சாத்திரியின் ஆயுத எழுத்து | மதிப்புரை நெல்சன்

சாத்திரியின் ஆயுத எழுத்து | மதிப்புரை நெல்சன்

ஆயுத எழுத்து

ஆசிரியர்
சாத்திரி

வெளியீடு
எதிர்

புத்தகத்தின் கரு குறித்து

“எங்களுக்கான தேசம் அமையும் போது நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னைப் போன்றவர்கள் அங்கு வாழ இயலாது

அத் தேசத்தில் வறுமை இருக்காது அநாதைகள் இருக்க மாட்டார்கள் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள்..”

தனி ஈழத்தின் மீதான மாபெரும் கனவோடும் தமிழ் மக்கள் மீதான தீராத நேசத்தோடும் புலிகள் தங்கள் இலக்கை அடைய இப் புவியெங்கும் சிதறிக் கிடந்தனர். சிங்கள பேரினவாத ஆட்சிக்கெதிராக ஆயுத மோதல் துவங்கியது முதல் கோணல் என்பது இப்போது அவ்வியக்கம் பெருமளவு அழிக்கப்பட்டதும் மோதலில் தப்பிய பலர் இலக்கை அடைய முடியாத சோர்வுடன் உலகெங்கும் மக்கள் திரளுடன் கலந்து விட்ணர்.

நிறைவேறாத அந்த இலக்கிற்காக வரலாற்றில் இவர்கள் கொடுத்த விலை மிக வலியது. மனைவி குழந்தைகள் உடன் பிறந்தோர் பெற்றோர் நண்பர் என பெரும் எண்ணிக்கையிலான தமிழ்ச் சமூகத்தை கண்முன் இழந்த விரக்தி கோபம் பழிவாங்கல் துரோகம் என இலக்கை திசை திருப்பிய சம்பவங்கள் என ஈழப் போராட்ட வரலாற்றை அறிந்த பலரைப் போலவே
ஏக்கப் பெருமூச்சே முடிவில் i

கட்டுப்பாடுடனான ராணுவ ஒழுங்கமை வை ஏற்படுத்திக் கொண்ட புலிகள் இயக்கம் மக்கள் விடுதலைக்கான தத்துவார்த்த அரசியல் அறவே இல்லாதிருந்தது அது வீழ்ந்ததற்கான பெரும் காரணங்களில் ஒன்றாகிப் போனது

சில பத்துலட்சங்களைக் கொண்டிருந்த தமிழ் மக்களிடம் துவக்கம் முதலே 30 க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் இருந்தது என்பதே வரலாற்று ரீதியாகவும் இலங்கையின் பூகோள அமைப்பு ரீதியாகவும் மிகப் பெரும் அரசியல் தத்துவார்த்த பலவீனத்தோடு தாங்கள் உள்ளனர் என்பதை இலங்கை ஆட்சியாளர்களுக்கும் உலகிற்கும் தமிழர்கள் பறைசாற்றி விட்டனர்.

சாத்திரியின் ஆயுத எழுத்து | Read Book ...

புலிகளின் பெரும் பகுதி தாக்குதல் தந்திரத்தை மற்றைய தமிழ் பேராளிக் குழுக்களை அழிப்பற்காக செலவிட வேண்டி இருந்ததும் இப் பிளவுகளை கையாள இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் பெரும் வசதியாய் போய்விட்டது என்பதும் வரலாற்றுப் புகழ் பெற்ற ஈழப் போராட்ட வரலாற்றின் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் பின்னடைவுகளாகும்.

புலிகள் பெருமளவு இந்தியாவையும் தமிழகத்தை நம்பியிருந்ததும்
தெற்காசியப் பகுதியில் தன் வல்லமையைப் பறைசாற்றிக் கொள்ள ஈழப்பிரச்சனையை இந்திய ஒன்றியத்தின் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டதும்
வெறுமனே தமிழ் இனம் என்ற குறுகிய அரசியல் புரிதலுடன் தத்துவார்த்தக் குறைபாட்டுடன் தமிழகத்தின் திராவிட தமிழ் இயக்கங்கள் ஈழப் பிரச்சனையைக கையாண்டதும் தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு ஏற்ப்பட்ட சர்வதேச ரிதியிலான காரணமாகும்.

உலகெங்கும் பரவியிருந்த ஈழத் தமிழர்கள் கடைசி வரையிலும் புலிகளுக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக ஏன் முதுகெலும்பாகவே செயல்பட்டனர். ஈழப் போராட்டத்தின் தோல்வி நிச்சயம் அவர்களுக்கு விரக்தியையும் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

எப்படியாகிலும் போர் முடிவுற்றுள்ள இப்பத்தான்டுகளில் ஈழத்தமிழ் தொழிலாளர் வர்க்கம் பெரும் ரத்ததக் கறைகளால் துரோகங்களால் ஏற்ட்ட வரலாற்று அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்று வர்க்க ரீதியாக அணிதிரளும். அதற்கு ஒன்று பட்ட இலங்கையின் தமிழரல்லாத பகுதியிலிருக்கும் தொழிலாளி வர்க்கமும் அது இது நாள் வரை பெற்ற கசப்பான படிப்பினைகளையும் கொண்டு வர்க்க ஒற்றுமைக்காய் முன்னெடுக்கும் . உண்மையான இலங்கை உழைப்பாளி மக்களின் விடுதலை அப்போதே நிச்சயிக்கப்படும். அதற்கு ஒரு பெரும் யுகமும் தேவைப்படலாம்.

ஆயுத எழுத்து | Buy Tamil & English Books Online ...

புத்தகம் குறித்து

தோழர் சாத்திரி இப்புத்தகத்தை எழுத வேண்டிய அரசியல் தேவை என்ன என்று கேள்வி கேட்க எனக்கு மட்டுமல்ல யாருக்கும் இருக்க முடியாது.

ஆனால் ஒரு 30 ஆண்டுகள் இவ்வியக்கத்தின் முக்கிய பணிகளில் தன்னைப் பொறுத்திக் கொண்டு தலைமை கலைந்து செல்லுங்கள் என உத்தாவிடும் வரை அதில் நேர்மையாய் பயணித்தவர்.

அவருள் எழுப்பியுள்ள தோல்வியினால் ஏற்பட்ட உந்துதல் அரசியல் ரீதியான புரிதல்கள் வினாக்கள் அவருள் இயற்கையாய் உள்ள இலக்கிய ஆற்றல் இப் புத்தகத்தை எழுதுவதன் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என தோன்றியிருக்கக் கூடும்.

இலங்கைத் தமிழ் சொற்றொடர் சில வாசிக்கையில் இடர் ஏற்படுத்தினும் ஆங்கில ஆக்ஷன் மூவி போல விறுவிறுவென செல்கிறது.

வாசிக்கத் துவங்கிய உடனே வாசிப்பின் வேகத்தை விட சம்பவங்களின் காட்சியமைப்பு வேகம் நம்மை இழுத்துச் செல்கிறது. நேற்று அரை நேரம்
இன்று அரை நோம் 375 பக்கத்தையும் முடித்தேன்.

ஆசிரியருக்கு இப்புத்தகத்தை எழுத வேண்டிய தாக்கத்தை நாம் படித்து முடிக்கிற போது நம்முள் ஏற்றி விடுகிறார். இது ஆசிரியரின் தனிப்பட்ட இலக்கிய வெற்றி .

ஆசிரியரே குறிப்பிட்டது போல சிறுகதைகளாக வடித்து “அவன்” மூலம் நாவலாக்க முயற்சித்திருக்கிறார். அதற்கான பலனும் பலவீனமும் வாசிக்கையில் தென்படுகிறது.

India used British pilots in fight against LTTE: Book - The Week

ஈழத் தமிழ் மக்களிடையே உள்ள சாதியம் போராளிக் குழுக்களுக்குள்ளும் இருந்ததை துவக்கத்திலேயே குறிப்பிட்டு விடுகிறார். விடுதலைப் போராட்ட இயக்கம்
அல்லது அமைப்பிற்கு அது மாபெரும் பலவீனமாகிவிடுகி,து.

நாவல் சம்பவங்களின் தொகுப்பாக இருந்த போதும்
பாதி வரை நன்கு இணைத்து போரின் அடுத்துத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பிறகு அவனின் சாகசங்களை வரிசைப்படுத்திச் செல்கிறது.
நல்ல வேளையாக இறுதியில் அது தோன்றவில்லை.

பல்வேறு சம்பவங்கள்
பல்வேறு பாத்திரங்கள் வரலாற்று உண்மையாக இருப்பதினால் நம் மனதை விட்டு அவை நீண்ட காலங்கருக்கு அழியாது.

“அவன்” மூலம் புலிகளின் வரலாற்றை நகர்த்திச் செல்லும் ஆசிரியர் சில சம்பவங்கள் மூலம் புலிகளின் வரலாற்றுத் தவறுகளையும் வாசகன் மனதில் இருத்தி விட்டுச் செல்கிறார். ஆனால் ஆசிரியரின் கருத்தை திணிக்காமல் கொண்டு சென்று வாசகனின் முடிவிற்கு விட்டு விடுவதில் இலக்கியத்தின் வெற்றியை அடைகிறார்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *