சீனிவாசன் கவிதைகள்seenivaasan kavithaigal
சீனிவாசன் கவிதைகள்seenivaasan kavithaigal

சீனிவாசன் கவிதைகள்

வண்டமர்ந்து வம்பு செய்ய
வாயு வந்து வரம்பு மீற
மோகம் கொண்ட
மூங்கில் பெண்ணாள்
காற்றதனை காதல் செய்து
இசையதனை பிரசவிப்பாள்.

•••

இங்கே சில அகலிகை கள் காத்திருக்கிறார்கள்
ராமனின் கால் பட
சில கன்னிகள் கழிக்கப்படுகிறார்கள்
கல்யாணச் சந்தையில்
சில கண்ணன்களால்
கன்னி கழிந்தோறும் உண்டு
இன்றும் சில அகலிகைகள்
காத்திருகிறார்கள்
ராமன்கள்தான்
கண்ணன் களாக மாறிவிட்டார்கள்.

•••

சாதி
மறுப்பு
திருமணம்
செய்தார்கள்
பிறந்தது
சாதியற்ற
புதிய
சாதி.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *