. இந்த மனித குல அடிப்படை ஆதார பிரச்சனை, இங்கு ஆயுதம் போன்ற நிலையில் எதிர்ப்பு, வன்முறை உணர்வு தூண்டும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஆசிய நாடுகள் 57% பிரச்சனைகள் மற்றும் ஆப்பிரிக்கா இரண்டாம் நிலையில் 24%, அதனை தொடர்ந்து 10% தென் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் நடக்கின்றன. சமீபத்தில் மேற்கு ஆசிய கண்ட நாடுகளில், போர் பதற்றம், ரஷ்யா -உக்கிரேன் போர் நிகழ்ச்சிகளில் நீர் ஆதாரங்கள் ஆயுதங்கள் ஆக கருதி எதிர்க்கப்பட்ட நிலை கண்டனத்துக்கு உரியதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நீர் ஆதாரங்கள் போரின் காரணமாக அழிக்கப்பட் டுள்ளன. காசா,ஏமென், சிரியா, இராக், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இத்தகைய பயங்கர கொடுமைகளை சந்திக்கின்றன.2022 ஆம் ஆண்டு ரஷ்ய -உக்ரன் போரில் 36 நீர் நிலை அழிவுகள் பதிவாகியுள்ளது.2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யா ஆக்கிரமிப்பு, தெற்கு உக்ரன் பகுதியில் நோவா -கக்கோவ் கா என்ற அணை அழிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா நாடுகளில், வறட்சி, நீர் பற்றாக்குறை ஆகிய அழுத்தம்,பருவ கால மாற்றம், காரணங்களால் மக்கள் துன்பங்கள் அடைகிறார்கள். புர்கினா பாசோ, மாலி, எதியோப்பியா, நைஜீரியா, சோமாலியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள பாரம்பரிய மேய்ச்சக்காரர், விவசாயிகள் நீர் பற்றாக்குறை பாதிப்பு அதிகம் பெறுகின்றனர். 2022 ஆம் ஆண்டு, ஜனவரி முதல் மே வரை புர்கினோ பாசோ என்ற பகுதியில் 32 நீர் நிலைகள் அழிந்து விட்டன. இதனால் 300000 (3 லட்சம் ) மக்கள், நீர் லாரி, நீர் நிலையில் தொற்று ஆகிய பிரச்சினைகள் உருவாகிவிட்டன. தென் ஆப்பிரிக்கா வில் தூய்மை, பாதுக்காப்பான  குடிநீர் இல்லை. கிழக்கு கேப் நகராட்சி பகுதியில் நீர் நிலை அழிப்பு,, மற்றும் பியூ போர்ட் சுற்று வட்டாரத்தில் உள்ளூர் நீர் குழாய் அழிப்பு காரணமாக, அங்கு வசிப்போர் அந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டனர் பொதுவாக ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளில், பருவ கால மாற்றம், வெப்ப உயர்வு, நீர் பிரச்சனை தொடர்பின் வேகம் தூண்டி மக்களிடையே வன்முறை அதிகம் ஏற்படும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவில் இப்படிப்பட்ட நீர் தொடர்பான வன்முறை பிரச்சினைகள்,2019 ஆம் ஆண்டு ஆசியா கண்டத்தினை ஒப்பிடுகையில்,43% சதவீதம் அங்கு நடைபெற்றது. 40% வறட்சி,17% தீவிர வறட்சி போன்றவை  500 மில்லியன் மக்கள்  துன்பங்கள் அடைந்த நிலை பற்றி காந்தி நகர் IIT இந்திய தொழில் நுட்ப கழகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. விவசாயம், நீர்ப்பாசனம், அவற்றால் பிரச்சினைகள் 36 எண்ணிக்கை பன்னாட்டு நிறுவனம் (PACIFIC INSTITUTE ) ஒன்றால் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரா, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகம் ஆகிவிட்டது. குற்ற பதிவுகள் கணக்கெடுப்பு படி 2019 ஆம் ஆண்டுப்படி,11 மாநிலங்களில் 793 பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்ட நிலை வேதனை ஆகும்.2023 ஆம் ஆண்டில் 6 வழக்குகள் நம் நாட்டில்  நீர் பிரச்சனை, ஆசியாவிலையே  அதிகம் ஆகும். தோராயமாக 2பில்லியன் மக்கள் பாதுகாப்பு குடிநீர் இல்லாமல் இன்றும் உலகில் துன்பங்கள் அடைவது வருத்தம் தருகிறது.77 நாடுகளில் நீர் பற்றாக்குறை தீவிர நிலை, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ரஷ்யா,யூரோ ஆசியா நாடுகளில் பிரச்சனை வலுத்து வருகின்றன.பருவ கால மாற்றம் காரணமாக தீவிர நிலை அடைவது உலகெங்கும் உணர்ந்து வருகின்றனர்.

நீர் பிரச்சனை பற்றிய புள்ளி விபரங்கள் தந்து, பிரமிப்பு அடைய செய்வது நோக்கம் இல்லை. ஆனால் உலகெங்கும், சமூகம், மனித தேவை, அழிப்பது குறிக்கோள் கொண்டு இருக்கும் அவலம், மனித நேயம் முற்றிலுமாக,நீர் வறண்டு போவதற்கு போட்டியாக வறண்டு போய் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சுற்று சூழல் முக்கிய நாட்கள் நாடுகளில் அனுசரித்து வரும் நிலை, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஐக்கிய சுற்று சூழல் அமைப்பு (UNESCO, UNEP )போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கடமை நிறைவேற முயற்சிகள் பல எடுத்து வருகின்றனர். ஆனால் உலக நாட்டு தலைவர்கள், போர் என்ற சூழல், நீர் நிலைகள் அழிப்பினை, அனுமதிக்க கூடாது என்ற கண்டனம் எழுப்ப வேண்டும். 

உலக நீர் தினம் கொண்டாட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆக மட்டும் நிறைவேறாமல், செயல் திட்டமாக உருப் பெற அனைவரும் சிந்திப்பது நன்று. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும், நகரிலும், கிராமங்களில், நீர் முக்கியத்துவம் பற்றிய அறிவியல் செயல் திட்டம் ஏற்படுத்தி, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிக நீர் வெள்ளமாகவும் ஆபத்து!

முற்றிலும் நீர் இல்லா நிலை வறட்சி கொடுமை!இந்த இரண்டுக்கும் இடையில் மனித நேயம் குறைந்து, பகிர்வு என்ற உணர்வு, மக்களிடம் குறைந்து விட்ட நிலை, நாம் அனைவரும் புரிந்து கொள்வோம். இயற்கை, உலகில் உள்ள ,அனைவருக்கும் எல்லாவற்றையும் சமமாகவே வளங்கள் அளித்துள்ளது. மனித இனம் இந்த சமம் என்ற நிலை அறிந்தும்,அறியாமல்  தமக்குள்ளே  வன்முறை மூலம் நீர் போன்ற வளங்களை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்ந்து சமீப காலங்களில், நிகழ்வுகள் அதிகரிக்கும் நிலை வருத்தம் தருகிறது. அதிகாரம், அறிவியல், வணிகம் எல்லாவற்றையும் கடந்து “எல்லாவற்றையும் சமம் ஆக பகிர்ந்து கொள்ளும் “குறிப்பாக நீர் வளம் மாசுபட விடாமல் தடுத்து அனைவரும் பெற இந்த உலக நீர் நாளில் உறுதி எடுத்து கொள்வோம்! சற்று சிந்திப்போம்!

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *