சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 1 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 1 – முனைவர். பா. ராம் மனோகர்




எந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிலும் அதன் இயற்கைத் தன்மை பாதிக்கப் பட்டு , பிறகு அதனால் மாசு பாடுகள் ஏற்படுவதும் அதனால் மனித இனம் பல பிரச்சினைகளை தவிர்க்க முடியாமல் சந்திக்க வேண்டிய நிலைகள் உருவாகிவிட்டது உண்மை!.உலகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தினால், நம் மனித குலத்திற்கு நாகரீகம், வாழ்க்கை மேம்பாடு ஆகியவை வந்தது ஒரு புறம் மகிழ்ச்சிதான்!எனினும் பல சுற்றுச் சூழல் சவால்களையும் எதிர் கொள்ள வேண்டிய வருந்தத்தக்க நிலை கள் நிறைய உள்ளது. இயற்கை காடுகள் பாதிப்பு, நகர் மயமாக்கம், நீர், நில மாசுபாடு போன்ற பல சவால்களை வளர்ச்சி அடைந்து கொண்டு வரும் நாடுகள் சந்திப்பதும் , குறிப்பாக இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் அதிகரிக்கவும் துவங்கிவிட்டான. தொடர்ந்து நாம் இப்பகுதியில் பல்வேறு சுற்று சூழல் சவால்கள் பற்றி அறிவோம்.

வளர்ச்சி, நாகரீகம்,
பொருளாதார உயர்வு, நவீனம் ஆகிய வற்றால் நம் மக்கள் அறிவியலின் ஒரு பக்க தொழில் நுட்ப வளர்ச்சி மட்டும் கண்டு அதிசயம் கொண்டு, மனித அறிவினை மெச்சி, புகழ்ந்து வரும் நிலை! இந்நிலையில் நம் கவின் மிகு தஞ்சை இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் இயற்கையினை தக்க வைக்க நாம், எடுக்கும் முறையான முயற்சிகள் களத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு, இளம் தலைமுறைக்கு நாம் தரும் ஊக்கம் போன்றவை சில சமயம் , வளர்ச்சி மட்டும் நோக்கம் கொண்ட சிலருக்கு வேறுபாடாகக் கூட தெரியலாம்! ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி! இதன் முக்கியத்துவம் புரியவும், நாம் எப்படிப்பட்ட அபாய நிலையில் உள்ளோம், எனவும் அறிய இயலும்! உத்தரக்காண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டம் இமாலய மலைப்பகுதி ஜோஷிமத் சுற்றுலா நகரம் புதைய தயார் ஆகிவிட்டது! வீடுகளை விட்டு மக்கள் வெளியேறிக்கொண்டுள்ள காட்சி! கொடுமை! 1970,80 களில் அரசுக்கு ஆய்வாளர்கள், நிபுணர்கள் இப்பகுதியில் கட்டிடங்கள் கட்ட கூடாது! மிக ஆபத்து எதிர் காலத்தில் வரலாம் என்று சொன்னதை புறக்கணித்து விட்டதால், இன்றைய அவல நிலை! நமக்கும், அல்லது நம் அடுத்த தலைமுறை கூட நிச்சயம் கடற்கரை பகுதியில், சமவெளி பகுதியில் கூட சூழல் பேரிடர் களை நாம் சந்திக்க வாய்ப்புகள் அதிகம்! Think Globally, Act locally!! எனவே சுற்று சூழல் சவால்கள் பற்றி நாம் சிந்தித்து பார்க்கலாமா!?

