கவிதை : சாட்சாத் கடவுள்
பாத்திரங்களுக்குப் பெயர் பொறிப்பது
பாத்திரங்களுக்குப் பெயர் பொறிப்பது….
போணியாகாத அழுகுரலாக
வீதியில் அவன் குரல் ஒலித்தது!
விசேடங்களுக்கு வீடுவீடாய்ப் போகிற
அண்டா குண்டா மாறி விடுகிறது
பாத்திரங்களில் பெயர் பொறிக்கணும்
அழைத்தாள் கிழவி
நல்லா பதிப்பியா
எல்லா பொருட்களிலும்
பெயர் போடுவியா
எவ்வளவு நாள் சர்வீஸ்?
கேட்டாள் கிழவி
ஆதாம் எலும்பில்
ஏவாள் பெயரைப்
போட்டதும் நான்தான்
நீ திங்கிற அரிசியில்
பெயர் எழுதுறவன்
நான்தான்
நீ உடுத்துற துணிக்கு
நெய்கிற நூலிலும்
உன் பெயரை எழுதுறவன்
நான் தான்
நீ குடிக்கிற தண்ணீரில் கூட
நான்தான்
சந்தேகமா பார்க்காதே
பேண்ட பீயில
பேரெழுதிக் கலந்த கழிசடை
அது நான் இல்லை…
அடக் கடவுளே
நீதானா அந்தப் படுபாவி
எங்கள் வயிற்றில்
நிரந்தரமான
பசி எழுதினாய்
எங்கள் குடிசையில்
எப்போதும் ஒழுகிற
மழை எழுதினாய்…
நல்லாதான் எழுதினாய்
நீ நாசமாய்ப் போக
உனக்கு எவன்டா
கடவுள் என்கிற
பெயரை எழுதினான்?
கிழவி வீசிய
அண்டா குண்டா அதிர்வேட்டில்
துண்ட காணோம்
துணியைக் காணோம் என்று
ஓடினார் சாட்சாத் கடவுள்…..
எழுதியவர் :
தங்க.ஜெயபால் ஜோதி
1258, 16 வது தெரு, பூம்புகார் நகர்,
கொளத்தூர், சென்னை-600099
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

