சேமிக்கக் கற்றுக் கொள்வோம்…
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே அதுபோல இன்றைய சேமிப்பு என்பது நாளைய நமது வாழ்வில்  பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய கைக்கொடுக்க கூடிய பிறரிடம் கையேந்தாமல் நிற்கக் கூடிய ஓர் உன்னதமான செயலே சேமிப்பு ஆகும்.
ஆம் வாழ்வில் சேமிக்கக் கற்றுக் கொள்வோம். சேமிப்பு என்பது நம்முடைய  வருமானங்களில் வாழ்வதற்கு தேவையான  அத்தியாவசிய  செலவுகளை தவிர  மீதம் இருக்கக்கூடிய தொகையினை முதலாவதாக சேமிக்கக் கற்றுக் கொண்டோம் என்றால் சிறிது காலம் கழித்து அந்தத் தொகையே நம்மையே அறியாமல் நம்முடைய முக்கியமான நம் வாழ்வில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு அற்புதமான விடயத்திற்காக பயன்படும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்முடைய கண்ணியம் எங்கும் குறையவும் செய்யாது.
Semikka Katrukolvom Katrukoduppom Article By S. Nagur Pichai சேமிக்க கற்றுக்கொள்வோம் கற்றுக்கொடுப்போம் - சா.நாகூர் பிச்சை
என் அனுபவ பதிவை நான் இங்கு பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். என் தகப்பனார் வாழ சொல்லிக்கொடுத்த உத்திகளில் இதுவும் ஒன்று. நான் பாடசாலையில் கல்வியைக் கற்றுக் கொண்ட சமயங்களில் என்னுடைய செலவினங்களுக்காக கொடுக்கப்படும் தொகையிலே வீட்டினிலே ஒரு இரும்புப் பெட்டியில் எனக்கென்று ஒரு உண்டியலை வைத்து கொண்டு சிறிது சிறிதாக சேகரித்தேன். இந்த சேகரிப்பின் தொகையானது சிறிது காலம் கழித்து என் படிப்பை முடித்தவுடன் சிறிது காலம் படிப்பு சார்ந்த வேலையை எனது ஊரில் செய்து கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எனக்கு தேடி வந்தது.
அந்த சமயத்திலே விமான போக்குவரத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது அன்றைய சூழலில் 20 ஆயிரம் என்பது என் குடும்பத்திற்கு ஒரு கேள்விக்குறியான ஒரு விடயமே. யாரிடம் கேட்பது யார் நமக்குத் தருவார்கள் என்ற சூழ்நிலையில் என் சேமிப்பு என் பெற்றோர்களை சந்தோஷப்படுத்தியது. நானும் நல்ல முறையிலேயே  என் வாழ்வின் பயணத்தை ஆரம்பம் செய்தேன். என் உறவுகளும் என் நண்பர்களும் எனக்கு உதவி செய்வதற்கு முன்பே என்னுடைய சேமிப்பு எனக்கு உதவி செய்தது என்பதே நிதர்சனமான உண்மை. சிறிது காலம் எனது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு தாயகம் திரும்பி வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே எனது குடும்ப வாழ்வில் தொடரச் செய்தேன்.
அதுமட்டுமின்றி எனது சேமிப்பின் தொடரால் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளையும் என் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளையும் தவிர்த்து மீதமுள்ள தொகையில் சிறிது சிறிதாக நான் சேமித்த தொகையோ சராசரி ரூபாய் 300000 சேர்ந்து விட்டது. நான் தற்பொழுது  சொந்தமாக வசிப்பதற்கு ஓர் இடத்தையும் விலைக்கு வாங்கிவிட்டேன். குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் நான்  பணத்தை சேமிப்பதற்காக இரும்புப் பெட்டியையே பயன்படுத்தினேன். அதுமட்டுமின்றி என் சேமிப்பில் எனது மனைவியின் பங்கும் மிகவும் அலாதியானது. ஏனெனில் அவர்களின் துணையுடன் சேமிக்க தொடங்கியதே சிறப்பம்சம்.
Semikka Katrukolvom Katrukoduppom Article By S. Nagur Pichai சேமிக்க கற்றுக்கொள்வோம் கற்றுக்கொடுப்போம் - சா.நாகூர் பிச்சை
என் சேமிர்ப்பிற்காக  எந்த வங்கிகளையும் நான்  நாடவில்லை. ஏனெனில் நம்முடைய பணத்தை நாம் சேகரிக்க பிடிமானத் தொகையையும் கொடுத்துவிட்டு, குறைந்தபட்ச தொகையை தொடர வில்லை என்பதற்காக அபராதத் தொகையையும் நான் கொடுக்க தயாராக இல்லை.. இன்று ஒரு சில வங்கிகள் குறைந்தபட்ச தொகையை இருப்பில் வைக்க வில்லை என்று கோடிக்கணக்கில் என்னை போன்ற ஏழைகளிடம் இருந்து பறிமுதல் செய்து உள்ளது என்பதே நிதர்சனம்..
சேமிக்க கற்று கொடுங்கள்..
நாம் சேமிப்பது மட்டுமல்லாமல் அந்த விடயத்தை நம்முடைய சந்ததிகள் கற்றுக்கொடுப்போம். ஆம் என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்த அவ் விடயம் தான் என் வாழ்வில் நிம்மதியையும், எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தையும்  தந்திருக்கின்றது. இன்னும்  நாம் நம் குழந்தைகளுக்கோ அல்லது நம் உறவுகள் கொண்ட குழந்தைகளுக்கோ சேமிக்க கற்றுக் கொடுங்கள். அவர்களின் வாழ்வின் சேமிப்புகளை ஆரம்பம் செய்துவிடுங்கள் அவர்களின் வாழ்க்கை சிறப்பாகவே அமையும். இனி தேவையில்லாத அனாவசியமான செலவுகளும் அவர்கள் வாழ்வில் தவிர்த்துவிடுவார்கள் அவர்களுக்கு சேமிக்கும் ஆர்வத்தை ஊட்டுங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்..
(வாழ்வியல் கவி) சா.நாகூர் பிச்சை. திண்டுக்கல்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *