samakala sutrusoozhal savalgal 17 article by rammanohar சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 17 ராம் மனோகர்
samakala sutrusoozhal savalgal 17 article by rammanohar சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 17 ராம் மனோகர்

தொடர் 17 :சமகால சுற்றுச்சூழல் சவால்கள் – முனைவர் பா. ராம் மனோகர்

   

   காற்றின் மொழி அறியா கட்டுமானங்கள்!

 

                                            

அனைத்து உயிரினங்கள் வாழ  வாழ்விடம், தேவை, ஆனால் அந்த உயிர் சுவாசம் செய்து தான் வாழ வேண்டும். அதற்கு காற்று  மிகவும் முக்கியம் அல்லவா!? காற்று கொண்டு வரும் ஆக்சிஜன் (O2) உயிர் வளி , மனித வாழ்க்கைக்கு அத்தியாவசிய ஒன்று!இயற்கை இனிமையாய் தரும்  காற்று, புவியின் எல்லா பகுதியிலும் எப்போதும் தூய்மையாய் கிடைக்கிறதா!? என்பது கேள்விக் குறியே!!

நவீன, நாகரீகம் அறிவியல் வளர்ச்சி,  வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பெருக்கம் என்பது இந்த கேள்விக்கு விடை தர இயலாது. ஏனெனில் அவற்றால் காற்றில் கலக்கும் மாசு  பல்வேறு நச்சு வாயுக்கள் கலந்து பல்வேறு விரும்பத் தகாத விளைவுகள் உருவாக காரணம் ஆகிவிட்டது. மேலும் பல காற்று மாசு பிரச்சினைகள் ஒரு புறம் வளரும் நாடுகள் அங்கு வசிக்கும் பொது மக்கள் ஆரோக்கியம், சுகாதார, வாழ்வில் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் போதுமான காற்று வசதி கொண்டு, சரியாக

அமைக்கும் நிலையில் உள்ளதா!? என்பது இங்கு நாம்

சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று, அல்லவா!?

பெரும்பான்மை மக்கள், பாரம்பரியமாக  தம் வசிப்பிடங்களான  வீடுகள், இயற்கை சார்ந்து விளங்கும் வகையில் கட்டி வந்தனர். அதில் இயற்கை ஒளி, காற்று

பெறக்கூடிய அமைப்புகளாக அவற்றை உருவாக்க முனைந்தனர். குறிப்பாக காற்றோட்டம் இருக்கும் நிலையில் சன்னல்கள் அமைத்தனர். பொதுவாக, கட்டிடங்கள், அனைத்தும் அவற்றின் உட்பகுதியில் உள்ள மாசுக்கள், மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியே செல்லும் வண்ணம் வடிவமைக்கப் படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், கட்டிட உட்பகுதி அதிக வெப்பம்,  அல்லது குறை வெப்பம் கொண்டும், தங்கி இருப்பவர்கள், உடல்

பாதிக்கும் அளவுக்கு ஆகிவிடும் என்பது உண்மை. பருவ காலத்திற்கு ஏற்ற வாறு கட்டிட உட்பகுதி வெப்பநிலை சீராக இருக்குமாறு அமைக்கப்படா விட்டால், அங்கு குடியிருக்கும் மனிதர்களுக்கு காற்று மூலம் பரவும் நோய்கள் (இன் புளு என்சா, காச நோய் )மற்றும் தொடர் சுவாச நோய்கள் வர நிறைய வாய்ப்புகள் உண்டு.

சமீப காலமாக, குறைந்தது கடந்த முப்பது ஆண்டு

களுக்கு மேலாக,  பொறியியல் வல்லுநர்கள் உருவாக்கும் கட்டுமானங்கள் அனைத்தும் இயற்கை காற்று பெற இயலாதவைகளாக, அமைந்து வருகின்றன. தவறாக

அமைக்கப்படும் கட்டிடங்களில், வசிக்க செல்லும் மக்களை இயந்திரம் மூலம் குளிர்ச்சி (AIR CONDITION INSTRUMENT )பெற கட்டாயப்படுத்தி விடுகின்ற நிலையினை நாம் கண்டு

வருகிறோம், அல்லவா!?. இத்தகைய செலவு, ஆடம்பரம் மற்றும் ஒவ்வொருவரும் நாம், நமது ஆரோக்கிய பராமரிப்பிற்கு செய்யும் கூடுதல் செலவாக எண்ணத் தோன்றவில்லை என்பது பரிதாபமே!எனினும் அனைவரும், குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த வசதி சாத்தியம் ஆகுமா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.காற்றோட்டம்

இல்லாத கூண்டு போன்ற அடைக்க பட்ட வீடுகள், நோய்கள்

உருவாக்கும்நுண்ணுயிர்கள் வளர்க்கும் கண்ணாடி வட்டில் (PETRI DISH )போன்று அமைந்து விடுகின்றன. குறிப்பாக

SARS -COV -2-நோய் கிருமிகள் அடைக்க ப்பட்ட பகுதியில் எளிதில் வளர்ச்சி பெற்று பரவக் கூடியதாக இருப்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதனால்  கட்டுமான வடிவமைப்புகள், அதன் சூழல் பற்றிய திட்டமிடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ள நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கோவிட் -19 பேரிடர் காலத்தில்

வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, “மிக நுண்ணிய துகள்கள் மற்றும் தூசுப் படலம் போன்றவை வழி,எளிதில்

வைரஸ் பரவவும், குறிப்பாக குளிர் சாதன உபயோகிக்கும்

நபர்கள் இதன் மூலம் பாதிக்கின்ற நிலை காணப்படுகிறது. குறுகிய, வரையறை செய்யப்பட்ட அறைகளில் 6 அடி தொலைவிற்குள், காற்று மீண்டும் ஓரிடத்தில் சுழன்று கொண்டு இருப்பது, நுண்னுயிர் பரவல் ஏற்பட காரணம் ஆகிவிட்டது. எனினும், வடிகட்டியினை குளிர் சாதனம் கருவியில் பொருத்தினாலும், வைரஸ் செயலிழக்கும் முன் பல மடங்கு பெருகிவிடுகிறது.

