கலகல வகுப்பறை சிவா எழுதிய - சீருடை (Seerudai) - நூல் அறிமுகம் | Seerudai - Kalakala Vagupparai Siva - Books For Children - https://bookday.in/

சீருடை (Seerudai) – நூல் அறிமுகம்

சீருடை (Seerudai) – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : சீருடை (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் )
ஆசிரியர்: கலகல வகுப்பறை சிவா
பக்கங்கள் : 64
விலை : 50
பதிப்பகம்:  புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலைப் பெற : thamizhbook.com

ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்த ஒன்பது திரைப்படங்களில் விமர்சனமே இந்தப்புத்தகம் ஆகும்.

இன்றைய இந்திய கல்வி பல்வேறு சவால்களை சந்திக்கிறது மாணவர்களிடையே ஒழுக்கம் குறைந்துவிட்டது. ஆசிரியர்கள் அச்சத்துடனே வகுப்பறையில் செல்ல வேண்டியது என்பதைப் போல பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள் இதே போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகமும் ஆசிரியர்கள் மீது சுமத்துகிறது.

இந்த நிலை இன்று மட்டும் நிகழவில்லை பல்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை விமர்சனங்களாக ஆசிரியர் தொகுத்துள்ளார்.

மனம் தளறும்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு இத்திரைப்படங்கள் தூண்டுகோலாக அமையும்.

ஒரு சீருடையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கதையாகப்படிக்கும் போது நமக்கு கண்களில் கண்ணீர் வருகிறது.

இலவசங்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்லி விடுகிறோம் அதில் அத்தியாவசியமானவையும் இருக்கின்றன என்பதை ஏன் நாம் உணராமல் போனோம் இதைக் கூடவா வாங்க முடியவில்லை என்று சொல்லும் ஆசிரியர்களுக்கு கன்வேஷ் மிகச் சிறந்த படம்.

ஏழைச்சிறுவன் ,காவல் அதிகாரி ,அமைச்சர் மூவரும் உடைபற்றி பேசுகிறார் சீருடை வர்க்க குறியீடாக படம் முழுவதும் பல்வேறு நிலைகளில் காட்டப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் மது பகத்சிங் பற்றிப்பேசும் பேச்சு இன்றைய அரசியலுக்கு சவுக்கடி.

கனடிய பிரெஞ்சு மொழிப்படமான “monsieur lazhar”ஆசிரியர் லாசர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது பல்வேறு விருதுகளைப்பெற்றது.

குழந்தைகளின் மனதில் இருக்கும் கவலைகளை துக்கத்தைப்பகிர்ந்து கொள்ளும் உறவு தேவை என்பதை எளிய காட்சிகளால் வலிமையாக செல்கிறது இப்படம்.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்குள்ளும் இருக்கும் சோகத்தை உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான உறவுகள் வேண்டும் என்று மனித உறவுகளையும் அன்புகளையும் அழுத்தமாக சொல்வதில் ஆசிரியர் லாசர் முக்கிய படம் முக்கியமான படைப்பாக இருக்கிறது.

மராத்திய மொழியில் கல்வி முறையை திட்டுவது போன்ற தலைப்பு என்ற எதிர்ப்பு சமாளித்து 2010 ஆம் ஆண்டில் வெளியான படம் shikshanachya aaicha gho கதை,திரைக்கதை ,மற்றும் இயக்கம் மகேஷ் மஞ்சுரேக்கர்.

கல்வி முறையின் மீது ஆத்திரமான கேள்விகளை எழுப்புகிறது படம் குழந்தை பருவம் முழுவதும் அழுத்தமும் போட்டியும் நிறைந்த கல்வி முறையால் மானிடப்பண்புகளை வளர்க்கத்தவறிவிட்டோம்.

மனிதம் தழைக்கப் படைப்பாளர்கள் ,கலைஞர்கள் தேவை. பணம் சம்பாதித்து மட்டும் கல்வி அல்ல என பல்வேறு உரையாடல்களும் தொடக்கப் புள்ளியாக இப்படத்தை கொண்டாடலாம்.

இதே கதையை இந்திய மொழியில் பலவற்றிலும் படமாக்கி உள்ளார் தமிழ் தெலுங்கில் தோனி என்ற பெயரிலும் பிரகாஷ்ராஜ் படமாக எடுத்துள்ளார்.

கலகல வகுப்பறை சிவா எழுதிய  - சீருடை (Seerudai) - நூல் அறிமுகம் | Seerudai - Kalakala Vagupparai Siva - Books For Children - https://bookday.in/

மதிப்பெண்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் கல்வி கற்பித்தல் தவம் அதற்காகத்தொடர்ந்து கற்பவரே ஆசிரியர் போன்ற பல செய்திகளை அழுத்தமாக அனைவரும் மனங்களிலும் பதிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கும் படம்”The Teachers Diary”.

உலகமெங்கும் தேடல் மிக்கவர்கள் பயணித்துக் கொண்டே இருக்கின்றனர் பயணங்களை வாழ்க்கை ரகசியங்களை அவிழ்கின்றன. புத்தன், இயேசு ,காந்தி ,சோ போன்ற பலரின் வாழ்க்கையை மாற்றியது பயணங்கள் தான்

அசோக் வாட்கர் என்ற மராத்திய எழுத்தாளரின் பள்ளிப்பருவத்தில் 1950-60 இல் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் எழுதிய 72 மூல ஒரு ஒரு பயணம் அதன் திரை வடிவமே” 72 மைல்ஸ்”.

இடையறாத முயற்சி மற்றும் அன்பின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ராணியின் கதையை சாட்சி.

ஒரு சினிமாவைப் போல முடிவு இருந்தாலும் அமெரிக்காவின் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவரான ரான் கிளார்க் என்ற ஆசிரியரின் வாழ்க்கை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட படம்”The Ron Clark story”.

மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் எவ்வளவு தான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தன் பணியை தொடருவார்கள் .அவர்களிடமே மானுடத்தின் எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.

Tom schulman தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதைகளை பீட்டர் வயர் இயக்கி உள்ளார் 1989 இல் எடுக்கப்பட்ட படத்தில் Robin William ஆசிரியராக நடத்து உள்ளார்.

பல்வேறு விருதுகளை குவித்த இந்தப் படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக விளங்கி வருகிறது.

 

நூல் அறிமுகம் எழுதியர் : 

வ.பெரியசாமி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *