தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 13: சனாதனம்: எழுத்தும், எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

 

 

 

 

 

இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் தொடுக்கும் மத்திய பட்ஜெட்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை குறித்து பல விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை எப்படி மக்களை வஞ்சித்து பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இதோ, விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் ஆதார விலை குறைந்தால், அவற்றுக்கு நிவாரணம் தருவதற்கு கடந்த நிதி நிலை அறிக்கையில் ரூபாய் 1,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் ஒரு லட்சமாக வெட்டிசுருக்கப்பட்டது. இப்படி செய்ததத்ற்கு ஒரு பின்னணி உள்ளது. விவசாயத்தைக் கார்ப்ரேட் மயமாக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் தங்களது உறுதி மிக்க, நெடிய விடாப்பிடியான போரட்டத்தால் திரும்பப் பெற வைத்தனர் விவசயிகள். மெஜாரிட்டி இருந்தும் போராட்டத்திற்கு அடிபணிந்து திரும்பப் பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத மோடி அரசு அவர்களைப் பழி வாங்க மட்டுமல்ல, மறைமுகமாகக் கார்ப்ரேட் நிறுவனங்களை ஆதிக்கம் செலுத்த வைக்கவும், தனது வர்க்க நலன் சார்ந்தும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இப்படிப் பல விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இது முக்கியமான விவாதங்களாகும். ஆனால் இன்னொரு விவாதமும் நடத்தப்பட வேண்டும். வலதுசாரி சித்தாந்த ஆட்சியில் நிதி நிலை அறிக்கைக்கூட எப்படி சிறுபாண்மை மக்களை தாக்கும் என்பதுதான் அது. இந்த நிதி நிலை அறிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை எந்தப் பின்னணியில் நடத்துகிறது என்று பார்ப்பது மிகவும் அவசியமாகும். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் கல்வி வாய்ப்பு மீது கடும் தாக்குதலை இந்த நிதி நிலை அறிக்கை செய்துள்ளது. ஒரு ஏற்கனவே உள்ள உண்மைத் தன்மையுடன், சச்சார் கமிஷன் பரிந்துரையின் பின்னணியுடன் இதை அனுகலாம்.

2004 இல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ’குறைந்தபட்ச செயல்திட்டம்’ அறிவித்தபடி 2005 மார்ச் 9 அன்று முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி சார்ந்த நிலையைக் குறித்து ஆய்வு செய்ய சச்சார் குழுவை நியமித்தது. அது மட்டுமல்ல 2006 ஜன 29 அன்று முதன் முதலாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான அமைச்சகமும் (Ministry of Minority Affairs) டெல்லியில் உருவாக்கப்பட்டது. சச்சார் குழு 2006 நவ 17 இல் தன் அறிக்கையை அளித்தது. அதன் பின் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த அந்த ஐ.மு.கூ அரசு தனது பதவி முடியுமுன் 2013 ஆக 5 அன்று பேரா. அமிதாப் குண்டு தலைமையில் பத்துபேர் கொண்ட மற்றொரு வல்லுனர் குழுவை அமைத்தது. அது ‘சச்சாருக்குப் பிந்திய காலகட்டம் பற்றிய மதிப்பீட்டுக் குழு’ (Post Sachar Evaluation Committee / Kundu Committee) என அறியப்பட்டது.

சச்சார் அறிக்கைக்குப் பிந்திய காலத்தில் சிறுபான்மை மக்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமிதாப் குண்டு குழு செப் 29, 2014 அன்று தன் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது மத்தியில் பா.ஜ.க அரசு பதவியில் இருந்தது. குண்டு குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நரேந்திரமோடி அரசு குண்டு அறிக்கையை முற்றாகக் கைவிட்டுவிட்டது. “மொத்த மைனாரிட்டிகளையும் பற்றிப் பேசாமல் குண்டு அறிக்கை முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளது. அது மேற்கொண்ட ஆய்வு முறை தவறானது. தகவல்கள் ஒழுங்காகத் திரட்டப்படவில்லை” என்றெல்லாம் கூறி பேரா. அமிதாப் குண்டு குழு அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் குப்பையில் எறிந்தது. பாஜக தூக்கி எறிந்த அறிக்கை கீழ்கண்டவாறு தரவுகளைத் தருகிறது.

1. மக்கள்தொகையில் சிறுபான்மையினர் கிட்டத்தட்ட 25 சதம். ஆனால் 2006-07 முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில் ‘குரூப் ஏ’ அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினர் வெறும் 7.5 சதம்தான். ‘குரூப் பி’ யில் 9.1 சதம்; ‘குரூப் சி மற்றும் டி யில்’ 8.6 சதம் மட்டுமே.

2. முஸ்லிம்கள் மத்தியில் கல்வி அறிவு இந்துக்களைக் காட்டிலும் குறைவு என்ற போதிலும் கல்வி அறிவு வீதத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. எனினும் கல்வி பெறுவதில் முஸ்லிம்களின் வீதம் ஆகக் கீழாக உள்ள பழங்குடியயினரின் (ST) அளவே உள்ளது.

3. எடுத்துக்காட்டாக சச்சார் அறிக்கையின்படி 2001ல் இருந்த மொத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,209. இதில் முஸ்லிம் அதிகாரிகள் வெறும் 128 தான். அதாவது 4 சதம். மக்கள் தொகையில் 14.2 சதமாக உள்ள முஸ்லிம்கள் ஐ.பி.எஸ் அதிகாரத்தில் வெறும் 4 சதமாகவே இருந்தனர். ஜனவரி 2016ல் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 3754 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ளது. அதாவது வெறும் 3.19 சதம்தான்.

4. 2006 ல் இப்படி மாநில அளவில் பதவி உயர்வு மூலமாக ஐ.பி.எஸ் ஆனோர் 912 பேர். இதில் 65 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் (7 சதம்). 2016 ல் இப்படிப் பதவி உயர்வு பெற்றோர் 1150 பேர்.. இதில் முஸ்லிம்கள் 44 பேர்தான் (3.82 சதம்). அதாவது மாநிலங்களிலிருந்து பதவி உயர்வோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு குறைந்து கொண்டே போகிறது. போட்டித் தேர்வில் பங்குபெற்று ஐ.பி.எஸ் அதிகாரிகளானோர் 2006 ல் 2,297 பேர் (2.7%). 2016 ல் இப்படித் தேர்ந்தெடுக்க்ப்பட்டோர் 2,604. இதில் முஸ்லிம்கள் 76 பேர் (2.91%).

5. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 2016 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 172. இதில் உ.பி ஐச் சேர்ந்தோர் 48. பீஹார் மாநிலத்தவர் 34. ஜம்மு காஷ்மீர் 22. தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்டபிற 26 மாநிலங்களையும் சேர்ந்தோர் 58 பேர்கள் தான்.

6. ஒட்டு மொத்தமாகக்காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படையாகக் குறைந்து வருகிறது. 2006ம் ஆண்டில் மொத்த காவல்துறை பணியாளர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் வீதம் 7.63 சதம். இது 2013ல் 6.27 சதமாகக் குறைந்தது. 2014ல் பா.ஜ.க ஆட்சி வந்தபின் காவல்துறை போன்ற sensitive department களில் இது போன்ற புள்ளி விவரங்களைத் தர இயலாது என அறிவித்துள்ளது.
இந்த பின்னணியில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை (2023-24) எப்படி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது என பார்க்கலாம்.

சிறுபாண்மை அமைச்சகத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டை விட 38% குறைக்கப்பட்டுள்ளது. இது சிறுபாண்மை மக்கள் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று சொல்லாமலேயே விளக்கும்.
அனைத்தையும் உள்ளடக்கிய நிதி நெருக்கடியின் கீழ் மிக மோசமாக பாதிக்கப்பட்ட திட்டம் என்பது மதரஸாக்களுக்கான கல்வித் திட்டம் ஆகும். இது 93% நிதி குறைப்பினால் தடுமாறும் நிலையை சந்தித்ததுள்ளது, கடந்த ஆண்டிற்கு முன் 174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு 160 கோடியாக குறைக்கப்பட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் 10 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. இது எத்துனை மோசமான தாக்குதல். சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்காக இருந்த மொத்த ஒதுக்கீடு ரூபாய் 2,515 கோடியிலிருந்து 1,689 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர்களின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 50% க்கும் சற்று அதிகமாக அதாவது ரூபாய் 41 கோடியிலிருந்து 20 கோடியாக குறைக்கப்பட்டடுள்ளது. மேலும் ப்ரீமெட்ரிக் நிதியை பெருமளவில் குறைத்துள்ளது.

சிறுபான்மையினருக்கான உதவித்தொகை ரூபாய் 1,425 கோடியிலிருந்து ரூபாய் 433 கோடியாக குறைந்துள்ளது. வரவிருக்கும் நிதியாண்டு. பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJYK). PMJYKக்கான ஒதுக்கீடு ரூபாய் 1,650 கோடியிலிருந்து 600 கோடியாக குறைந்துள்ளது.

சிறுபான்மை மாணவர்கள் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எழுத மோடி அரசால் பெருமையாக விளம்பரம் செய்யப்பட்ட திட்டம்தான் நை உதான் திட்டம் (Nai Udaan Scheme) இது குறித்து சிலாகித்து பாஜகவினர் எல்ல இடங்களிலும் பேசி வந்தனர் ஆனால் அந்தத் திட்டம் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் அந்தரத்தில் தொங்குகிறது. சிறுபான்மையினரின் தலைமைத்துவ வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 2.5 கோடியிலிருந்து வெறும் 10 லட்சமாக குறைந்துள்ளது. ஹமாரி தரோஹர் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 2 கோடியிலிருந்து வெறும் 10 லட்சமாகக் குறைந்துள்ளது.

இன்னொரு மோசமான பாதிப்பு சிறுபான்மையினர் மத்தியில் திறன் மேம்பாடு முன்முயற்சி நிதி 2022 – 23 இல் ரூபாய் 235 கோடியாக இருந்தது தற்போது வெறும் 10 லட்சமாக குறைந்துள்ளது. சிறுபாண்மையினரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான நை மன்சில் திட்டம், ரூபாய் 46 கோடியிலிருந்து 10 லட்சமாக வெட்டி சுறுக்கப்பட்டுள்ளது. சிறுப்பாண்மையினர் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி வளர்ச்சிக்கான பாரம்பரிய கலைகள்/கைவினைகள் திட்டம் (USTTAD) கான நிது 47 கோடியிலிருந்து 10 லட்சமாக பெயரளவுக்கு ஒதுக்கப்படுள்ளது.

இதுவெல்லாம் வெறும் நிதி ஒத்துக்கீட்டில் குறைப்பாக மட்டும் பார்க்க இயலாது. ஏனெனில் வலதுசாரிகளில் வெறுப்பு அரசியலின் ஒரு கண்ணி இந்த பொருளாதார தாக்குதல். சச்சார் கமிஷனும், அதன் பின் குண்டு கமிஷனும் சிறுபாண்மையினர் வாழ்க்கை நிலை குறித்தும் அதை மாற்றுவதற்கான ஆலோசனைகளை மிகுந்த அக்கறையுடன் அறிக்கைகளை கொடுத்த பின்னரும், இஸ்லாமியர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை கிடப்பில் போட்டது மட்டுமல்ல, இஸ்லாமிய மக்கள் வாழ்க்கையில் மேலும் தாக்குதல் நடத்து வகையில் அவர்களுகாக நிதி ஒதுக்கீட்டை வெட்டி குறைக்க்கிறது பாசிச குணம் கொண்ட ஆட்சி.

பாசிச அமைப்புகள் உலகம் முழுவதும் செய்யும் எதிர் அடையாள கட்டமைப்பும், அந்த கட்டமைப்பைக் காரணம் காட்டி பெரும்பாண்மை இனத்தையோ அல்லது மதத்தையோ ஒன்று திரட்டுவதும், மோதல்களை உருவாக்குவதும் அடிப்படை உத்தியாக இருக்கிறது. அதன் இந்திய வடிவம்தான் சங் பரிவார் அமைப்புகள் வார்த்தைகளால் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருவதும், முடிந்த இடங்களில் தாக்குதல் தொடுப்பதும். இவர்களில் விஸ்வகுருவான நரேந்திர தாமமோதர் மோடி தனது ஆட்சியில் இந்த பணியை நிதி நிலை அறிக்கை மூலம் செய்கிறார்.

இவர்களின் நோக்கம் ஒன்றுதான். இஸ்லாமியர்களை இரண்டாம் குடிகளாக மாற்றுவது. அதை அவர் அவர் இடங்களிலிருந்து செய்கின்றனர்.

(தரவுகள் : அ.மார்க்ஸ் கட்டுரை மற்றும் தி இந்து ஆங்கில நாளிதழ்)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *