நூலறிமுகம்: சம்ஸ்காரா – ரேவதி 

நூலறிமுகம்: சம்ஸ்காரா – ரேவதி 

 

யு.ஆர். ஆர் அனந்தமூர்த்தி அவர்கள் எழுதிய இந்நாவல், ப்ளேக் எனும் தொற்று நோய் ஏற்பட்ட காலத்தில், கருநாடக மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் பிராமண அக்ரஹாரத்தில்  நடந்தேறும் பற்பல நிகழ்வுகளை யதார்த்தமாக சித்தரித்துள்ளது.

அக்ரஹாரத்தின் பண்பாட்டு விழுமியங்களை மீறி தாசி ஒருத்தியோடு வாழும்  நாரணப்பன் என்ற பிராமணனின் இறப்பு ப்ளேக் தொற்று நோயால் ஏற்படுகிறதுஇதனைத் தொடர்ந்து  நடக்கும் நிகழ்வுளே கதையின் சாராம்சம்இறந்தவன் பிராமண பண்பாட்டிற்குக் கேடு  செய்யும் வகையில்குடி, மாமிசம், தாசி மோகம் என வாழ்ந்தமையால்அவனுடைய ஈமச்சடங்குகளை மேற்கொள்ள உறவுக்கார பிராமணர்கள் யாரும் பொறுப்பேற்க மறுக்கின்றனர்.  

இந்நிலையில்தங்களுக்கு வழிகாட்ட வேண்டி, அப்பிராமணர்களின் குருவான பிராணேசாரியாரிடம் இவ்விஷயம் குறித்து   கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறதுஅக்ரஹாரத்தில் பிரேதம் எடுக்கப்படும் வரை உணவு, தண்ணீர் கூட குடிக்க முடியாத கட்டுப்பாடு இவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்குகிறதுஇருந்த போதிலும்ஈமச்சடங்கு மேற்கொள்ள யாருக்கும் மனம் வரவில்லை.

இறந்த நாரணப்பன் தாசி சகவாசம் கொண்டதால்,  ‘ஈமச்சடங்கினை உறவுக்காரன் என்ற முறையில் மேற்கொண்டால்அதன் விளைவால் ஏற்படும் தோஷத்தைக்  கழிக்க பரிகாரம், பசுதானம், பூஜை மேற்கொள்ள வேண்டி வரும், அதற்கு செலவிற்கு  நாம் எங்கே செல்வதுநமக்கேன் பாடு’ எனும் உளப்பாங்கே அனைவரிடமும் வெளிப்படுகிறது.

யின் ...
யு. ஆர். அனந்தமூர்த்தி

இதற்கிடையே ஈமச்சடங்கினை மேற்கொள்ளும் செலவிற்காக நாரணப்பன் தனக்கு அணிவித்த நான்கு வட சங்கிலிகங்கண தங்க வளையல்களை தாசி சந்திரி ஊரார் முன் வைக்கிறாள்இது பிரச்சனையை தீர்க்காமல் அதிகரிக்கவே செய்கிறது

இக்கட்டான சூழ்நிலையில்சவ தகனம் குறித்து வேதங்களில்  வழியேதும் செய்யப்பட்டுள்ளதா என  பிராணேசாரியார் அலசி ஆராய்ந்து வழியேதும் புலப்படாமல் களைப்படைந்து விடுகின்றார்இந்தக் கணத்தில், பிராமணிய விழுமியங்கள், மனித மாண்புகளை  மறந்து, எவ்வளவு கெட்டி தட்டிப் போய் உள்ளது என்பது தெள்ள தெளிவாக  படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது

தாசி சந்தரிக்கு தன்னால் தானே இதெல்லாம் என நினைத்து பிராணேசாரியாரிடம் பரிவு கலந்த  ஈர்ப்பு  எற்படுகிறது. உடல்நிலை குன்றிய மனைவிக்குப் பணிவிடை செய்வதே ஆத்ம திருப்தி என்று வாழும் பிராணேசாரியார் சந்தர்ப்பவசத்தால்  அவளிடம் தன்னையே இழக்க நேரிடுகிறது.   

உயர்ந்த பண்பாட்டிலும் அருமையான ஒழுக்கத்திலும் வாழும் சிறந்த மனிதர்கள் ஒரு கணநேரத் தவறினால் எவ்வளவு சீரழிவினையும் அவமான குற்ற உணர்வுகளையும் சந்திக்க நேரிடுகிறது என்பதையும், இதன் தொடர்ச்சியாக மனம் பேதலித்துவாழ்க்கை தடம் மாறிதாசியுடனேயே தனது வருங்காலத்தினை வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்து கட்டுப்பாடுகளை மீறி வெளிவரத் துடித்து,   சில அற்ப சந்தோசங்களில் மயங்கி,   குழம்பி  வாழ்க்கை அதல பாதாளத்திற்கு இடர இருந்த நிலையில், தற்செயலாக ஏற்படும் சிற்சில அனுபவங்களால் மனம் பக்குவப்பட்டு, மீண்டும் பாரம்பரிய வாழ்க்கையே தனக்கு ஏற்றது என  பழைய வாழ்க்கைக்கு அவர் திரும்புவதும் இந்நாவலின்  உயர்வான சிறப்பம்சம்.

சம்ஸ்காரா – விதானம்

ப்ளேக் நோய் தொற்று எற்பட்டுள்ளதை அறியாமல்எலிகள் மொதுமொதுவென  எல்லோர் வீட்டின்  உக்கிராணங்களில் சுற்றி வருவதை கண்டு குழந்தைகள் குதூகலிப்பதும், பெரியவர்கள்பெண்கள் அருவருப்பு கொள்வதும்ஒவ்வொரு வீட்டின்  கூரையிலும் கழுகுகள் வந்தமர்ந்து எலிகளை உயிருடன் கொத்தி கொண்டு செல்வதும் தெருவே கழுகுகளால் அல்லோலகல்லோகப் படுவதும் திகிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதுசுகாதார சீர் கேட்டினையும் கோடிட்டுக் காட்டுகிறது.

நடக்கும் சம்பவங்களை அறிவு கொண்டு உணராமல், இறந்து போன நாரணப்பனின் ஆவிதான் ஆட்டிப் படைக்கிறது என அறியாமையால்  ஜனங்கள் பிதற்றுவதும் வேடிக்கை கலந்த வேதனை.

ஜனங்கள் சாதியின் பெயரால் கட்டுப் பெட்டிகளாக  மனித மாண்பை அடகு வைத்து, அறியாமையால் வாழ்ந்துள்ளனர்  என்பதும், தொற்று நோயின்  கோரக் கரம்  பேதம் பார்க்காது யாரையும் பதம் பார்க்கும் என்பதையும் அதற்கு சாதி, மதஆசார அனுஷ்டானங்கள் ஏதும் விதிவிலக்கல்ல என்பதையும் படம் பிடித்து காட்டுகிறது  இந்நாவல்.  

சிறந்த ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றும் உயர்ந்த மனிதர்கள் வாழ்வில் சறுக்கும் போது எற்படும் அடி மிக பலமானதாக இருக்கும் என்றும் இவர்கள் மீண்டு வர பிரம்ம பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் தெளிவுபடுத்துகிறது நாவல்.

சம்ஸ்காரா 

யு ஆர் அனந்தமூர்த்தி 

தமிழில் டி எஸ் சதாசிவம் 

அடையாளம் வெளியீடு.
156 பக்கங்கள். விலை ரூ.160/-

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *