இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” புத்தகம் | Director Seenu Ramasamy's Cinemavin Aanma Book Review in Tamil | சுப்ரபாரதிமணியன் | www.bookday.in

இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – சினிமா ரசனை கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்

மேலைநாட்டில் அச்சிடப்படும் குழந்தைகளுக்கான நூல்களில் அவை எந்த வயதுக்குரியவை என்று தவறாமல் குறிப்பிடப்பட்டு இருக்கும்.. இந்த போக்கு இந்தியாவில் கொஞ்சம் இருக்கிறது தமிழிலும் ஆரம்பித்திருக்கிறது. அவ்வப்போது சிலர் எந்த வயதிற்குரிய நூல் என்று குழந்தைகள் நூல்களைக் குறிப்பிடுகிறார்கள்.

அதேபோல திரைப்படங்களை பொறுத்த அளவில் குழந்தைகள் நல்ல ரசனை பெறவும் திரைப்படத்தில் ஆழமாக்க் காலுன்றவும் உள்ள திரைப்படங்களை பகுத்து சொல்வதில் ஆர்வலர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை.

ஆனால் இந்த நூலில் சிறுவர்கள் எந்தெந்த வயதினர் எந்தெந்த எந்தெந்த வகைப் படங்களை பார்க்கலாம் என்று பட்டியலிட்டு அந்த படங்களில் சிறப்புகளை தொழில்நுட்ப ரீதியாகவும் கதையம்சம் ரீதியாகவும் ரசனை பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்

உலகத்தரம் வாய்ந்த சிறந்த படங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை கற்றுக் கொள்வதற்கான ஒரு கையேடாக இதை எடுத்துக் கொள்ளலாம். வகுப்பறைகளில் திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறார், அவற்றை திரையிடப்படும் முறை பற்றியும் அக்கறை இருக்கிறது
உலக சினிமா என்பது வெளிநாட்டு படங்கள் மட்டுமல்ல நம் ஊரில் தயாரிக்கப்படும் நேர்த்தியான படங்கள் என்பது அவருடைய எண்ணம்.

அந்த அடிப்படையில் திரைப்படம் சார்ந்த ஒரு முறையானக் கல்வி உருவாக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. இந்த நூலிலும் அதைச் சொல்கிறார் பிரதி வாசிக்கவும் அதை காட்சியாகப் பார்க்கவும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆனால் இந்த வேறுபாட்டை சரியாக புரிந்து கொள்ள சிறுவயதிலிருந்து பழக்கப்படுத்த வேண்டும் இந்த பழக்கத்தை சொல்லும் நூலாக இருக்கிறது. பெரும் பாலும் கோட்பாடாக அதை சொல்லாமல் சிறந்தப் படங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறப்புகளைச் சொல்வது மூலம் குழந்தைகளை இது சார்ந்தது சரியான அறிமுகம் பெற வாய்ப்பு இருக்கிறது

குழந்தைகள் உலகம் தனித்தது. அந்த உலகத்தில் பெரியவர்கள் குறுக்கிட்த் தேவையில்லை அந்த உலகத்தில் குழந்தைகள் அவர்களை புரிந்து கொள்ள இந்த திரைப்படங்கள் உதவும் என்பதை அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது திரைக்கவர்ச்சியை கட்டுடைக்கும் முயற்சியும் கூட.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சினிமாவின் ஆன்மா (Cinemavin Aanma)
ஆசிரியர்:
வெளியீடு:
விலை: 5% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 சுப்ரபாரதிமணியன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *