ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்
– ஜோயல் பி. ஜோசப்
தமிழில்: மோசஸ் பிரபு
புற்று நோய்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் அல்ட்ராசவுண்ட் (மீயொளி) பயன்படுத்தி நமது உடலின் திசுக்களில் உள்ள ஒரு சிறிய பகுதியை திரவத் துளிகளாக மாற்றி இரத்தத்தின் வழியாக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் இந்த ரத்தத்தின் குமிழ்களில் ஆர்என்ஏ, டிஎன்ஏ மற்றும் புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் உள்ளன, அவை விஞ்ஞானிகளுக்குசில குறிப்பிட்ட வகை புற்றுநோயை அடையாளம் காண உதவுகிறது.
கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் மின்துறை மற்றும் கணினி பொறியியல் துறை இணைப் பேராசிரியரான ரோஜர் ஜெம்ப் அவர்கள் அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் வழிமுறை பற்றிய ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அமெரிக்காவின் ஒலியியல் சங்கம் (Acoustical Society of America) மற்றும் கனடாவின் ஒலியியல் சங்கம் இணைந்து கடந்தமே 13 அன்று கனடாவில் உள்ள ஷா சென்டர் (SHAW CENTRE) என்ற இடத்தில் இந்த ஆய்வை விவரிக்கும் கூட்டத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற ரோஜர் கெம்ப் தனது குழுவின் கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் சுருக்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஒலியியல் சங்கத்தின் இதழிலும் வெளியிடப்பட்டது.
முறிவு, இரத்தம், உயிரியல் குறியீடு
ஒலியின் அதிர்வெண் அளவு 20 ஆயிரம் ஹெர்ட்ஸை விட அதிகமாக இருப்பதை அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) என அழைப்பார்கள் தமிழில் மீயொலி அல்லது கேட்க முடியாத ஒலி என்றும் அழைக்கலாம். இதை மனிதர்களால் கேட்க முடியாது. ஆனால் வெளவால்கள் தங்கள் சுற்றுப்புறத்தை உணர்வதற்காகமீயொலியை (அல்ட்ராசவுண்ட்) பயன்படுத்தும். பொதுவாக கர்ப்பினி பெண்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவின் வளர்ச்சியை கண்கானிக்க மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த தொழில்நுட்பம்உடலின் உட்புறத்தில் உள்ள மேற்பரப்புகளால் பிரதிபலிக்கப்படும் ஒலி அலைகளை ஒரு படமாக (IMAGE) மாற்றுகிறது பிறகு அதை கணினியின் உதவியுடன் திரையில் காண செய்கிறது. திசுக்கள் அல்லது செல்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட இதில் கண்டறிய முடியும்.
தற்போது வரை பையாப்சி (BIOPSY) முறை தான் பல விதமான புற்றுநோய்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறதுபுற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உடலின் ஒரு பகுதியிலிருந்து ஒரு பெரிய ஊசியைப் பயன்படுத்தி ஒரு சிறிய திசு அல்லது செல்களை மருத்துவர்கள் பிரித்தெடுப்பார்கள். திசு அல்லது செல்களில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியவும், அப்படி இருந்தால், அது என்ன வகையான புற்றுநோய் என்பதையும் “இன் விட்ரோ சோதனைகள்”(IN VITRO DIAGONOSTIC TEST) மூலம் உறுதிப்படுத்த முடியும். விட்ரோ (VITRO) என்பது கண்ணாடியில் என பொருள்படும்.

பயாப்ஸி முறைக்கு மாற்றாக ரோஜர் ஜெம்ப் மற்றும் பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து பணியாற்றுபவர்கள், அல்ட்ராசவுண்ட் (மீயொளி) எனும் ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர், இதில் உயர் ஆற்றல் கொண்ட அல்ட்ராசவுண்டை பயன்படுத்துகின்றதுஇதுபொதுவாக ஸ்கேன்களில் (SCAN) பயன்படுத்தப்படுவதை விட அதிகமான அதிர்வெண்களை கொண்டதாகும். இது புற்றுநோய் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை திரவத்துளிகளாக உடைத்து, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தின் வழியாக வெளியிட முடியும் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர் இரத்தததின் உயிரியல் குறியீட்டை சோதிப்பதன் மூலம் – டிஎன்ஏ, ஆர்என்ஏ அல்லது புரதங்கள் போன்ற சில உயிரி மூலக்கூறுகள் வழியாக புற்றுநோய்க்கான தடயங்களை அறியலாம்.
இவ்வாறு எடுக்கப்படும் இரத்த மாதிரிகளில் அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரபணு மற்றும் சிறிய கொப்பளங்களின் உயிரியல் குறியீட்டின் அளவை 100 மடங்குக்கு மேல் அதிகரிக்க முடியும்” என்று ரோஜர் ஜெம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த முறையானது குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளையும், அவை கொண்டிருக்கும் பிறழ்வுகளையும் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுகிறது. இதற்கு முன்பு வரை இரத்தத்தில் கண்டறிய முடியாத ஒரு புதிய முறையாக திகழ்கிறது. எதிர்காலத்தில் பயாப்ஸி முறையை பயன்படுத்துவது கிட்டத்தட்ட பாதியாக குறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு புற்றுநோய் கண்டறிய பெரிதும் உதவும் என்றும் ரோஜர் கெம்ப் மதிப்பிட்டார்.
மின்னணு வழியாக தகவலை அறியும் புதிய முறை‘
ரோஜர் ஜெம்ப் மற்றும் அவரோடு பணியாற்றும் ஆய்வாளர்கள் இரத்தத்தில் ஒரு ஒற்றை புற்றுநோய் செல் இருப்பதை அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர். புற்றுநோய் செல்கள் அதிகரித்து பரவும் போது, இரத்தத்தின் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் நகர்கின்றன. விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இரத்தத்தில் உள்ள இந்த செல்களைக் கண்டறிய இதுநாள் வரை கடுமையாக போராடினர், ஏனெனில் அவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஒரு சில சோதனைகள் மூலமாக மட்டுமே அவற்றைக் கண்டறிய முடியும் அச்சோதனை செய்யஅதிகளவு பணம் செலவழிக்க வேண்டும்.
உதாரணமாக, ‘செல் தேடல்’ சோதனைக்கு $10,000 (₹ 8.4 லட்சம்) செலவாகும். ஆனால் ரோஜர் கெம்ப் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போது ஒரு நபரின் சிறுநீரக அமைப்பின் அருகில் (PROTASTE) எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் புற்றுநோய் செல் இருப்பதை அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர். புற்று நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இரத்த மாதிரிகள் வழியாக அல்ட்ராசவுண்ட் அலைகளை செலுத்தியதும் இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை துண்டாக்கி, அவற்றில் உள்ள உயிரியல் குறியீட்டை இரத்தத்தில் வழியாக வெளியிட்டது. இதில் உயிரியல் குறியீடு இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்த சோதனை முறைக்கு ஆகும் செலவு முந்தயை பரிசோதனை முறைகளுக்கு செய்யப்படும் செலவை விட கிட்டத்தட்ட நூறு மடங்கு குறைவாகும். சுமார் ($100) 8,400 ரூபாய் தான் செலவாகும் என்று ரோஜர் ஜெம்ப் மதிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள் இப்போது தங்கள் கண்டுபிடிப்புகளை மற்ற வகை புற்று நோய்களுக்கு, குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் தோல் புற்று நோய்க்கு விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். “எங்கள் அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) தொழில்நுட்பங்கள் நோயாளிகளுக்கு குறைந்த அசௌகரியத்தைதான் கொடுக்கும். புதிய வகையான மூலக்கூறு செல்கள் மற்றும் திசுக்களின் ஆய்வுகளை மின்னணு வழியாக அறிந்து கொள்ள முடியும். இது நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என ரோஜர் ஜெம்ப் கூறியுள்ளார்.
கூடுதலானஆய்வு முடிவுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் தேவை

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐஐடியில் பணியாற்றும் எலக்டிரிக்கல் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஹிமான்ஷு சேகர் மற்றும் உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கார்லா மெர்காடோ ஆகியோர், இந்தத் துறையில் முந்தைய சோதனை முறைகளை விட அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தும் இந்த முயற்சி நம்பிக்கைக்குரியது மற்றும் கணிசமாக மேம்பட்டது என்று கூறினார்கள்.
இரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி அல்ட்ராசவுண்ட் உதவியுடன் கண்டறியும் இந்த சோதனைமுறை அதன் எளிமையின் காரணமாக மிகவும் ஈர்க்கப்படுகிறது. இந்த அணுகுமுறையில் முக்கிய நன்மை என்னவென்றால் செல்களின் ஊடுறுவல் இல்லாமல் இருப்பதுதான், இது நோயாளியின் அசௌகரியத்தைத் குறைக்கும்” என்று சேகர் கூறினார். புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு இந்த அணுகுமுறை பயன்படுத்துவது நீட்டிக்கபடலாம் என்று மெர்காடோ-சேகர் கூறினார். இருப்பினும் மருத்துவர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், மேலும் கூடுதல் பரிசோதனை ஆய்வுகள் தேவைப்படும் என்றும் அதுவரை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்தார்.
பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் மற்றும் ஆரோக்கியமான மக்கள் ஆகியோருக்கு இந்த அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) மருத்துவ பரிசோதனைகள் மூலம், வெவ்வேறு புற்றுநோய் வகைகளுக்கு துல்லியமான முடிவுகளை உருவாக்க முடியும். மற்றும் அவர்களின் மாறுபட்ட உயிரியல் குறியீட்டின் வரம்புகளுக்கும் இது பொருந்தும் என நிருபிக்க முடியும்.
மேற்கூறிய இந்த கருத்தை பொதுக் கொள்கையின் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியரான பிரையன் டை சிங்கர் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை மற்றும் பொது சுகாதார அறிவியல் இணைப் பேராசிரியரான ஜக்குப் ஹலவ்கா ஆகியோர் மே 2022 இல் அமெரிக்க தேசிய அகாடமி வெளியிட்ட ஒரு கட்டுரையில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்” புற்றுநோய் மற்றும் இதய வளர்சிதை மாற்ற நோய்களுக்கான பரிசோதனைகள் பற்றிய போதிய ஆய்வுகள் இல்லை கடந்த காலங்களில் பல்வேறு வகையான மக்களின் உயிர்நிலையின் வரம்புகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதால் இந்த அல்ட்ராசவுண்ட் ஆய்வில் அது நிகழாமல் இருக்க கூடுதல் ஆய்வு முடிவுகள் மற்றும் பங்கேற்பாளர்களை இணைக்க வேண்டிய தேவை உள்ளது.
சுமார் ஐந்து வருடங்களில்
அனைவருக்குமான மலிவான விலையில் புற்றுநோய் பரிசோதனை முறைகளுக்கு மிக தாமதமாக வந்துள்ளோம். அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் தனது ‘புற்றுநோய் பரிசோதனை ஆராய்ச்சி வலையமைப்பை’ அறிமுகப்படுத்தியது. 2025 ஆம் ஆண்டில், 24,000 பேர் கொண்ட குழுவுடன் புற்றுநோயை முன்கூட்டியே மற்றும் துல்லியமாக கண்டறியும் சோதனைகளை மதிப்பிடுவதற்கான ஒரு வழிகாட்டும் ஆய்வுக்கான வலையமைப்பை தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளில் ஆய்வு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அல்ட்ராசவுண்ட் (ஒலி அலைகள்) அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆய்வு முறைகளும் அடங்கும். தனிப்பட்ட ஆராய்ச்சி குழுக்களால் உருவாக்கப்பட்ட ஆய்வு முறைகளும் இதேபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு இதை ஆதரிக்கவும் மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.
“மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் சாதகமாக இருந்தால், ஆராய்ச்சியாளர்கள் தொழில்துறையினருடன் இணைந்து ஒழுங்குமுறை ஒப்பந்தம் போடப்பட்டு முறையாக இந்த தொழில்நுட்பம் சுமார் ஐந்து ஆண்டுகளில் வணிக ரீதியாகக் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று மெர்காடோ-சேகர் கூறினார்.
ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகள்
எழுதியவர்:
ஜோயல் பி. ஜோசப்
அறிவியல் பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
தமிழில்: மோசஸ் பிரபு
நன்றி : The Hindu
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

