நீங்கள் ஓர் ஆசிரியராய் அல்லது ஒரு பெற்றோராய் மாணவர்களிடம் என்னவெல்லாம் எது பார்ப்பீர்கள்…. பிள்ளைகளுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கனும் கற்பனை திறன் மிக்கவர்களாக இருக்கனும் முடிவெடுக்கும் திறன் மிக்கவர்களாக இருக்கனும் புதிய கண்டுபிடிப்புகளை செய்யக் கூடியவர்களாக இருக்கனும் நிறை விஷயங்களை பேசக்கூடியவர்களாக இருக்க வெண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானால் எப்படி இருக்கும். இந்த உங்களின் எதிர்பார்ப்பிற்கு இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.
புத்தகத்திற்குள் செல்லும் முன், சீட்டுக்கட்டை பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும் என்று யோசித்துப்பாருங்கள். பொதுவா கிராமங்களில் பெருசுக பொது இடத்தில சீட்டு விளையாடுவாங்க. அதுல நாலணா எட்டணா பெட்டு கட்டி விளையாடுவாங்க. இதுக்கு மேல கண்ணுக் தெரியாத இடத்துல விளையாடி சொத்த தோத்துட்டாங்கன்னு சொல்லி கேள்விபட்டிருக்கோம். இத தாண்டி என்ன நமக்கு தெரியும். பத்தாம் வகுப்பு கணக்குப் பாடம் நடத்தும் போது நிகழ்தகவு பகுதியில சின்னதா சீட்டுக் கட்டை பற்றி சொல்லியிருப்பாங்க. அவ்வளவுதான். இத தாண்டி நமக்கு ஒன்னும் தெரியா.
மத்தவங்க தெரிஞ்சிருக்கலாம். ஆனால் இந்த புத்தகத்துல அடிப்படை கணிதம் முழுவதையும் கற்றுக் கொள்ளப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. அதுவும் எளிமையான விளையாட்டுகளையும், புதிர்களையும் , செயல்பாடுகளையும் கொடுத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும், ஏன் பெற்றோர்களையுமே இது செயல்பட தூண்டுகிறது.
பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கியதோடு, எண்ணியல், கணங்கள்,
நிகழ்தகவு, வடிவியல், காப்ரேக்கர் எண்கள் என பலவகையா கணித கோட்பாடுகளை அறிந்துகொள்வதற்கு இநத புத்தகம் எளிய வகையில் வழிகாட்டுகிறது. ஒரு சீட்டுக் கட்டை வைத்துக் கொண்டே ஏகப்பட்ட விளையாட்டுகளையும் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்கிறது. வெறும் சீட்டுக் கட்டுதானே இதுல என்ன கணிதம்
இருந்துவிடப்போகிறது என்று நினைப்பவர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்.
கணித்ததின் அடிப்படை கூறுகளா கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய
செயல்பாடுகளை கற்றல் கலைப்பு தெரியாமல் விளையாடுக்கொண்டே கற்றுக் கொள்ள இந்த புத்தகம் வாய்ப்பளிக்கிறது. இதை மாணவர்களின் கைக்குச் சேர்ப்பதற்கு முன்பாகவே இதனை அனைத்து நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இந்நூலை வாங்கி வாசிக்க வேண்டும். மேலும் இதில் உள்ள விளையாட்டுகளை விளையாடி பார்க் வேண்டும். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை நீக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும். பின்னர் பாருங்கள் அவர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் இதே வேலையாக இருப்பார்கள்.
அது மட்டுமல்ல பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துவிட்டால், இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து பார்க்க வேண்டிய நிலை வரும் போது அவர்களை அமைதியாகவும், அதே சமயத்தில் அவர்கள் கணிதம் கற்றுக் கொடுக்கவும் இந்த செயல்பாடுகள் வாய்ப்பாக அமையும்.
இது ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளி
மாணவர்களும் படிக்கவேண்டிய புத்தகம். அது மட்டுமல்ல செய்து பார்க்க வேண்டிய செய்முறை புத்தகம். ஒவ்வொரு பெற்றோரும் வாசிக்கனும், குழந்தைகளோடு சேர்ந்து சீட்டு விளையாடனும். இப்போது ஏற்படும் உரையாடலில் பெற்றோரின் மனகவலை நீங்கும், மாணவர்களுக்கு கற்றல் சோர்வு நீங்கும்.
புத்தகத்தின் வடிவமைப்பு அற்புதம், பெரிய எழுத்துகளில் எளிய வார்த்தைகளை கொண்டு, மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் படங்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இதன் விலை150 ரூபாய். பக்கங்கள் 128 பக்கங்களை கொண்டிருக்கிறது. இதனை எழுதியவர்கள் விழியனும், சரண்யாவும். இருவருக்கும் என் அன்பும் பாராட்டும். கணித்திற்கான பங்களிப்பை இன்னும் தந்து கொண்டே இருக்க வேண்டும். பாராட்டுக்கள். இப்புத்தகத்தை வெளிகொண்டுவந்துள்ள புக்பார் சில்ரனுக்கும்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மொ. பாண்டியராஜன்
நூலின் பெயர் : சீட்டுக் கட்டில்
ஆசிரியர்:விழியன் , சரண்யா
விலை: 150 ரூபாய்
பக்கங்கள் : 128 பக்கங்கள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

