உலகம் போற்றும் அறிவியல் அறிஞர் பாரத ரத்னா சி. என். ஆர். ராவ் (C.N.R. Rao)
தொடர் : 28 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சிந்தாமணி நாகேச ராமசந்திர ராவ் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானிகளில் ஒருவர். திடநிலை வேதியியல் துறையின் உலக வித்தகர். எண்பத்தி ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து அவர் கௌரவ முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதுவரை 1800 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நோபல் பரிசை தவிர மீதமுள்ள எல்லா பரிசுகளையும் வென்ற ஒரே விஞ்ஞானி எனும் பெயரைப் பெற்றவர் அவர்.
சி. என். ஆர். ராவ் உலகின் முதன்மையான திட நிலை மற்றும் பருப்பொருள் வேதியலாளர்களில் ஒருவர். அவர் 50 ஆண்டுகளாக இந்த துறையின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளார். உலோக ஆக்சைடுகள் என்கிற பதத்தை வேதியியலுக்கு அறிமுகம் செய்தவர். இந்த வகை ஆக்சைடுகளின் வேதி கட்டமைப்புகள் குறித்து முழுமையான புரிதலை உலகிற்கு வழங்கியவர்.
La2CuO4 போன்ற இரு பரிமாண ஆக்ஸைடு பொருட்களை ஒருங்கிணைத்த அறிவியலுக்கு சொந்தக்காரர் சி. என். ஆர். ராவ். 123 பரேடுகளை ஒருங்கிணைத்த முதல் நபர்களில் ஒருவர். 1987 ஆம் ஆண்டு திரவ நைட்ரஜன் சூப்பர் கண்டக்டரை கண்டுபிடித்து உலக அளவில் புகழ் பெற்றவர். அதன் பிறகு கார்பன் நானோ குழாய்க்களை உற்பத்தி செய்து இந்தியாவின் நானோ தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டார். இவருடைய பணி உலோகங்களால் ஆன இன்சுலேட்டர் மாற்றங்களில் கலவையாக கட்டுப்படுத்தப்பட்ட முறையான ஆய்வுக்கு உலகெங்கும் வழிவகுத்தது. இத்தகைய ஆய்வுகள் மகத்தான காந்த எதிர்ப்பு மற்றும் உயர் வெப்பநிலை மீக்கடத்திகள் போன்ற பயன்பாட்டு துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
சி. என். ஆர். ராவின் வேதியியல் துறையான ஆக்சைடுகள் என்பவை அதன் வேதியல் சூத்திரத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆக்ஸிஜன் அணுவை கொண்டிருக்கும் கலவையையோ தனிமத்தையோ குறிக்கும் ஆக்சைடுகள் அனைத்துமே ஆக்ஸிஜனின் நிகர மின்னேற்றம் தாங்குகின்ற அயணி இரண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு அயனி 2 ஆக்ஸிஜனேற்ற நிலையில் ஆக்சிஜன் உடன் இணைந்திருக்கிறது. பூமியின் மேலோட்டத்தில் பெரும் பகுதி ஆக்ஸைடுங்களால் ஆனது. உயர் ஆக்சைடுகளின் மூலக்கூறுகளாக கருதப்படு பொருட்கள் பெரும்பாலும் ஆக்சைடு பூச்சுகளை உருவாக்குகின்றன. அவற்றிலும் குறிப்பாக உலோக ஆக்சைடுகள் எனும் துறையை ராவ் வழிநடத்துகிறார்.
