ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் (Robert James Gordon) செப்டம்பர் 3, 1940இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். இவர் வேலையின்மை, பணவீக்கம், தொழிலாளர் உற்பத்தித்திறனின் நீண்டகால மற்றும் சுழற்சி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவராவார். ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் Intermediate Macroeconomics (இடைநிலை பேரியல் பொருளாதாரம்) என்ற பாடப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். The Measurement of Durable Goods Prices, The American Business Cycle, The Economics of New Goods ஆகிய புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
The Rise and Fall of American Growth (2016) என்ற புத்தகத்தை ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் எழுதியுள்ளார். இப் புத்தகமானது, அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினையும் விளக்குகிறது, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு முதல் மருத்துவம் மற்றும் வங்கி வரை ஏற்பட்ட மாற்றத்தினைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இப் புத்தகம் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 1870 மற்றும் 1970க்கு இடையிலான அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, மின்சாரம், நகர்ப்புற சுகாதாரம், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள், இயந்திரம், நவீன தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில்துறை சகாப்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால் தூண்டப்பட்டது என்கிறார் ராபர்ட் ஜேம்ஸ் கார்டன்.
ராபர்ட் ஜேம்ஸ் கார்டன் ஆராய்ச்சியின் குறிப்பிடத்தக்கப் பகுதியாகப் பணவீக்கம் உள்ளது. 1970களின் Stagflation (தேக்கவீக்கம்) என்பது பணவீக்கம் மற்றும் வேலையின்மை இரண்டிலும் ஒரே நேரத்தில் அதிகரித்தது என்றும், 1973இல் எரிபொருள் எண்ணெய் நெருக்கடி போன்ற பகிர்வின் அதிர்ச்சிகளின் தாக்கத்திற்குக் காரணமான பிலிப்ஸ் வளைவின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை உருவாக்குவதற்கு கோர்டன் முன்னோடியாக இருந்தார்.
பணவீக்கத்தின் “முக்கோண” மாதிரியில் கோர்டனின் பணி, நிலையற்ற உணவு மற்றும் எரிசக்தி விலைகளின் தாக்கத்தை நீக்கும் core inflation (மைய பணவீக்கம்) முக்கியத்துவத்தை நிரூபித்தது. அவரது The Measurement of Durable Goods Prices என்ற புத்தகம், முதலீட்டுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்களுக்கான புதிய, தர-சரிசெய்யப்பட்ட விலைக் குறியீடுகளை உருவாக்கியது. வணிக சுழற்சிகளை அளவிடுவதில் அவர் பெரும் பங்களிப்பினை செய்துள்ளார்.
ஆதாரம்:
www.imf.org; www.economics.northwestern.edu; www.live.worldbank.org; www.politico.com
www.aeaweb.org இணையதளம்
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

