செப்டம்பர் 01 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (Economist William Stanley Jevons Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ் (William Stanley Jevons) செப்டம்பர் 1, 1835இல் பிறந்து ஆகஸ்ட் 13, 1882இல் மறைந்த பிரித்தானிய நாட்டைச் சார்ந்த தர்க்கவியலாளர் மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். 1871இல் The Theory of Political Economy வெளியிட்ட அவருடைய புத்தகம், மதிப்பின் இறுதி நிலைப் பயன்பாட்டுக் கோட்பாட்டை விளக்கியது. ஜெவோன்ஸ் குறியீட்டு எண்களை உருவாக்கிய முதல் பொருளாதார அறிஞர் ஆவார், சமூக அறிவியலில் அனுபவ அடிப்படையிலான முறைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார அளவீடுகளை (econometrics) பயன்படுத்தி அதிக அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டார். ஜெவோன்ஸ் கணித மற்றும் பகுத்தறிதல் பொருளாதாரத்தில் வல்லுநராவார். பயன்பாடு மற்றும் சுயவிருப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சந்தை விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்கிறார் ஜெவோன்ஸ்.

1862இல் வெளியிடப்பட்ட General Mathematical Theory of Political Economy என்ற புத்தகத்தில் ஜெவோன்ஸ், மதிப்பின் இறுதி நிலைப் பயன்பாட்டுக் கோட்பாடு பற்றி விளக்கமாக விளக்கியுள்ளார். ஒரு பொருளின் கூடுதல் அலகின் பயன் அல்லது மதிப்பு, அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அந்தப் பொருளின் அலகுகளின் எண்ணிக்கையுடன் நேர்மாறாக தொடர்புடையது என்பதை இந்தக் கோட்பாடு வெளிப்படுத்துகிறது. 1863இல் வெளியிடப்பட்ட A Serious Fall in the Value of Gold, ஜெவோன்ஸ், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் விலை உயர்வை அளவிட முயன்றது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பு அதுவரை வெளியிடப்பட்ட குறியீட்டு எண்களின் கோட்பாட்டிற்கு மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளில் ஒன்றாகும்.

பொருளாதாரத்தின் உற்பத்தி சார்பான நிலையில் ஜெவோன்ஸ் மிகக் குறைவாகவே கவனம் செலுத்தியுள்ளார். பிரிட்டனின் தொழில்துறையானது முதன்மையாக நிலக்கரியைச் சார்ந்தது என்றும், அந்த வளம் தீர்ந்துவிட்டால் தொழில் துறையானது வீழ்ச்சியடையும் என்று ஜெவோன்ஸ் எழுதிய The Coal Question என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இக் கருத்தானது அக் காலகட்டங்களில் பெரிதும் கவனம் பெற்றது. நிலக்கரி இருப்பு தீர்ந்துவிட்டால், நிலக்கரியின் விலை உயரும் என்றும் குறிப்பிட்டார். ஜெவோன்ஸ் பொருளாதாரத்தில் பரும விதி பற்றியும், கணித நுட்பங்கள் பற்றியும் விரிவாகக் கையாண்டுள்ளார், இத்துடன் பொருளாதாரமானது ஓர் அறிவியல் என்று ஜெவோன்ஸ் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.plato.stanford.edu; www.mathshistory.st-andrews; www.socialscience.international

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *