தபோ விஜய் கோஷ் எழுதி தமிழில் ரவிச்சந்திரன் அரவிந்தன் மொழிபெயர்த்த பாரதி புத்தகாலயத்தின் சமரம் (Samaram) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சமரம் (Samaram) – நூல் அறிமுகம்

சமரம் (Samaram) – நூல் அறிமுகம்

இது ஒரு இடதுசாரி அரசியலை பின்புலமாக வைத்து பின்னப்பட்ட நாவல். துவக்கமே இடதுசாரியின் இளைய தலைவன் தமாலை சுடுவதாக துவங்குகிறது. முதலாளித்துவ தலைவன் ஜெய்சங்கர் பார்வையிலிருந்து கதை துவங்குகிறது. 1960 காலகட்டத்திய மேற்கு வங்க காங்கிரஸ் அரசின் முதலாளித்துவ சிந்தனையும், அது ஆடிய கொடூரமான வேட்டைகளையும், துணிந்து எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரு சிறிய துணிச்சலான, பொது உடமைப் போராளிகளைப் பற்றியதாகவும் இக்கதை இருக்கிறது. மொத்தம் 5 கதாபாத்திரங்கள் வாயிலாக இக்கதை சொல்லப்படுகிறது

கொலைகாரன் ஜெய்சங்கர், போராளிகள் தோழர் அளகேசன், தோழர் நந்திதா, தோழர் ஜகத் வல்லப் படுகொலை செய்யப்பட்ட இளந் தோழர் தமால் அவரின் தம்பி அசோக் இருவரும் இடதுசாரி அரசியலை எவ்வாறு கட்டுகிறார்கள், அவர்கள் பிரச்சாரம், போரட்டம், மார்க்சிய தத்துவங்களை புத்தகங்கள் வாயிலாக எடுத்துச் செல்வது, அதில் ஈர்க்கப்படும் தோழர் அளகேசன், நந்திதா இருவரின் அரசியலற்ற பயந்த குடும்ப பின்னணி, வேலைக்காகவும் கல்விக்காகவும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து பொருளியல் ரீதியாக கஷ்டப்படும் சூழல்,

எந்நேரமும் படிப்பு படிப்பு என்று இருக்கும் அளகேசனை மெல்ல ஈர்க்கத் துவங்கும் தமாலின் போராட்ட வடிவங்கள், மெல்ல மெல்ல தன்னையறியாமல் பொது உடமை தத்துவத்திற்கு மடை மாற்றம் செய்யப்படுவது, சகோதரி நந்திதாவும் தமாலும் காதல் வயப்படுவது, நந்திதாவின் தோழி ஷிபாவும் அசோக்கின் காதல் மிக மெல்லியதாக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. போராட்ட களத்திலும் காதல் பூ மலர்வது அந்த இளைய பருவத்திற்கே உரியது.

அன்றைய மேற்கு வங்க அரசின் கொடூரமாக அடக்குமுறைகளையும், அதை எதிர்த்து மக்களை திரட்டி களம் அமைத்துக் கொண்டிருந்த வர்க்க வெகுஜன போராட்டக்காரர்களின் செயல்பாடுகளையும், இந்நாவல் மிகச் சுவாரசியமாக நமக்கு சொல்கிறது. அரசியல் பின் புலத்தை வைத்து விறுவிறுப்பான நாவலை மிக அழகாக சொல்லியிருக்கிறார் மூல ஆசிரியர் தபோ விஜய கோஷ். அதன் சுவாரசியத்தை துளியளவும் குறைக்காமல் தமிழ் வழி கடத்தியுள்ளார் எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் இருவருக்கும் வாழ்த்துகள்.

முதலாளித்துவத்தின் கொடூரமும், தொழிலாளிகளை வஞ்சிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய உழைப்பு சுரண்டலும், தொழிலாளிகளை பணிய வைக்க அவர்கள் தரும் நெருக்கடிகளும் சொல்லும் தரமன்று. தன் உயிரைப் பாதுகாக்க ஏழைகளை கூலிப் படையாக்கும் அவர்களின் சாதுரியம், வாடகை வட்டி என அவர்கள் தரும் நெருக்கடி யாவும் காட்சிப் படுத்தப்படுகின்றன, கல்லூரியில் முதலாளிகளின் குண்டர்கள் புகுந்து கொண்டு மாணவர்கள் சங்க தோழர்களை வெட்டி சாய்க்கும் கொலை பாதகமும் அதை எதிர் கொள்ளும் மாணவர்களின் மன உறுதியும் தீரமும் மனம் பதைக்க சொல்கிறது.

இடதுசாரிகள் எவ்வாறு கட்சியை கட்டுகிறார்கள், எளிய மக்கள் மத்தியில் அரசியலை முன்னெடுத்து செல்கிறார்கள், கட்சித் திட்டம் வேலைத்திட்டம் என்று இடது சாரிகள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவலாக மலர்ந்திருக்கிறது. போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்து மடிகிறான் இளம் தோழன் தமால்.

தமாலுடன் அந்தப் போராட்டம் முடிவிற்கு வரவில்லை. அதன் நீட்சியாக முன்னெடுத்து செய்கிறார்கள் உடன் பயணிக்கும் தோழர்கள்.பொதுவுடமைத் தோழர்களின் வாழ்வியலை துயரம் தோய்ந்த சுவையுடன் சொல்லிச் செல்கிறது சமூகச் சமர் புரியும் சமரம்.

நூலின் தகவல்கள் : 

நூல் : சமரம்
வங்க மூலம் : தபோ விஜய கோஷ்
தமிழில் : ரவிச்சந்திரன் அரவிந்தன்
பக்கம் : 321
விலை : 200
ஆண்டு :  2017
வெளியீடு : சப்னா புக் ஹவுஸ்

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 


செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ஜோரா

    விமர்சனம் புத்தகத்தை படித்தது போல் உள்ளது, அருமையான விமர்சனம்,நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *