செப்டம்பர் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி ஜார்ஜ் (Economist Henry George Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி ஜார்ஜ் – முனைவர் பு. அன்பழகன்

ஹென்றி ஜார்ஜ் (Henry George) செப்டம்பர் 2, 1839இல் பிறந்து அக்டோபர் 29, 1897இல் மறைந்த நில சீர்திருத்தவாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஹென்றி ஜார்ஜ் 19ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்மிக்கவராக அறியப்படுகிறார், அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து பல ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதியுள்ளார். Progress and Poverty (முன்னேற்றம் மற்றும் வறுமை) என்ற தலைப்பில் 1879இல் புத்தகத்தை ஹென்றி ஜார்ஜ் வெளியிட்டார், இது 25மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, காரல் மார்க்ஸின் Das Kapital புத்தகத்தை இது விஞ்சியது, மேலும் எச்.ஜி.வெல்ஸ் மற்றும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சோசலிஸ்டுகளாக மாற இவருடையப் புத்தகம் தூண்டுகோலாக இருந்தது. ஏப்ரல் 1855இல், 15 வயதில், ஹென்றி ஜார்ஜ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இரு நாடுகளின் மக்களின் வாழ்க்கை நிலையினை அடிப்படையாகக்கொண்டு, அவரது கோட்பாடுகளை வலுவாக உருவாக்கினார்.

Georgism (ஜார்ஜிசம்)

ஹென்றி ஜார்ஜ் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்ந்து காணப்படும் வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை காண முயன்றார். மேலும் அவர் தனது வரிவிதிப்புக் கோட்பாடு மூலமாகவும், அரசியல் வழியாகவும் இந்தப் பிரச்சினையை அணுகினார், ஆனால் அது தோல்வியடைந்தது. Georgism (ஜார்ஜிசம்) என்று அழைக்கப்படும் தத்துவம் மற்றும் பொருளாதார சித்தாந்தத்தை அவர் உருவாக்கினார், இது ஒவ்வொருவரும் தாங்கள் உருவாக்கும் பொருளுக்குச் சொந்தமானவர்கள், ஆனால் இயற்கையில் காணப்படும் அனைத்தும், மிக முக்கியமாக நிலம், அனைத்து மனிதக்குலத்திற்கும் சமமாகச் சொந்தமானது என்பதைக் கூறுகிறது. 1871ஆம் ஆண்டில், அவர் Our Land and Land Policy (நமது நிலம் மற்றும் நிலக் கொள்கை) என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார், அதில் அவர் முதல் முறையாக வறுமைக்கான முதன்மைக் காரணமான வாடகைக் கோட்பாட்டை முன்வைத்தார் (நில வாடகை என்பது இயற்கையின் கொடை மற்றும் சமூக வளர்ச்சியால் உருவாகும் உபரி வருமானம் என்று வாதிட்டார். நிலத்தினால் ஏழை-எளியோர் பயன் பெறுகின்றனர் ஆனால் அவர்கள் பலமுனை வரியினை நிலத்தின் மீது விதிப்பதால் வறுமையில் வாழ நேரிடுகிறது இதனைப் போக்க அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும் என்றும், ஒற்றை வரி கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாட்டினை ஹென்றி ஜார்ஜ் வலியுறுத்துகிறார்.

Single Tax (ஒற்றை வரி)

நிலத்தின் மீதான Single Tax (ஒற்றை வரி)ன் ஆதரவாளராக ஹென்றி ஜார்ஜ் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். அரசாங்கம் அதன் அனைத்து திட்டங்களுக்கும் ஒரே ஒரு வரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நிதியளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். வருமானத்தின் மீதான வரி மக்கள் வருமானம் ஈட்டுவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது, கோதுமை மீதான வரி கோதுமை உற்பத்தியைக் குறைக்கும். இருப்பினும், மேம்படுத்தப்படாத நிலத்தின் மதிப்பின் மீதான வரி வேறுபட்டது. நிலத்தின் மதிப்பு இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது, அதாவது அதன் இயற்கை மதிப்பு மற்றும் மேம்பாடுகள் மூலம் அது பெறும் மதிப்பு ஆகும். அதன் இயற்கையான நிலையில் ஒரு காலி இடத்தின் மதிப்பு நிலத்தின் உரிமையாளர்களால் ஏற்படும் தியாகம் அல்லது வாய்ப்புச் செலவிலிருந்தும் அல்ல, மாறாக ஒரு நிலையான அளவு நிலத்திற்கான தேவையிலிருந்து வருகிறது. நில வரியானது நிலத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் இழப்பினை எதிர்கொள்ளும் என்றும், எனவே நிலம் பயன்படுத்தப்படும்போது முதலீட்டை ஊக்குவிக்கும், வறுமையை ஒழிக்கும் மற்றும் வேலையின்மையைக் குறைக்கும் என்றும் ஹென்றி ஜார்ஜ் கூறினார். ஹென்றி ஜார்ஜ் தடையற்ற வர்த்தகத்தின் ஆதரிப்பவராகவும், பாதுகாப்பு வாதத்தை (Protectionism) எதிர்ப்பவராகவும் இருந்தார். பாதுகாப்பு வாதம் என்பது வர்த்தகத் தடைகளுக்கான ஒரு தவறான சொல் என்பதை அவர் தெளிவாகக் கண்டார், மேலும் “பாதுகாப்பு வாதம்” யாருக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதை அடையாளம் கண்டார்.

ஆதாரம்: www.britannica.com; www.digitalhistory.uh.edu; www.econlib.org; www.newworldencyclopedia.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *