#BookDay
புத்தகம் பெயர் : சாமானியனுக்கான சட்டங்கள்
ஆசிரியர் : வழக்கறிஞர் த. இராமலிங்கம்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்…
நூல் அறிமுகம்
“காவல்துறை உங்கள் நண்பன்” என்ற வாசகத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம்… ஆனால் காவல் நிலையத்தைப் பார்த்தாலோ, காவல் துறையினரை சந்தித்தாலோ நிறைய பேருக்கு கை கால்கள் உதர ஆரம்பிக்கின்றன.
நாம் நம்மடைய நண்பர்களைப் பார்க்கும் போது இப்படித்தான் நம் கைகால்கள் உதறுகின்றனவா? நம்முடைய இதயங்கள் பயத்தால் துடிக்கின்றனவா? இல்லையே…
நம்மடைய நண்பர்களைப் பார்க்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்… நமக்கு ஏதேனும் கஷ்டம் வநதால் அதை வீட்டிலுள்ளவர்களிடம் சொல்வதற்கு முன்னால் நண்பர்களிடம்தானே பகிர்ந்து கொள்கிறோம்…
காவல்துறை நம்முடைய நண்பர்கள் என்றால் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை காவல்துறை நண்பர்களிடத்தில் சொல்வதற்கு ஏன் தயக்கம்?
காரணம் காவல் நிலையத்தைப் பற்றியோ, நீதிமன்றத்தைப் பற்றியோ சட்டம் என்ன சொல்கிறது? என்பதை நாம் முறையாக அறிந்து கொள்ளவில்லை…
சட்டத்தை தெளிவாக தெரிந்து காெண்டால், தேவையற்ற பயங்கள் நம்மை விட்டும் நீங்கும், நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் அது உதவும்…
அந்த அடிப்படையில் சாமானிய மக்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக சட்டங்களை விளக்கியிருக்கிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்கள்.