அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்

அறிவியல் பேசுவோம்.. இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
14.10.2024

இந்த வாரம் அறிவியல் உலகம் நமக்கு பல ஆச்சரியங்களைத் தந்துள்ளது. இரண்டு உயிரினங்கள் ஒன்றாக இணையும் அதிசயத்தில் தொடங்கி, நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதிலிருந்து, நம் உடலில் நிகழும் சிக்கலான செயல்முறைகள் வரை  இந்த வாரத்தின் கண்டுபிடிப்புகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அதிலிருந்து சில துளிகள்…

1. இரண்டு உயிரினங்கள் ஒன்றாக இணைந்த அதிசயம்!

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

கடலில் வாழும் சீப்பு இழுது (Comb Jelly) எனும் உயிரினம், தன்னைப் போன்ற மற்றொரு உயிரினத்துடன் இணைந்து ஒரே உயிரினமாக மாறும் திறன் கொண்டது என்கிற அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு உயிரினங்களின் நரம்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் கூட இணைந்து ஒரே அமைப்பாக மாறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அசாதாரண இணைப்பு, காயங்கள் ஏற்பட்டாலும் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

http://dx.doi.org/10.1016/j.cub.2024.07.084

2. நமது பிரபஞ்ச முகவரி என்ன? லானியாகியாவிற்கு அப்பாலும் ஆச்சரியம்.

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

பூமி -> சூரிய மண்டலம் -> பால்வழி விண்மீன்திரள்->உள் விண்மீன் கூட்டம் -> கன்னி விண்மீன்கூட்டம் -> கன்னி விண்மீன் மீகூட்டம் -> லானியாகியா என்பதை நமது பிரபஞ்ச முகவரியாக கருதுகிறோம். புதிய ஆய்வுகளின்படி, வானியலாளர்கள்  இவை அனைத்தும் “ஷேப்லி செறிவு” என்ற பெரிய அண்ட அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள். லானியாகியாவை விட பத்து மடங்கு பெரிய ஷேப்லி செறிவு ஓர் ஈர்ப்புத் தொட்டி போல செயல்படுவதாக கருதப்படுகிறது.

https://dx.doi.org/10.1038/s41550-024-02370-0

3. 200 கோடி ஆண்டுகள் பழமையான பாறையில் உயிர்!

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

தென்னாப்பிரிக்காவின் புஷ்வெல்ட் இக்னியஸ் காம்ப்ளக்ஸ் எரிமலைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 200 கோடி ஆண்டுகள் பழமையான பாறையில் உயிருள்ள நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. பாறையில் உயிர் இருப்பதற்கான மிகப் பழமையான சான்று இது. இந்த ஆராய்ச்சி, மிக ஆரம்பகால வாழ்க்கையின் பரிணாமத்தை நன்கு புரிந்து கொள்ளவும், செவ்வாயிலிருந்து கொண்டு வரப்பட்ட இதே போன்ற வயதான பாறை மாதிரிகளில் நுண்ணுயிர்களைத் தேடுவதற்கும் உதவும்.

http://dx.doi.org/10.1007/s00248-024-02434-8

4. உங்கள் ஆற்றல் மையம் உங்கள் தாயிடமிருந்தே…! விதிவிலக்கு உண்டா?

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

செல்களின் ஆற்றல் மையங்கள் எனப்படும் மைட்டோகாண்டிரியாக்கள் பொதுவாக தாயிடமிருந்தே குழந்தைகளுக்கு கிடைக்கும். கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, அரிதாக சில சமயங்களில் தந்தையிடமிருந்தும் மைட்டோகாண்டிரியாக்கள் குழந்தைக்கு செல்லும் சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகிறது. இது குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆய்வாளர்கள், வைட்டமின் கே2 இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையலாம் என்று நம்புகின்றனர்.

http://dx.doi.org/10.1126/sciadv.adp8351

5.  கர்ப்ப கால உடற்பயிற்சி: குழந்தையின் ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் செய்யும் உடற்பயிற்சி குழந்தையின் ஆஸ்துமா வரும் வாய்ப்பை குறைக்கிறது என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தாய்மார்கள் வாரத்திற்கு இரண்டரை மணிநேரம் மிதமான உடற்பயிற்சி செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

https://doi.org/10.1016/j.medj.2024.09.003

6. குழந்தைகளின் தூக்கமும், குடல் ஆரோக்கியமும் –  ஒரு புதிய தொடர்பு

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

குழந்தைகள் இரவு 9.30 மணிக்கு முன் தூங்கினால், அவர்களின் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்கிறது சீனாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ குழுவின் புதிய ஆய்வு. தூக்கம் குடல் பாக்டீரியாவின் எண்ணிக்கை மற்றும் வகைகளை பாதிக்கிறது. முன்கூட்டியே தூங்கும் குழந்தைகளுக்கு நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகவும், தீய பாக்டீரியாக்கள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குடல் மற்றும் மூளை இணைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

https://www.nature.com/articles/s41598-024-75006-y

7. உங்கள் குடலுக்கேற்ற தனித்துவ உணவுப்பரிந்துரை. யேலின் புதிய முயற்சி. 

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம் உணவு மற்றும் குடல் நுண்ணுயிரிகள் இடையே உள்ள தொடர்பை ஆழமாக ஆராய்ந்து, ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வரைபடம் வெவ்வேறு நபர்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவு மூலக்கூறுகளை எவ்வாறு மாற்றி, நம் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்குகிறது. இந்த கண்டுபிடிப்பு, ஒவ்வொரு நபருக்கும் ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட உணவு பரிந்துரைகளை வழங்கும் புதிய வழிகளைத் திறந்துள்ளது.

https://doi.org/10.1016/j.cell.2024.08.038

8. 19 வயதிலேயே அல்சைமர் நோய்: புதிய அதிர்ச்சி

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

அல்சைமர் நோய் பொதுவாக முதியவர்களை பாதிக்கும் ஒரு நோய் என்றாலும், சீனாவில் 19 வயது இளைஞனுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டிருப்பது அறிவியல் உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுவரை மரபணு மாற்றங்களால் ஏற்படும் என்று கருதப்பட்ட இந்த நோய், இந்த இளைஞனிடம் மரபணு மாற்றங்கள் இல்லாமல் ஏற்பட்டிருப்பது, அல்சைமர் நோயின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகிறது. புதிய ஆய்வுகளைக் கோருகிறது.

https://content.iospress.com/articles/journal-of-alzheimers-disease/jad221065

9. அறுபது வயதான உங்களுடன் நீங்களே பேச உதவும் MIT யின் AI நுட்பம்

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

MIT ன் புதிய AI தொழில்நுட்பம், மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க உதவுகிறது. பயனர்கள் தங்கள் செல்ஃபிகளைப் பதிவேற்றி, கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, இந்த AI அவர்களின் எதிர்கால தோற்றம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணித்து காட்டுகிறது. இந்த தொழில்நுட்பம், மக்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

https://arxiv.org/abs/2405.12514

https://futureyou.life/

10. சத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய பொருள்: மெட்டீரியல் சயின்ஸில் ஒரு சாதனை

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

உறுதியான, சுமை தாங்கும் அதே சமயத்தில் பெரிய அதிர்வுகளையும் தாங்கும் திறன் கொண்ட பொருட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்யும் வகையில், கண்ணாடி மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை பாலிமரை இணைத்து, ஒரு புதிய வகை கலப்புப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இது, அதிக அளவு சத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. கார் பாகங்கள், விண்வெளி தொழில்நுட்பம், கட்டிடங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் இதற்கான தேவை அதிகம்.

http://dx.doi.org/10.1016/j.compositesb.2024.111717

https://youtu.be/X3ayDVgGsN8?si=eopRe22kMy28fJoN

தொடர்ந்து அறிவியல் பேசலாம்!

அறிவியல் பேசுவோம் (Let's talk science) - இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் (summary of this week's top science news) 14.10.2024

த. பெருமாள்ராஜ்

கடந்த வார அறிவியல் செய்திகளின் சுருக்கம் படிக்க…

 அறிவியல் பேசுவோம்..! – இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்

04.10.2024

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *