எனக்கு கவிதைகள் எழுதவும், படிக்கவும் ஆர்வம் அதிகம் இருப்பதால் கவிதை நூல்கள் விரைவில் படித்து என்னால் உணர முடியும் என்பதால் விமர்சனமும் விரைந்து பகிருகிறேன்.
சகோதரி சுமதி பற்றி முதலில் நான் கூறுவது, தஞ்சாவூர் மாவட்டத்தின் மதிப்புமிகு முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள் இவரின் திறமையையும்,இவர் எழுதும் விமர்சனத்தையும் நிறைய இடங்களில் பகிர்ந்துள்ளார். அதிக புத்தகங்கள் படித்தும் அதற்கான விமர்சனத்தை மிக சிறப்பாக எழுதும் ஆற்றல் உடையவர். சரசக்காற்று என்ற தலைப்பில் தற்போது வெளியிட்டுள்ள இப் புத்தகம் படிப்பதற்கு ஆர்வமாகவும்,ஆசையாகவும் உள்ளது.
திருமதி சுமதி ஆசிரியர் அவர்களின் இப்புத்தகத்திற்கு தமிழ்நாட்டின் முதல்வரின் நேர்முக உதவியாளர் ராம வேல்முருகன், கவிஞர் வல்லம் தாஜு பால் மற்றும் நாம் அனைவரும் நேசிக்கும் சிறந்த கல்வியாளர், ஐயா.மு. சிவக்குமார், துணை இயக்குனர் அவர்களும் மிகச் சிறப்பாக வாழ்த்துரை வழங்கி இவரின் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டியுள்ளனர்.
80 பக்கங்கள் கொண்ட சரசக்காற்றில் உள்ள கவிதைகள் அனைத்தும் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் இவரை வார்த்தைகளுக்கு நேசகராக மாற வேண்டும். அனைத்தும் அற்புதம்.
நம் சிந்தனைகளை கவிதை மூலம் தருவது என்பது ஒரு உன்னதமான திறன். அப்படிப்பட்ட புதுக்கவிதைகள் அதிகம் இவரிடம் விளைகிறது அதை நாம் ருசித்து தான் ஆக வேண்டும்.
என்னை ஈர்த்து ரசிக்க வைத்த இவரின் சில கவிதைகளை உங்களிடம் பகிர்கிறேன்.
“லப்டாப் என்ற ஒலிக்கு பதிலாக என் பெயரை மட்டுமே உச்சரிக்கும் உன் இதயத்திடம் கேட்டுப்பார்”
உண்மையாய் காதலிக்கும் தலைவனின், தலைவியின் காதல் மீது கொண்ட நம்பிக்கையை உணர வைத்துள்ளது.
இக்கவிதை தலைவியின் ஆசையான வார்த்தைகளும் அவளுள் புதைந்திருக்கும் காதலையும் தலைவனின் காதோரம் சினுங்கிக் கொண்டே பேசும் போது தலைவன் ஆனந்தம் அடைகிறான் என உணர செய்கிறது.
“எப்படியும் நீ வர மாட்டாய் என்று தெரிந்திருந்தும் வருவாய் என விழிகள் உறங்க மறுக்கிறது”
இக்கவிதையில் இன்றைய காலகட்டத்தில் காதலியும் காதலனும் whatsapp மூலமாக உரையாடும் போக்கினை உணர்த்துகிறார்.
ஆம்.. காதலி/காதலன் ஆசையோடும் அக்கறையோடும் சாப்பிட்டாயா? என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய் என கேட்பதற்காக உறங்க மறுத்து காதலர்களின் உள் மனதின் உணர்வை அறிய காத்துக் கொண்டிருப்பார்கள் பேசுவதற்கு ஆன்லைன் வரும்வரை.
“இதயத்தில் இதமாக அமர்ந்த ஆனந்த காதலில் மௌனம் சித்திரவதையை”
இக்கவிதையின் மூலம் காதலியின் நேசம் சோகம் இரண்டையும் உணர முடிகிறது. பேச வாய்ப்பில்லாமல் இருவரும் மௌனமாக சிந்தித்துக் கொண்டே இருப்பதால், அதனை சித்திரவதையே என கூறுகிறார்.
“மயில் போல கழுத்தழகி
குயில் போல குரல் அழகி
கயல் போல விழியழகி
மான் போன்ற கட்டழகி”
இந்த கவிதை ஒரு பெண்ணின் அழகைப் பற்றிஉள்ளது. அவளுடைய கழுத்து, குரல், விழிகள், கட்டு, குணம் போன்றவை பல்வேறு இயற்கைப் பொருட்களுடன் ஒப்பிட்டு உள்ளது. இதன் மூலம், அந்தப் பெண் மிகவும் அழகானவள், இனிமையானவள், அன்பானவள் என்பது தெரியவருகிறது.
ஒரு ஆண் தன் காதலியையும் அல்லது மனைவியை எப்போதும் ரசித்திடும் மனம் கொண்டவராக சில நாட்கள் மட்டும்தான் சிலர் இருப்பர். சில நாட்களுக்குப் பிறகு அழகி அழகி என்று சொன்னவர் நீ கிழவி என்று சொல்லும் மனம் படைத்தவரும் உண்டு என்பதை நான் அறிவேன். அழகையும் அவளது குணத்தையும் ஒரே மாதிரியாக எப்போதும் ஆண்கள் கொண்டாட வேண்டும் என உணரப்படலாம்.
“உன் நினைவை மறக்கவே
நான் நித்தம் மாத்திரை
என் காதல் தேவதையோ தன்னறையில் நித்திரை
உனக்கு நடந்தது திருமணம்
எனக்கு பிடித்ததோ பைத்தியம்”
இந்த கவிதை ஒரு ஆணின் காதல் தோல்வியைப் பற்றியது. காதலித்த பெண் திருமணம் செய்துகொண்டதால், காதலன் மிகவும் துன்பப்படுகிறான். அவளை மறக்க முடியாமல், தினமும் மாத்திரை சாப்பிடுகிறான். அவளுடைய திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக உணர்கிறான் என உண்மை காதலுக்கு விளையும் துன்பத்தை அழகாய் விளக்கியுள்ளார்.
இறுதியாக ஆசிரியர் சுமதி அவர்கள் விவசாயத்தின் தேவையும் உணவின் முக்கியத்துவத்தை பற்றியும் தெளிவாக ஒரு கவிதையில் சுட்டிக்காட்டி அவரின் சிந்தனையை சற்று ஓய்வெடுக்க நிறுத்தி வைத்திருப்பார்.
இவரின் கவிதைகள் படிக்கும் ஆண் காதலனாகவும், பெண் காதலியாகவும் அமையப்பெறும் நோக்கில் கவிதைகள் மிக சுவாரசியமாக உணர்வு மிக்கதாக உள்ளது.
நூலின் தகவல்
புத்தகத்தின் பெயர் : “சரசக்காற்று”
ஆசிரியர் : கவிஞர் சுமதி என்னும் மாலதி திரு
வெளியீடு : விஷாலினி பதிப்பகம்,2024
விலை : ரூ.150
எழுதியவர்

தி.தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்
முதுகலை ஆசிரியர்
அரசு உதவிபெறும் தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி,
ஆவணியாபுரம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