இத்தகைய காற்று மூலம் பரவும் நோய்கள், அதிக மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் குடியிருக்கும் பகுதியில் சுகாதார பிரச்னை உருவாக் குகின்றன. காரணம் 2012ஆம் ஆண்டு நிலையின் படி,18.78 மில்லியன் வீடுகள் குறைவாக, உள்ளதாக மத்திய வீட்டு வசதி, நகர் புற அமைச்சகம் தகவல் கூறுகிறது.உலக சுகாதார அமைப்பின்(WHO )ஒரு மனிதருக்கு 129.16 சதுர அடி, வசிப்பிடம் தேவை ஆகும். ஆனால் நம் நாட்டில் 80 ச. அடி மட்டும் தான் இங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது. அவ்வகையில் இது  உலக சுகாதார நிறுவன அளவீட்டின் படி 62% ஆகும். ஆனாலும் 2018 ஆம் ஆண்டு 47.3மில்லியன் வீடுகள் கட்ட தேவை இருப்பினும், PMA YOJANA என்ற பிரதமர் திட்டத்தில்,11.2 மில்லியன் வீடுகள், முழுமையாக காற்றோட்ட வசதி கொண்டு அமைக்கப் போவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. டெல்லி நகரத்தில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வு மையம் (CENTRE FOR SCIENCE &ENVIRONMENT )2021 ஆம் ஆண்டு, ” நல்வாழ்விற்காக சுவாசிக்க எளிதான இல்லங்கள் “என்ற திட்டத்தில் ஆராய்ச்சி செய்தது. மேலும் குறிப்பிட்ட தற்கால சட்டத்திற்குட்பட்டு நவீன கட்டுமானங்களில் காற்றோட்ட நிலை, அதற்குரிய நுண் தொழில் நுட்பம் வரையறுக்க, நான்கு முக்கிய அம்சங்கள் பற்றி வலியுறுத்தி உள்ளது.

  1. தனி அறைகள் 2. குறுக்கு காற்றோட்டம் 3. அதிகப்படியான காற்று மாற்ற வீதம்.4. மேம்படுத்தப்பட்ட வடிகட்டுதல்  ஆகிய நான்கு காரணிகள் அடிப்படையில் புதிய வழி காட்டுதல் உருவாக்க ஆய்வு குழு அறிக்கை தந்துள்ளது.

மேலும் இந்த காற்றோட்ட பிரச்சனை இரு வேறு அணுகுமுறைகள் கொண்டு பார்க்க வேண்டும். பெரும்பாலும் வணிக வளாகங்கள்,  அலுவலகம் இந்த முறையான காற்றோட்ட வசதி தருவது பற்றி கவலைப் படுவதில்லை. இயந்திரம் மூலம் குளிர் சாதன வசதி அங்கு முன்னிலைப் படுத்தப்படுகிறது. உள் வளாகத்தில் காற்று மாசு பற்றி அங்கு சிந்தனை இல்லை. கோவிட் பேரிடர் காலத்தில்  கட்டுமான காற்றோட்ட வசதி பற்றிய நிபந்தனைகள் அரசு கொண்டு வரும் நிலை ஏற்பட்டு, தேசிய கட்டுமான வழிகாட்டுதல்கள், வீடுகளில் ஆற்றல், வெப்பம் போன்ற அம்சங்கள் சிறப்பு பெற வழிகாட்டியது. கட்டுமான இடம்,, கட்டிட இடைவெளி வீதம், தனி பிளாக் உள்ள தூரம், காற்று வரும் திசை, வடிவமைப்பு, சன்னல் அளவு போன்ற வற்றிற்கு அறிவியல் நுட்பம் உருவாக்கபட்டு மாற்றம் வந்தது. இங்கே குறிப்பிட்டவை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களை சென்று அடைய வேண்டும். பொறியியல் வல்லுநர்கள் அளிக்கும் வரைபடம், அதற்கு அனுமதி அளிக்கும் அலுவலர்கள் இவற்றை கண்காணிப்பதும் அவசியம் ஆகும்.

பொதுவாக  காற்று மாசு வாகன, தொழிற்சாலை மூலம் ஊருக்குள்,வெளியில் வருவது பலரும் அறிந்தாலும், வீட்டுக்குள் மாசு, சமையல் அறை காற்றோட்டம், படுக்கை அறை காற்று வசதி பற்றிய விழிப்புணர்வு அனைவரும் அறிதல் நன்று. வீட்டுக்குள் தேவையற்ற புகையோ அல்லது வாயுக்கள் உருவானால், அதை வெளியேற்றம் செய்யும் நுட்பம் நாம் அறிந்து உடன் செயல்பட வேண்டும்.

காற்று உண்மையில் இனிமை தான் அதன் மாசில்லா மொழி புரிந்து கொள்ள வீடுகளுக்குள்ளும் முறையாக காற்றோட்ட நிலை இருக்குமாறு கட்டிடம் கட்டுபவர்கள் திட்டமிட்டால் சுவாச நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இல்லங்கள் உள்ளே இனிமையாகநாம் வாழ இயலும்.

சிந்தித்து பார்ப்போமா!!!!??

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

 

                

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *