ஆக்லாண்டு திரைப்பட விழாவை தொடர்ந்து கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhi Pannai Chelladurai) திரைப்படம் மேலும் இரண்டு அமெரிக்க திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.
27வது வருடங்களாக நடந்து வரும் ஆர்ப்பா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 25 ஆவது ஆண்டாக நடைபெறும் நியூ போர்ட் பீச் பன்னாட்டு திரைப்பட விழாவிலும் இவ்விரு திரைப்பட விழாக்களிலும் முதன்முதலாக தமிழ் படம் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் திரையிட தேர்வு.
27th Annual Arpa International Film Festival Official Selections (2024)
27வது ஆண்டு வெற்றிகரமாக நடக்கும் அர்பா பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhi Pannai Chelladurai) ‘இறுதிக்கட்ட தேர்வு’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது.
[25வது ஆண்டு விழாவில் மாமனிதன் ’இறுதிக்கட்ட தேர்வு’ என்ற தகுதியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது]
வருகின்ற அக்டோபர் 27 அன்று நடைபெறும் நிறைவுநாள் விழாவில், ஹாலிவுட் இயக்குநர்கள் மற்றும் நட்சத்திரக்கலைஞர்கள் பெருவாரியாக கலந்து கொள்வார்கள்.
அன்றைய விழாவில் விருது பெற்ற படைப்புகளை அறிவித்து விருது வழங்கி கவுரவிப்பார்கள்.

25வது ஆண்டாக நடைபெறும் நியுபோர்ட் பீச் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhi Pannai Chelladurai) தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் 21 அன்று திரையிடப்படுகிறது.
வெள்ளி விழா கொண்டாடும் இவ்விழாவில் முதன்முதலாக தேர்வு செய்யப்படும் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhi Pannai Chelladurai) நிகழ்த்தியுள்ளது!
https://nbff2024.eventive.org/films/66cf60573a31930087b7044c?fbclid=IwY2xjawFbDFBleHRuA2FlbQIxMAABHaq72h-ImIxJbGHZc7H63bNREP6FYAOaFJRiqpxunRcqW7gAD2h6sianRw_aem_S2R9I5KXH4Bvzg1wbJOapQ
25 ஆண்டுகளை கடந்த 30க்கும் மேற்பட்ட பாரம்பரியமான பன்னாட்டு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் பெறும் என்று பன்னாட்டு திரைப்பட விழாக்களுக்கு தமிழ் திரைப்படங்களை விண்ணப்பிக்கும் பணியினை செய்து வரும் உலக சினிமா பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார்.
https://x.com/i/status/1837370666565108115
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

