சம்புகன் கவிதைபொங்கும் புனலாய்
பூத்து நிற்கும் புன்சிரிப்பு
பசிப்பிணி தீர்த்திடவே

களம் புகுந்தாய் என் கண்ணே!

வேளான்மை காத்திடவே
உலகுக்கு உணவிடவே
போர்தொடுத்தார்

எம் வீரர்

களம் புகுந்த வேள்குடியின்
பசிதீர்க்கும் அன்னை நீ
உன்பிஞ்சுக் கரத்தாலே

ஆசை தீர உணவிடுவாய்!

சிறுபிள்ளைக் குணவூட்ட
அம்மன் வந்ததாய்க் கேட்டதுண்டு.
இன்று நாங்கள் கண்டிடவே

அம்பிகையாய் நேரில் வந்தாய்!

உழவன் குடியழிக்க
ஆயிரம் கோடி கிளம்பினாலும்
நீ அளிக்கும் ஆற்றலுடன்

முறியடிப்பர் எம் வீரர்!

வாழ்க நீ சிறு மலரே!
சம்புகன்