ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. மேலும் மேலும் சாயலாம், சாயலாம். | சனிக்கோளின் சாய்மானம், அதன் துணைக்கோள்களால் ..புதிய ஆய்வு | பேரா. எஸ்.மோகனா

Saturn illustration (stock image). Credit: © Dimitar Marinov / stock.adobe.comசூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோளும், பெரிய ஒட்டியாண வளையம் உள்ள வாயுக்கோளுமான சனிகோளின் சாய்மானம் என்பது அதன் சந்திரன்களால் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும் என்று கணிப்பு.

சனியின் சாய்வு.. துணைக்கோளால்.

இன்ஸ்டிடியூட் ஆப் செலிஸ்டியல் மெக்கானிக்ஸ் மற்றும் எபிமெரிஸ் கணக்கீடு (பாரிஸ் ஆய்வகம் – பி.எஸ்.எல் / சி.என்.ஆர்.எஸ்) ( Institute of Celestial Mechanics and Ephemeris Calculation (Paris Observatory — PSL/CNRS)யில் பணியாற்றும் சி.என்.ஆர்.எஸ் மற்றும் சோர்போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள், சனிக்கோளின் சுழற்சி அச்சின் சாய்மானம் என்பது அதன் துணைக் கோள்களின் இடப்பெயர்வால்/நகர்வதால் தான் நடைபெறுகிறது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்த தகவல்,நேச்சர் வானியல் இதழில் 20 ஜனவரி 2021 அன்று வெளியிடப்பட்டது. அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் சனியின் சாய்வு மேலும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

டேவிட் மற்றும் கோலியாத் சொன்னதை விட, சனியின் சாய்வு உண்மையில் அதன் நிலவுகளால் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சி.என்.ஆர்.எஸ், சோர்போன் பல்கலைக்கழகம் மற்றும் பீசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய பணிகளின் முடிவுதான் இது. இது சனியின் சுழற்சி அச்சின் தற்போதைய சாய்வு அதன் துணைக்கோள்களின் இடம்பெயர்வால் ஏற்படுகிறது என்பதைக் காட்டுகிறது, என்றும் குறிப்பாக அதன் மிகப்பெரிய நிலவான, டைட்டன் மூலம் தான் என்றும் கணித்துள்ளனர். .

மேலும் மேலும் நகர்வு.. மேலும் மைய அச்சின் சாய்வு.

வானியலாளர்களின் சமீபத்திய ஆய்வுகள்/உற்று நோக்கல்கள், அவர்கள் முன்னர் மதிப்பிட்டதை விட டைட்டனும் பிற துணைக்கோள்களும் படிப்படியாகச் சனியிலிருந்து மெல்ல மெல்ல விலகிச் சென்று கொண்டே இருக்கின்றன என்பதை சமீபத்திய அவதானிப்புகள் காட்டுகின்றன. (நம் பூமியின் துணைக்கோளான நிலவும் கூட இப்படித்தான் பூமியிலிருந்து (கோபித்துக்கொண்டு ?) விலகிச் செல்கிறது தெரியுமா?) இந்த அதிகரித்த இடம்பெயர்வு விகிதத்தை அவற்றின் கணக்கீடுகளில் இணைப்பதன் மூலம், இந்த செயல்முறையில் சனியின் சுழற்சி அச்சின் சாய்வை எவ்வளவு பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் துணைக்கோள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும்போது, ​​கிரகம் மேலும் மேலும் சாய்கிறது. இந்த சாய்வு இதில் பெரிய வளையம் உள்ளதால் தான் தெளிவாகத் தெரிகிறது.

Image Credits: PlanetaryRings.html

சனியும், நெப்டியூனும் தட்டாமாலை..?

சனியின் சாய்ந்த தீர்க்கமான நிகழ்வு ஒப்பீட்டளவில் சமீபத்தில் நிகழ்ந்ததாகவே கருதப்படுகிறது. சனிக்கோள் உருவான மூன்று பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பே, சனியின் அச்சு சுழற்சியில், சற்று சாய்ந்திருந்தது. அதாவது இந்நிகழ்வு, ஏறக்குறைய ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அதன் துணைக்கோள்களின் படிப்படியான இயக்கம்/விலகல் இன்றும் தொடருகிறது. ஓர் அதிர்வு நிகழ்வைத் தூண்டியதின் மூலம் நிகழ்ந்திருக்கலாம். இன்று சனியின் அச்சு நெப்டியூன் கிரகத்தின் பாதையுடன் தொடர்பு கொண்டு, இன்று அதன் 27 டிகிரி சாய்வை அடையும் வரை படிப்படியாகச் சாய்ந்துள்ளது..

சாய்வு.. நெப்டியூன் தூண்டுதல்..?

இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம், முந்தைய காட்சிகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்படிப்பட்ட அதிர்வுகள் இருப்பதைப் பற்றி வானியலாளர்கள் ஏற்கனவே அறிந்து உடன்பட்டிருந்தனர். இருப்பினும், நெப்டியூன் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே, நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இது மிக ஆரம்பத்தில் நிகழ்ந்தது என்று அவர்கள் நம்பினர். அந்த நேரத்திலிருந்து, சனியின் அச்சு நிலையானது என்று கருதப்பட்டது. உண்மையில், சனியின் அச்சு இன்னும் சாய்ந்து கொண்டுதான் இருக்கிறது, இன்று நாம் பார்ப்பது இந்த மாற்றத்தில் ஒரு இடைநிலை நிலை மட்டுமே.

Image Credits: Why does each and every planet of our solar system have an unique axial tilt angle? – Astronomy Stack Exchange

வியாழனும் ..சாய்ந்து கொண்டா

அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில், சனியின் அச்சின் சாய்வு இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும்.என ஆராய்ச்சி குழு கணித்துள்ளது. மேலும் ஏற்கனவே வியாழன் கிரகத்தைப் பற்றியும் இதேபோன்ற முடிவுகளை எட்டியிருந்தது, அதன் நான்கு முக்கிய நிலவுகளான, யுரேபா,அயோ, காலிஸ்டோ,கனிமேடு, போன்றவை இடம்பெயர்வு மற்றும் யுரேனஸின் சுற்றுப்பாதையில் ஒத்ததிர்வு காரணமாக ஒப்பிடக்கூடிய சாய்விற்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: அடுத்த ஐந்து பில்லியன் ஆண்டுகளில், வியாழனின் அச்சின் சாய்வு 3 டிகிரியிலிருந்து 30 டிகிரிக்கு மேல் சாய்மானம் அதிகரிக்கக்கூடும்.இது எப்படி.. ?

Story Source:

Materials provided by CNRS.

Journal References:

Melaine Saillenfest, Giacomo Lari, Gwenaël Boué. The large obliquity of Saturn explained by the fast migration of Titan. Nature Astronomy, 2021; DOI: 10.1038/s41550-020-01284-x

Melaine Saillenfest, Giacomo Lari, Ariane Courtot. The future large obliquity of Jupiter. Astronomy & Astrophysics, 2020; 640: A11 DOI: 10.1051/0004-6361/202038432

CNRS. “Saturn’s tilt caused by its moons, researchers say.” ScienceDaily. ScienceDaily, 21 January 2021. <www.sciencedaily.com/releases/2021/01/210121132103.htm>.