நம் நாட்டில் மதத்தின் பெயரால், அரசியல், பாரம்பரிய வழக்கம் என சில, தேவையற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்கள், கேளிக் கைகள் பொது மக்கள், படித்த இளைஞர்கள் அனைவரும் ஈடுபட்டு இயற்கை பகுதிகளில் அத்துமீறிய நடவடிக்கை கள் நிகழ்ந்து வருவது நம் நாட்டில் இயல்பாக ஆகிவிட்டது. இந்த நடவடிக்கைகளால் சுற்று ச் சூழல் மாசு அதிகரிப்பதும், அதன் பின் விளைவுகளாகக் குறிப்பிட்ட இயற்கை சூழல், வனம் சரணாலயம்,, காடுகள் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்சால்மார் பாலைவனம் பகுதியில், “மருமகோத்சவ் “-2023 என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சி, இதனால் , முற்றிலும் அரிய பாலைவனச் சூழல், இயற்கை, அங்குள்ள கோட்டை போன்றவை பாதிக்கப்படுவதாகப் பல இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனினும் மாநில அரசின் சுற்றுலாத் துறை அனுமதி உடன் பல்வேறு கேளிக் கை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடக்கிறது! தீவிர ஒளி, ஒலி அமைப்புகள், பட்டாசு, வெடி வெடித்தல் போன்றவையுடன் மக்கள், ஒட்டக சவாரி, கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றம் ஆகின்றன. இவை அனைத்தும் சூழல் கேடு விளைவு உடையதல்லவா? எனினும் பொருளாதாரம் உயர்வு பெற சுற்றுலா தேவை என்ற நோக்கில் நாம் புரிந்து கொண்டாலும், விழாவிற்கு பிறகு அங்கு அதிகம் மாசு, குப்பைகள் வெளியேறும் அல்லவா? இதனால் ஏற்படும் சுகாதார கேடுகள் ஒரு மிகவும் கடினமான சவால் ஆகும். இவற்றை எதிர்கொள்ள “நீடித்த பயன்பாடு “கருத்தின் அடிப்படையில் அரசுத்துறைகளும் சமநிலை பேணி இயற்கை மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றிய சிந்தனை கொள்வது அவசியம் ஆகும்.

தமிழ்நாட்டில், ஒரு தற்கால சுற்றுச்சூழல் சவால்! தொழிற்சாலை உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மாசு! ஆமாங்க! இதனை பற்றிய அறிக்கை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில் சற்று கவலை தரும் செய்திகள் நாம் அறிந்து கொள்வது நன்று. வேலூர், திருப்பூர், கடலூர், சென்னை, கோவை ஈரோடு பகுதிகளில், உள்ள சாயப்பட்டறை, காகித ஆலை, தோல் பதனிடு தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை போன்றவற்றின் கழிவுகள் வெளியேற்றம் மிக அபாயகர நிலத்தடி நீர் மாசு உருவாக்க துவங்கிவிட்டது. கால்சியம், குளோரின், குரோமியம், செம்பு, துத்த நாகம், மாலி ப்டினம் இரும்பு மாசு மற்றும் தேவையற்ற நச்சு கழிவு நீர் போன்றவையினால் குடிநீர் பாதிக்கும் நிலை உள்ளது.

வட இந்தியாவில் இத்தகைய மாசு உருவாக்கும் தொழிற்சாலைகள் 2011 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 136% அதிகரித்துள்ளது. குறிப்பாக உத்திரப்ரதேசம், ஹரியானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் முறையே 1079, 638, 178, 193 தொழிற்சாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது. நீர் மாசு அதிகரித்துவிட காரணமாக, ஆடை தயாரிப்பு, சாராயம், சர்க்கரை, காகிதம், ஆலைகள், அனல் மின் நிலையம் போன்றவை உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் 87% தொழிற்சாலைகள் எவ்வித கண்காணிப்பு இன்றி கழிவுகள் வெளியேற்றிக்கொண்டுள்ளன. நீடித்த நிலையான வளர்ச்சி கோட்பாட்டின் படி சவால்கள் சந்தித்து சுகாதார துன்பம் துயரம் பொதுமக்கள் அடையாமல் பொருளாதாரம் மேம்பாட்டுடன், இயற்கை பாதுகாப்பு பற்றிய அக்கறை அரசு துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வேண்டும். சிந்திப்போம்!!!!!

முனைவர். பா. ராம் மனோகர்.
செயலர், கவின் மிகு தஞ்சை இயக்கம்.,
தஞ்சாவூர் 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *