செப்டம்பர் 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹெர்மன் ஹென்ரிச் கோசன் (Economist Hermann Heinrich Gossen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் சாவென் – முனைவர் பு. அன்பழகன்

ஹெர்மன் ஹென்ரிச் கோசன் (Hermann Heinrich Gossen) செப்டம்பர் 7, 1810இல் பிறந்து பிப்ரவரி 13, 1858இல் மறைந்த ஜெர்மன் நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ஹென்ரிச் கோசன் இறுதி நிலை பயன்பாட்டு பொதுக் கோட்பாட்டை விளக்கமாக முதலில் வழங்கியவர் ஆவார். ஹென்ரிச் கோசன் பொருளாதார படைப்புகள் புதிய தொன்மைப் பொருளாதாரக் கூறுகளின் பிரதிபலிப்பாக்க உள்ளது குறிப்பாக, theory of goods (பொருட்களின் கோட்பாடு), theory of value (மதிப்பு கோட்பாடு), marginal utility (இறுதி நிலை பயன்பாடு), neoclassical mathematics (புதியதொன்மை கணிதம்) போன்றவையாகும்.

Diminishing Marginal Utility (குறைந்தசெல் இறுதி நிலை பயன்பாடு)

கோசன் குறைந்தசெல் இறுதி நிலை பயன்பாட்டு விதியினை வரைபடம் மூலம் விளக்கியுள்ளார். இக் கோட்பாடு, ஒரு பொருளை தொடர்ந்து நுகரும்போது கிடைக்கும் கூடுதல் திருப்தியானது குறைந்து வரும் என்பதாகும். கோசன் utility (பயன்பாடு) என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, மாறாக பல்வேறு magnitude of satisfaction (திருப்தியின் அளவு) போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

Gossen’s Laws (கோசனின் விதி)

(1) “கோசனின் முதல் விதி” என்பது ஒரு பொருளின் அதிகரிக்கும் நுகர்வானது குறைந்த அளவிலே திருப்தியில் கூடுதலாகும், இதனை குறைந்தசெல் இறுதி நிலை பயன்பாட்டு விதி என்று குறிப்பிடப்படுகிறது.

(2) “கோசனின் இரண்டாவது விதி” என்பது சம இறுதி நிலை விதி ஆகும், அதாவது வரையறுக்கப்பட்ட அளவில் நிதி இருப்பினை எதிர்கொள்ளும்போது, ஒருவர் தனது செலவினங்களை பல்வேறு பொருட்களுக்கு ஒதுக்கும்போது தனது பயன்பாட்டை அதிகப்படுத்துகிறார், இதனால் அவர் நுகரப்படும் ஒவ்வொரு பொருளின் கடைசி அலகிலிருந்தும் அதே அளவு திருப்தியைப் பெறுகிறார்.

(3) “கோசனின் மூன்றாவது விதி”: ஒரு பொருளின் தேவை அதன் அளிப்பை விட அதிகமாக இருக்கும்போது மட்டுமே அதற்கு மதிப்பு இருக்கும் என்பதாகும்.

கோசனின் கோட்பாட்டில் பயன்பாட்டுத் தத்துவார்த்த நுண்கணித முறையினை பயன்படுத்த முயன்றது, சந்தைப் பரிமாற்ற விளைவு, சமூக பயன்பாட்டையும் அதிகப்படுத்துகிறது. கோசனின் தனித்துவமானது தலையிடாக்கொள்கையினை மாற்றியமைக்கக்கூடியதாக நோக்குடன் காணப்பட்டது.

ஆதாரம்: www.hetwebsite.net; www.proquest.com; www.encyclopedia.com; www.pantheon.world

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *