காலத்தால் அழிக்கவியலா
வணிகத் தடயம்
சந்தை என்னும் வணிகக் கலாச்சாரம், மனிதகுலம் சந்தித்த விந்தைகளுள் ஒன்று.
அது, இரத்தமும் சதையுமான ஒரு சமூகப்பண்பாட்டு ஒருங்கிணைப்பு.
பொருட்களை விடவும் அதிகமாகப் பாசங்களைப் பங்கிட்டுக்கொள்ளும் .
பண்டமாற்றை, தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ஆச்சர்யம்!
தத்தம் பகுதியில் விளையும், தத்தம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படும் பொருட்களையும் ஒரு சந்தை என்னும் பெயரிடப்பட்ட இடத்தில் வைக்கும் பொழுது, குவிக்கப்பட்ட பொருட்களுக்கு இணையாக மனித மனமும் குவியத் தொடங்கிவிடுகின்றது.
வாழ்வியல் சூழலால் கிராமங்களிலிருந்து நகரங்களில் குடிபெயந்தவர்களுக்கெல்லாம் சந்தை என்னும் சொல்லைக் கேட்டவுடன் மனதுக்குள் கிராமிய நறுமணம் தவழ்ந்து விடும்.
முனைவர் யாழ்.எஸ். இராகவனின் இந்தச் சந்தை நாவலானது, நாற்பதாண்டுகளுக்கு மேலாக மனிதர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சந்தையைப் பேசுவது.
வடநாட்டவரின் ஆதிக்கத்தினால் இங்குள்ள சந்தை, மெல்ல மெல்ல தன் சுயத்தை இழப்பதை உணர்த்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு திகழ்கின்றது.
இந்த நாவலை ஒரு திரைக்கதையினைப் போலவே வடிவமைத்துள்ளாரோ என்று நினைக்கும் அளவுக்கு வாசிக்கும் பொழுது கருதத் தோன்றுகிறது.
ஒரு சம்பவத்தை கதாபாத்திரங்களோடும் திரைப்பட நடிகர்களோடும் இணைத்து விடுவது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
பட்லர் பொன்னுச்சாமி தொடங்கி அவரின் பேத்தியான பேச்சியம்மாளின் காலம் வரையிலான கதையில் இடை இடையே எண்ணற்ற கதாபாத்திரங்கள்.
அவர்களுக்கான வாழ்வுகள் இழையோடும் காதல்கள், போகிற போக்கில் சிரிக்க வைக்கின்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் என ஒரு சமூகச் சந்தைக்குள் நுழைந்து திரும்பிய உணர்வு ஏற்படுகின்றது.
இத்தனை கதாபாத்திரங்களில் தேநீர்க்கடைக்காரரான தஞ்சை பார்த்திபன் எனக்கு மிகவும் பிடித்தமானவராகிப் போகின்றார்.
பெரிய வணிக நிறுவனங்களின் வரத்துக்குப்பிறகும் நரைத்த தலையோடு காய்கறிகளைப் பரப்பி விற்கும் பேச்சியம்மாளைக் காட்சிப்படுத்துவதோடு முடிவடையும் இந்நாவல், மண் சார்ந்த இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல் சார்ந்த மறக்க முடியாத அழிக்க முடியாத அதன் தடம் இன்னும் நம்மிடம் பேசுபொருளாக தன் இருப்பினைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. என்பதைப்புலப்படுத்துகின்றது.
கூடல் தாரிக்
நூலின் பெயர் : சந்தை (நாவல்)
ஆசிரியர்: யாழ். எஸ். ராகவன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 240 /
.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பதி