சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்



 உணவுப் பழக்கங்களும்,
உலக வெப்பநிலை உயர்வும்!
முனைவர். பா. ராம் மனோகர்.

இருபது ஆண்டுகள் முன்பு நம் மக்களிடையே இருந்து வந்த உணவு முறை தற்போது இல்லை அல்லவா!? ஒவ்வொரு சிறு நகரங்களில் கூட வட இந்தியா, வெளிநாட்டு உணவு அங்காடிகள்! அங்கு சென்று உண்ணுகையில், ஒரு போலி நாகரீகம், கவுரவம், ஆனால் நம் உடல் ஆரோக்கியம், உணவு

கழிவு மாசு பற்றியும் சிந்தித்து பார்ப்பதில்லை!

மேலும் நாம் மேற்கொள்ளும் தினசரி உணவு பழக்கம் பற்றிய அக்கறை, நம்மில் பலருக்கும் இல்லை. நவீன உணவுகளுக்கு நாம் பலரும் அடிமையாகி விட்டோம். நகைச்சுவை நடிகர் வடிவேல் திரைப் படக்காட்சி ஒன்றில் கூறுவது, போல், இட்லி, தோசை போன்றவை ஆதிகாலத்து, நாகரீகம் அற்ற உணவுகளாக இளைய தலைமுறை எண்ணி, புதிய பெயர் புரியாத , எவற்றால் சமைக்கபட்ட உணவு என்பது அறியாமல் போதை போல் தொடர்ந்து சில குறிப்பிட்ட மேலை நாட்டு உணவுகள் உண்டு, ஆரோக்கியம் பாதிக்கச் செய்வது ஒரு புறம் இருப்பினும், இந்த உணவு வகை உற்பத்தி , உலக வெப்ப நிலை உயர்வுக்கும் ஒரு காரணி ஆக விளங்குகிறது.

நம் அனைத்து நாடுகளிலும் உருவாகிய உணவு பழக்கம், ஓரளவு, புவி வெப்ப நிலை உயர காரணம் என 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று விளக்குகிறது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP), பன்னாட்டு இயற்கை வள நிதியம் (WWF ), மற்றும் EAT & climate forest அறிக்கையில், புவி வெப்பம் உயர்வுக்கு காரணமாக உள்ள பசுமை குடில் வாயுக்கள் அதிகரிக்க உலகில் உள்ள 7.8. பில்லியன் மக்கள் (21.37%) செய்யும் உணவு உற்பத்தி முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியால், உணவு பழக்கத்தால்,, வளர்த்தல், அறுவடை, பதப்படுத்துதல், எடுத்து செல்லும் போக்குவரத்து,சேமிப்பு, சந்தைப்படுத்துதல், பயன்பாடு, கழிவு வெளியேற்றம் என பல்வேறு செயல்பாடுகள், இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

உலகில் ஒரு புறம் கிட்டத் தட்ட, 800 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு, பற்றாக்குறை, தரமற்ற உணவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நிலை இருக்கும் போது இப்படி ஒரு வினா எழுந்துள்ளது, வியப்பு அல்லவா! உணவு அனைவரும் உண்ணவே கூடாதா? என சிந்தித்து பார்த்தால், உண்மையில் நம் அறிவியல் அறிஞர்கள் சிலர் உணவு முறைகள், பருவ கால மாற்றம், நோய்கள் எனவும் தொடர்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். உணவு பழக்கங்கள் மேலை நாடுகளுக்கும், பல கீழை நாடுகளுக்கும் இடையில் வேறுபடுகின்றன.

159 நாடுகளில்744 வெவ்வேறு வகை உணவு உண்ணப்படுகின்றன. சாதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வில் ஒரு நாள் உணவு செலவு 28.4 டாலர் ஆகும். இதில் பழங்கள், காய்கறி 31.5%, வேர் முடிச்சு /விதை ,19%, மாமிசம் 15%, அடங்கியுள்ளது எனினும் வருவாய் குறைவான நாடுகளில் ஏழை மக்கள் இந்த அளவிற்கு செலவு செய்யும் நிலையில் இல்லை. டேனிஷ் நாட்டில் ஒரு வாரத்தில் கட்டாயம் 2

நாட்கள் தாவர உணவுகள் மட்டும் விற்கவும், மாமிச உணவினை ஒரு நாள் மட்டும் தான் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் உணவு, உலக வெப்ப மயமாக்கல் ஏற்படுத்துவதில் விவசாயம் தவிர அது தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் பங்கு வகிக்கின்றன. மாற்று முறை உணவு, போலி மாமிசம், முட்டை, பால் பொருட்கள் போன்ற தொழில் நுட்ப முறை உற்பத்தி வர வாய்ப்பு உள்ளது. விலை குறைவு காரணத்தால் மக்கள் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் உணவு தொழில் மென்மேலும் இயந்திரமயமாகினால், சூழல் மாசு, ஆற்றல் பிரச்சினை, போக்குவரத்து, பாக்கெஜிங், புவி வெப்பம் கூட ஏதுவாக கரிம காலடித்தடம் (CARBON FOOT PRINT )அதிகரிக்க கூடும்.

ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில், நவம்பர் 2021ல் நடந்த ஐக்கிய நாடுகள் கால நிலை மாற்றம் மாநாட்டில், விவசாயம் மூலம் புவி வெப்ப மயமாதல் அதிகரிக்கும் நிலை குறைக்க நடவடிக்கை ஏற்படுத்த தீர்மானம் உருவாக்கப்பட்டது.

மேலும், இத்தகைய உணவு பிரச்சினை உலக அளவில் இருப்பினும், உணவு வீணாதல், நவீன வெளிநாட்டு மாற்று உணவுகள், அதிக கொழுப்பு கலந்த உணவு பொருட்கள், சூழலுக்கு மிகுந்த பிரச்சனை ஆகியுள்ளது. பாரம்பரிய உணவுகள் மறக்கப் பட்ட நிலை, உள்ளூர் கரிம காய்கறி, மூலிகை, குறைபாடு, எனினும் உலக அளவில் உணவுண்ணும் பழக்கம் மாறுவது மிக கடின சவால் ஆகும். நம் நாட்டில் இளைய தலைமுறை, குழந்தைகள் மனங்களிலிருந்து, உணவு பழக்கம் செயல்பாடுகள், முறையில் உண்மைகள் உணர்வு பூர்வமாக அவர்களால் அறியப்படவேண்டும். உணவு பழக்கம் பற்றிய பாட திட்டம் பள்ளிகளில் தேவை ஆகும். ஊடகங்கள் மூலம் (youtube, FB, Telivision )பலரும் புதிய உணவு தயார் செய்யும் நிலை தனிமனித சுகாதார கேடு, சத்து குறைபாடு எனினும் உலக வெப்ப மயமாதல், உணவு மூலம் பெரும்பான்மை பங்கு அதிகம் ஆக வாய்ப்பில்லை. ஆனால் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகம் ஆகி அவற்றின் மூலம் பிரச்சினை கூடும் என்பது உண்மை.

தனி மனித ஆரோக்கியம் உணவு முறை மாற்றத்தினால் பாதிக்க பட்டு, அதன் தொடர் விளைவாக மருத்துவமனை,, மருந்து, கழிவு என்று ஒரு சங்கிலி போல் சூழல் பிரச்சனை ஒரு சவால் ஆகிவிடும்.

உணவு என்பது தனி மனித நுகர்வு என்றாலும், உற்பத்தி, சந்தைப்படுத்தும், அதற்குரிய தொடர் விளைவுகள் பற்றிய சிந்தனை நமக்கு தோன்றினால் .

விழிப்புணர்வு மேம்படும் வாய்ப்பு உள்ளது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *