களையெடுப்போம் வாரீர்..! – ச.சசிகுமார்உழும் கலப்பைக்கு பின்னால் மெல்ல நடந்து
ஆதரவாய் ஓட்டுக்கேட்டபோது
உயர்த்திவிட்டது இந்த கலப்பைதான்

பசியென அழைத்தபோது
உணவுகொடுத்து
பதவியென வந்தபோது
மாலையிட்டு மரியாதையை
தந்ததும் இந்த கலப்பைதான்

வயிறுள்ள உயிருக்கெல்லாம்
வாழ்வு தந்த
இந்த இதயமற்ற மனிதனுக்கு
இரக்கப்பட்டதும்தான்
இந்த கலப்பைதான்

ஆடையின் அவசியம்
வார்த்தைகளின் அலங்காரமென
எதைத் தொட்டாலும்
முதல் நாகரீகத்தின் கோடுகளில்
வரலாறு சொல்லும்
நதியின் பக்கம் விவசாயம்
செய்ததை

பிழைத்துக்கொண்ட பிறகு
விதைப்பவனை உதைப்பதும் விரட்டிவிட்டுப் பிடுங்குவதுமாய் தீவிரம் காட்டும் கோமாளிகளே!
நீங்கள் அழிவைத்தேடிச் செல்கிறீர்களென்பது ஆணித்தரமான உண்மை

பாரதம் நீ வாழவேண்டுமானால்
சில பயிர்களினூடே களையெடுப்பது அவசியம்
கைகோர்ப்போம் வாரீர் .

ச.சசிகுமார்.