“தேடல்” – சாந்தி சரவணன்

Search (தேடல்) Poetry By Shanthi Saravanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayamஉன்னுள் தேடு

அன்பு கிடைக்கும்!
ஆனந்தம் கிடைக்கும்!
இன்பம் கிடைக்கும்!
ஈகை குணம் கிடைக்கும்!
உண்மை கிடைக்கும்!
ஊட்டம் கிடைக்கும்!
எண்ணங்களின் நிறம் கிடைக்கும்!
ஏற்றம் கிடைக்கும்;
ஐம்புலன்கள் சக்தி கிடைக்கும்!
ஒற்றை சிந்தனை கிடைக்கும்!
ஓய்வு கிடைக்கும்!

உன்னுள் தேடு

நம்பிக்கை கிடைக்கும்!
மகிழ்ச்சி கிடைக்கும்!
உறுதி கிடைக்கும்!
உறவுகள் கிடைக்கும்!
புதைந்து கிடக்கும் பல முகங்கள் கிடைக்கும்!
மடிந்து கிடக்கும் பல பரிமாணங்கள் கிடைக்கும்!
உன் பன்முகத் தன்மை கிடைக்கும்!

மனமே!
இறுதியில் திருவுக்கோலாய்
உன்னுள் புதைந்து கிடக்கும் மனிதம் கிடைக்கும்!

நன்றி
திருமதி. சாந்தி சரவணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.