கோயிலுக்குள் சக மனிதனை உள்ளே விட மறுக்கும் மக்களே, கொஞ்சம் பிரெஞ்சு நாட்டிலிருந்து 1789 – 1828 காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார் #அபேஜெஎதுபுவா அவர்கள் இங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை குறிப்பாக தென்னிந்திய மக்களின் வாழ்முறையை கண்டு எழுதிய #இந்தியமக்கள் என்னும் நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரிட்டிஷார் நம் இந்திய மக்களின் பொருளாதாரம், வாழ்க்கைமுறை உள்ளிட்டவற்றை அறிந்து அதற்கேற்ப நம்மை ஆட்சி புரிய ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்ட கையேடுதான் இந்நூல்.
தஞ்சை மராட்டிய மன்னர் இறந்த பின்பு அவருடைய நான்கு மனைவியர்களில் இருவரை உடன்கட்டை ஏற்றிய கொடூரம் இங்கே நடந்துள்ளது. அப்படி உடன்கட்டை ஏற்றிய பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் மலைக்க வைக்கிறது. வங்காளத்தில் 1817ல் 706 பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது. விவரமாக இந்நூலில் எழுதியிருப்பார். இப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தை நாம் இன்று ஆதரிப்போமா? முடியாதல்லவா. அப்படி இருக்கும்போது இன்னும் ஏன் கோயிலில் நம்மை போன்ற மனிதர்களை உள்ளே விட மறுக்கிறோம்?
வரலாறு ஒருபோதும் அடக்குபவர்கள் பக்கம் நிற்காது. எது சரி? எது தவறு? என்று அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து செயல்படும் இடத்திற்கு நாம் முன்னேற வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் கோயில் கருவறைக்குள் போகமுடியவில்லையே அதற்காக ஒன்று திரண்டு நின்றிருக்கிறோமா கருவறைக்கு முன்பு?
எனவே நாம் நம்முடைய சமுதாயத்தின் வளர்ச்சியற்ற நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான பொருளாதார மேம்பாடு அடைவதற்காக தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என எந்த வேறுபாடுமின்றி நிலபிரபுத்துவ மிச்ச சொச்சத்தாலும், இந்தியாவின் நிலபிரபுத்துவத்துடனும் கைக்கோர்த்து மக்களை சுரண்டும் அரும்புமீசை முதலாளித்துவமும் தான் என்பதை உணர்ந்து அவற்றை ஒன்றுபட்டு எதிர்த்து முறியடித்து நமக்கான பொருளாதார, சமூக வளர்ச்சிக்காக பாடுபடுவோம் மக்களே. நம் எதிரி நமக்கு பக்கத்தில் இருக்கும் நம்மை போன்ற மக்கள் அல்ல என்பதை இன்னும் புரியாமல் இருந்தால் எப்படி?
ஐரோப்பியர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நூல் நமக்கு நம்மை அறியும் நூலாகத் தெரியும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூல்விமர்சனம் : இரா.சண்முகசாமி
நூல் : இந்திய மக்கள்
ஆசிரியர் : அபே ஜெ. எ. துபுவா
தமிழில் வி. என். ராகவன்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
ஆண்டு : 2008 முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு 2019
விலை : ரூ.430
பக்கம் : 456
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.