உலோக ஆக்சைடுகள் பிற உலோக சேர்மங்களின் சிதைவினால் எழுகின்றன. இதற்கான எடுத்துக்காட்டு கார்பனேட்டுகள், ஐதராக்சைடுகளயும் சொல்லலாம். கால்சியம் ஆக்சைடு தயாரிப்பில் கேல்சியம் கார்பனேட் என்கிற சுண்ணாம்பும் அது வெப்பமடையும் பொழுது அது கரியமில வாயுவை வெளியிடுகிறது. இந்த உதாரணத்தில் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் தனிமங்களின் எதிர்வினை குறிப்பாக இரும்பின் வணிக பயன்பாட்டு தொடர்புடைய அரிப்புக்கான முக்கிய படிநிலைக்கான தீர்வு சி. என். ஆர். ராவ் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
உன்னத உலோகங்கள் என்று அழைக்கப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் ஏன் விலை உயர்ந்தவையாகவும் அபூர்வமாகவும் அறியப்படுகின்றன என்பதை உலகிற்கு ஆய்வு நடத்தி வெளியிட்டவர் சி. என். ஆர், ராவ் அவர்கள். இந்த உன்னத உலகங்கள் ஆக்சிஜனுடன் காற்றில் நேரடியாக வேதிகலவையை உருவாக்குவதில்லை, அதற்கு எதிராக செயல்படுகின்றன எனவே இவை ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நிறம் மாறுவது கிடையாது. கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு இவை ஒன்ற்று கு ஒன்று மாறும்பொழுது சுற்றுசூழலில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் உலகிற்கு சொன்னவர் சி. என். ஆர். ராவ்.
சி. என். ஆர். ராவினுடைய தீவிர அறிவியல் பங்களிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏற்படுத்தும் கொடுமையான சூழலிய மாற்றங்கள் பற்றியது ஆகும். தொழிற்சாலை கழிவுகள் என்பவை ஆலைகள் மற்றும் சுரங்க செயல்பாடுகள் போன்ற உற்பத்தி செயல்முறையின் பொழுது பயனற்றதாக கருதப்படும். எந்த ஒரு பொருளையும் உள்ளடக்கிய உற்பத்தி நடவடிக்கைகளால் உற்பத்தி செய்யப்படும் கழிவுகள் தொழில்துறை கழிவுகள். பல வகைப்படும், அவற்றில் குறிப்பாக வேதி பொருட்கள் மிக மிக ஆபத்தானவை நச்சுத்தன்மை கொண்டவை. அபாயகரமான கழிவுகளை எப்படி நாம் மக்களை பாதிக்காமல் அப்புறப்படுத்துவது என்பது குறித்த சி. என். ஆர். ராவ் அவர்களின் அறிவியல் பங்களிப்புகள் உலகெங்கும் போற்றப் படுகின்றன.
ஒரு ரசாயன ஆலை என்பது இன்று தொழில்துறையின் தவிர்க்க முடியாத செயல்முறை ஆகும். இது பொதுவாக பெரிய அளவில் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. ஒரு ரசாயன ஆலையின் பொதுவான நோக்கம் வேதியியல் அல்லது உயிரியல் மாற்றம் மற்றும் பொருட்களை பிரித்தல் மூலம் புதிய ஒரு பொருளை சந்தைக்கு இறக்குவது ஆகும். ரசாயன ஆலைகள் உற்பத்தி செயல்பாட்டில் சிறப்பு உபகரணங்கள் அழகுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இவை வெளியேற்றும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. மீன் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இயற்கை எரிவாயு செயலாக்கம் போன்றவற்றிலும் பல வகையான வேதி பொருட்களை கழிவாக நாம் வெளியேற்றுகிறோம். பலவகையான ஆலை கழிவு வேதி பொருட்களை எப்படி சீர் செய்து நாம் வெளியேற்றுவது என்கிற அறிவியல் சி. என். ஆர். ராவின் மிக முக்கிய துறை. அத்தோடு ரசாயன செயல்முறை ஆலைகளில் அரிப்பு என்பது ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை உட்கொள்கின்ற மிகப்பெரிய சிக்கல்.
உலோகங்களில் மின்வேதியியல் அரிப்பு, அமில புகைகள் மற்றும் பிற மின்னாற்பகுப்பு இடைவினைகள் இருப்பதால் ரசாயன செயல்முறை ஆலைகளில் உச்சகட்ட நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கான பலவகை தீர்வுகளை வெளியிட்டவர் சி. என். ஆர். ராவ் அவர்கள். குறிப்பாக FRB என்று அழைக்கப்படும் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் இன்று அதன் பயன்பாடு பல வகைகளில் மாற்று வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பொருளாகவும், சாலை அமைக்கும் பொருளாகவும், இன்று லேசான வேதி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் முக்கியமான கருத்தாக்கம் சி. என். ஆர். ராவின் கட்டுரைகளை சார்ந்ததாகும்.
Y JUNCTION கார்பன் நானோ குழாய்கள் சி.என். ஆர். ராவின் உலகப்பிரசித்தி பெற்ற கண்டுபிடிப்பாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முறையாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் இன்று நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை அனைத்துமே Y JUNCTION கார்பன் நானோ குழாய்களை சார்ந்ததாக இருக்கிறது. கார்பன் நானோ குழாய்கள் முக்கிய சிண்டி பொருட்களின் துணை தயாரிப்பு மற்றும் நானோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் மதிப்பு மிக்கதாக கருதப்படுகின்றன. மூன்று கார்பன் நானோ குழாய்கள் ஆங்கில எழுத்து ‘ Y ‘ வடிவத்தில் ஒன்று சேருகின்ற பொழுது Y JUNCTION எனப்படும் சந்தி உருவாகிறது.
மூன்று நானோ குழாய்களும் ஒரே மாதிரியான கைராலிட்டியை கொண்டிருப்பதால் Y ஜங்ஷன் என்பது சமச்சீர் ஜங்ஷன் என்று அழைக்கப்படுகிறது. நானோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் Y ஜங்ஷன் என்பது CNT கள் மதிப்புமிக்கவையாக கருதப்படுகின்றன. கிளைத்த ஹைட்ரோ ஜங்ஷன்ங்கள் இணையும் பொழுது மல்டி பிரான்சுடு அதாவது பல கிளைகள் கொண்ட CNT களாக உருவாகி நானோ மழவில் பொருட்களின் உற்பத்தியில் மிக பெரிய பங்கு வகிக்கிறது. இன்று நம் கையில் இருக்கும் திறன்பேசியின் பெரும்பாலான அம்சங்களை இந்த உலகிற்கு சி. என். ஆர். ராவ் எனும் மாமேதை வழங்கிய அறிவியலின் அதிசயம் ஆகும்.
சி. என். ஆர். ராவ் 1934 ஆம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் பெங்களூரில் பிறந்தார் மைசூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் வேதியியலில் பெற்றார். மேலும் தன்னுடைய 19 ஆவது வயதிலேயே பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம். எஸ். சி. முடித்தார். குழந்தை மேதையாக வேலிடம் வந்தவர். 1959 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தில் இன்னை விரிவுரையாளராக இணைந்தார். கான்பூரில் உள்ள ஐஐடியில் அழகா பல ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்க்கு ஆய்வுகளுக்காக 1984 ஆம் ஆண்டு திரும்பினார். 2005 முதல் 2014 வரை இந்தியா பிரதமருக்கான அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
சி. என். ஆர். ராவ் இரண்டு முக்கிய ஆய்வு நிறுவனங்களை நிறுவியவர். ஒன்று ஜவகர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம், இது புது டெல்லியில் உள்ளது. இரண்டாவது விடா பொருள் அறிவியலின் சர்வதேச மையம், இது பெங்களூரில் உள்ளது. மருல்லோ பதக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, யூஸ் பதக்கம் உட்பட நூற்றுக்கணக்கான பரிசுகளை வென்றவர். 2013 ஆண்டு இந்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சர். சி. வீ. ராமன் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம்க்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெற்ற இந்தியாவின் விஞ்ஞானி எனும் பெருமை சி. என். ஆர். ராவை சேரும்.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய உயிரி மரபணுவாளர் தீபா சுப்ரமணியம் (Deepa Subramanyam)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பொழுது யார் என்று தேடிப் பார்க்க படித்தேன். அருமையான கட்டுரை அவரைப் பற்றிய அறிமுகமாக மட்டுமில்லாமல் அவர் செய்த ஆராய்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்றது கட்டுரைக்கு வலு சேர்க்கிறது. பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை எழுதி வரும் தங்கள் உழைப்பை பாராட்டி மகிழ்கிறேன்.