திரைவிமர்சனம்: அயோத்தி – மா.மன்சூர் அலி

திரைவிமர்சனம்: அயோத்தி – மா.மன்சூர் அலி




நான் பார்த்த படங்களில், மிக நீண்ட இடைவேளிக்கு பிறகு ஒரு நல்ல தரமான படம் என்றால்? அது அயோத்திதான். அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரைக்காக வரும், இந்தி மதத்தை சேர்ந்த பல்ராம் யஷ்பால் சர்மா தன் குடும்பத்துடன் வருகிறார்.

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்க மனிதராகவும், மதவெறி பிடித்த மிருகமாகவும் வலம்வரும் பல்ராம் சர்மா தனது அவசர புத்தியால் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் தனது மனைவி அஞ்சு அஸ்ரானி தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை…

வாகனம் ஓட்டிய ஓட்டுநரின் நண்பர், சசிகுமார் மற்றும் புகழ் இருவரும் அவர்களுக்கு உதவுகிறார்கள். கதை பல கோணங்களில் நகர்கிறது. வேகம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நிமிடங்களும் நம்மை இருக்கையை விட்டு எழ முடியாமல் பிடித்து வைத்து கொள்கிறது. சிறப்பான கதைகளம்…

ஒரு நல்ல கணவராகவும் இல்லாமல், தன் இருபிள்ளைகளுக்கு தந்தையாகவும் இல்லாமல் மதவெறி பிடித்த கல்நெஞ்சம் கொண்ட மாமனிதர் பல்ராம் யஷ்பால் சர்மா… தன் மனைவி இறந்தும் கண்களில் ஒரு துளிகூட கண்ணீர் வரமால் கவலையும் படாமல் இயல்பாகவே நடித்து அசத்தியிருக்கிறார்.

முன்பின் தெரியாத மனிதர்களை நம் சமூகம் எவ்வாறு கைய்யாலுகிறது என்பதை மிகவும் தெளிவாக பதித்துள்ளார் இயக்குனர். மகள் தன் தாயின் உடலை மீட்டு தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல போராடும் ஒரு மகளின் உணர்வு புர்வமான கண்ணீர் கதை…

விமானத்தில் அழைத்து செல்ல, சசிகுமார் ஒரே நாளில் பல கையெழுத்துகளை வாங்கும் விதம் சிறப்பு. தன் மகளின் தலதீபாவாளியை கூட பொருட்படுத்தாமல் உதவும் போஸ், விமானத்தில் இரு பயணிகளை வெளியேற்ற உதவும் சேத்தன் என… மனிதபிமானம் இன்னும் இருக்கிறது என்பதை நிருபிக்கிறது.

கடைசியில் தன் தாய் ஆசைப்பட்ட ராமேஸ்வரம் தீர்த்தம் சசிகுமார் உதவியால் கிடைக்கிறது. தன் கணவன் எவ்வளவு துன்புறுத்தினாலும் பலவலிகளையும் தாங்கி, அசையாமல் வலம் வரும் தாயின் போராட்டம். போஸ்ட்மாட்டம் செய்யபட்ட தன் தாயின் உடலை வாங்க, மகன் தான் சேமித்த உண்டியலை உடைத்து அந்த காகிதத்தை அள்ளி கொடுக்கும் விதம் நெஞ்சம் பதறவைக்கிறது.

அவர்களை பத்திரமாக அனுப்பி வைக்கும் தருணம். பல்ராம் தங்கள் பெயர் என்னா? என்று கேக்க சசிகுமார், அப்துல் மாலிக் என்றதும் மதத்தை கடந்து புது மனிதத்துவம் பிறக்கிறது… தரமான கதை வாழ்த்துகள். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சசிகுமார் ஒரு இஸ்லாமியர் என்றால் பல்ராம் அவர்கள் பேசும் மொழி இவருக்கு புரிந்திருக்குமே… இது மட்டும் எனக்கு புரியவில்லை. மற்றபடி தரமான படம். வாழ்த்துகளுடன் என் நன்றிகள்…

திரைப்படம்: அயோத்தி
இயக்கம்: மந்திர மூர்த்தி

– மா.மன்சூர் அலி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *