வயலெங்கும் கண்ணீர்..! — ச.சசிகுமார்.சோறுபோட்டு சாவுயென்று  சேத்துல கால் வைத்தவனுக்கு
அவன் வயிறு கழுவவாவது விட்டிருக்கின்றாயா
அரசே!
உரத்தை ஏற்றிவிடுவாய்
உயிர் வளர்க்கும்
நெல்லின் விலையை குறைத்துவிடுவாய்
ஊக்க மருந்தென்று விளம்பரப்படுத்தி கொடுப்பாய்
அவன் ஊதியத்தை அதிலே உறிஞ்சுவிடுவாய்
காலத்துக்கும் தண்ணீர்
கதிரறுக்கும் வரை வருகிறாதாயென்றால்
கர்நாடகக்காரனிடம் கையேந்துவதுபோல்
ஒரு நடிப்பை மேவவிட்டு
ஓட்டுக்காக உச்சி மாநாடு போடுவாய்..
எங்கே பிழைக்கவிட்டீர்கள்
வயலை பிளந்து ரோடுபோடுவீர்கள்
கேளாமலே உயிர் மண்ணைத் துளைத்து மீத்தேன்
எடுப்பீர்கள்
அரசுக்கு தேவையென்றால்
எதற்கும்
புறம்போக்கு நிலமென பிடுங்கிக்கொள்வீர்கள்
காலங்காலமாக நாங்கள்
போராட்டம் நடத்த வேண்டும்
கார்ப்பரேட்காரனிடம் ரகசியமாய் விலைபேசி நீங்கள்
நிரந்தர அடிமைகளாக்கத்தான் நினைக்கிறீர்கள்
என்னடா உங்க அரசியல்!
–ச.சசிகுமார்.