மண்ணில் மாசு நீக்குவோம்!, மனது வைத்தே மீள் சுழற்சி செய்வோம்!

சுற்று சூழல் பற்றி, மாசு பரவும் நிலை பற்றி, காற்று, நீர், பயன்பாடு, நில மாசு, திட கழிவு மேலாண்மை பற்றி அந்த குறிப்பிட்ட சட்டம் 17(C) வரையறுத்துள்ளதன், படி மாசு கட்டுப்பாடு வாரியம், அந்த குழுவின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு (DATA ), தகவல்கள், வெளிப்படையாக பொதுமக்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களால் அறியப்படவேண்டும்!

இந்த வெளிப்படையான செயல்பாடுகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் …. இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது! (65.5%) மகிழ்ச்சி! பாராட்டுக்கள்! இந்திய அளவில்!

31 அமைப்புகளை ஆய்வு செய்ததில், முதல் இரண்டு இடங்களில், ஒடிசா, தெலுங்கானா மாநிலங்கள் உள்ளன! (67%)

பிளாஸ்டிக் கழிவு, மறு சுழற்சி, இக்கழிவின் மறுசுழற்சி செய்பவர்கள் பற்றிய தகவல், தமிழ்நாடு, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா மாநிலங்கள் மட்டுமே வெளியிடுகிறது!

மின்னணு கழிவு, தீங்கு கழிவு, திட கழிவு போன்றவை பற்றிய குறைவான தகவல் மட்டும் பல மாநிலங்களில் வெளியிடப்படுகிறது!

எப்படியோ, சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய தகவல் சரியாக பகிர்ந்து கொள்ளப்படும் நிலையில் மட்டும் அதற்கான விழிப்புணர்வு, தீர்வுகள்! அரசுதுறை, தொண்டு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள் காண உதவியாக இருக்கும் என்பது உண்மை! ஆனால் அரசு துறைகளிலும் தொண்டு அமைப்பு தொடர்ந்து பிரச்சாரம் செய்தாலும், மக்கள் உணர்வு பெறவேண்டும். அத்தகைய சுற்று சூழல் சவால்கள் ஏராளம் ஆகும்.சுற்றுச்சூழல் சவால்களில் முக்கியமான ஒன்று, காற்றில் மாசு, பண்டிகைகள்,, அரசியல் தேர்தல், இறப்பு, எல்லாவற்றையும் வெடித்து கொண்டாடும் வழக்கம் நமக்கு! மகிழ்ச்சி தான், ஆனால் இந்த வெடித்து, கொளுத்தி, வண்ண வாணங்கள் வானத்தில் சென்று ஒளியூ ட்டும், தீபாவளி பண்டிகை மறுநாள் காலை நான் கண்ட காட்சி! ஆமாம்! கவனிங்க! “சூரியன், சுகமாய் தூங்க, பனிபோர்வை, இழுத்தி போர்த்தினான்! மக்களே கொண்டாட்ட மகிழ்ச்சி களைப்பில், எனக்கு ஏன் அவசரம்!என்றான்!!

“அம்மாடியோவ், உள் இழுத்த புகை, இன்றோடு முடியுமா? ஆசுவாச பெருமூச்சு விட்ட மரங்கள்!!

செம்பக பறவை “காங், காங் “ஒலியுடன் வெளியே வர துடித்ததது!அதற்கு “இன்னைக்கு நாம் வெளியில் இரை தேட போலாமா “என தவிட்டுகுருவி முனகல்!

பூமியோ ஆங்காங்கே,”மகிழ்ச்சி கொண்ட மனித இனம் புத்தாடைஉடுத்தி, த னக்கு குப்பை ஆடை, போர்த்திய அவமானத்தில் “அழ முடியாமல் தவிப்பு!

“வண்ண மயமாய் என்னை மாற்றி, மகிழ்ந்த மனிதா!உன் மகிழ்ச்சிக்கு, நீ வெடித்த வாண புகையினால் எனக்கு முட்டுதே,மூச்சு! “இன்றாவது முடியுமா,? மனிதா, உன் பண்டிகை வீச்சு!”

வானம் “வாக்கிங் “போன என்னோடு பேசியதே இந்த பேச்சு!!

இந்த சவால் எவ்வளவு கடினம், சுவாச நோய்கள், தீ விபத்து, இயற்கை பாதிப்பு என்ற நிலையில் நம் அரசு புகையில்லா, விபத்தில்லா விழா கொண்டாட விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் உணர்வு கொண்டு பட்டாசு,, மத்தாப்பு குறைக்க முன் வருவார்களா!?

வழக்கற்று போகுதல், ஆமாங்க, இது ஒரு முக்கியமான சுற்று சூழல் சவால்

ஆம் நவீன உலகம் விரும்பாத ஒரு செயல்பாடு! ஒரே பொருளை திரும்ப, திரும்ப உபயோகித்தல்,

ஒரு கருவி, பழுது பட்டுவிட்டால், அதனை சரி செய்யும் வழக்கம்! 1990 வரை இருந்தது!

ஆனால், தற்போது நவீன இளைஞர் சமுதாயம், பழுது ஏற்படும் நிலையில், எந்த வீட்டு உபயோகப்பொருள், கணினி, கைபேசி, பிற மின்னணு சாதனங்கள் அனைத்தும் உடனடியாக, பழசு போட்டுட்டு புதுசு வாங்க தயார் ஆகிவிடும் நிலை காணப்படுகிறது!
……………………

மின்னணு சாதனங்கள், புதிய, புதிய வசதி செயல்பாட்டு பயன்பாடுகளுடன், மிகவும் குறைந்த கால இடைவெளியில் உற்பத்தி!பொருளாதாரம் பெருக்கம், வங்கி கடன் வசதி, கடன் அட்டை ஆகிய காரணிகளால் பழைய பொருள் தூக்கியேறியப்பட்டு, மண்ணுக்கு மாசாகிவிடுகிறது! மின்னணு கழிவுகள் மாசாக முதன்மை காரணம், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான்! ஆம், திட்டமிட்டு இத்தகைய மின்னணு சாதனங்கள், பழுது பட்டால், மீண்டும் அதனை சரி செய்ய இயலாத நிலையில், தயாரிப்பதாக ஒரு ஆய்வு தகவல்!இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கைபேசி உற்பத்தி வணிகம் உள்ள நாடு! 2014 ஆம் ஆண்டில் 60 மில்லியன் திறன் பேசி (smart phone ) உற்பத்தி,2019 ஆம் ஆண்டில் 330 மில்லியன் கருவிகள் உற்பத்தி என்றால், அதன் குறுகிய வாழ்க்கை செல்பேசிகளை எளிதில், பழுது பட செய்து, பயனற்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடுகின்றன!!
…………………………

கழிவாக மாறிவிடும், மின்னணு பொருட்கள் பற்றி கவலை கொள்ளா சமுதாயம், மண் மாசு படுதல் பற்றி சிந்தனை செய்ய இயலுமா ????

உலக புவி தினம், 22.04.23 வர உள்ளது.

நமது கழிவு நம் பொறுப்பு என்ற உணர்வு பெறுவோம்!

இயன்றவரை குப்பை, வேண்டாத பொருட்கள் மறு சுழற்சி செய்ய முயற்சி செய்வோம்!

இயலாதோருக்கு, நம் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள பொருட்களை வழங்குவோம்! இந்த சவால் எதிர் கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு அல்லவா!?நண்பர்களே,

கொரோனா மறைந்து விட்டது!மனதில் உற்சாகம்!ஊரெங்கும் திருவிழா!வீடுகளில் வழக்கம் போல் மகிழ்ச்சி, திருமணங்கள், பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எல்லாம் 2022 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டு உள்ளது அல்லவா!?

ஆனால் கொஞ்சம் பின்னோக்கி நமது கடந்த கால கடுமையான தொற்று காலத்தில், உருவாக்கப்பட்ட” உயிர் மருத்துவ கழிவுகள் (BIOMEDICAL WASTES ) “பற்றி சுற்று சூழல் ஆர்வலர்கள், நாம் சிந்திக்கலாமா?!

1) இந்தியா 55117.. டன்கள் மருத்துவ கழிவு வெளியேற்றிய நிலை! (மே 2020-ஜூன் 2021)

2) இந்த BMW கழிவுகள், வழக்கமான காலத்தில் (614டன் /ஒரு நாள் ) உள்ளதைவிட, (129டன் /ஒரு நாள்) 21%அதிகரித்ததால் வந்த மொத்த அளவு தான்!!!

3) ஜூன் 2020முதல் டிசம்பர் 2020அதிகரித்து, மீண்டும் மார்ச் 2021முதல் மே 2021வரை அதிகரித்தது!

4) கொரானா முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் இடையில் நோயாளி அதிகரிப்பு நிலை 234%, என்பதால் 11% கோவிட் 19, மருத்துவ கழிவுகள் அதிகரிப்பு!

5) 22 மாநிலங்களில் முறையான மருத்துவ கழிவு மேலாண்மை நிலையங்கள் இல்லை என்பது வருந்ததக்க செய்தி!

6) நாட்டிலேயே மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டும் மருத்துவ கழிவு எரிக்க சிறப்பான வசதி உள்ளது! (31%,27%)

7) ஏழு வட கிழக்கு மாநிலங்களில் (2%) இந்த நிலை இல்லை!

8) மஹாராஷ்ட்ரா, கர்நாடகா செயல்பாடுகளைவிட குஜராத், தமிழ்நாடு, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொது மருத்துவ கழிவு மேலாண்மை நிலையங்கள் குறைவு!

நிலை மாறும் என்பதை நேர்மறை எதிர் பார்ப்புடன், காத்திருப்போம்!
…………………

இந்நிலையில் நம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில், மருத்துவ கழிவு எரிப்பு (Incineration )நிலையம், அமைக்க முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் திட்டம் இட்டு, செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது உண்மையில், மனதில் மகிழ்ச்சி!

இவ்வாறு, விழாக்களில் காற்று மாசு, பயன்பாடு செய்து வீணாகும் மின்னணு பொருட்கள், உயிரி மருத்துவ கழிவு பிரச்சனை என்ற மூன்று முக்கிய தற்கால சுற்று சூழல் சவால்கள் பற்றி சிந்தித்தோம், மேலும் சிந்திப்போம்!

முனைவர். பா. ராம் மனோகர்.
செயலர், கவின் மிகு தஞ்சை இயக்கம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *