செப்டம்பர் 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லியோனார்டு ஜோசப் லியோன் ஃபௌச்சர் (Economist Leonard Joseph Leon Faucher Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லியோனார்டு ஜோசப் லியோன் ஃபௌச்சர் – முனைவர் பு. அன்பழகன்

லியோனார்டு ஜோசப் லியோன் ஃபௌச்சர் (Leonard Joseph Leon Faucher) செப்டம்பர் 8, 1803இல் பிறந்து டிசம்பர் 14, 1854இல் மறைந்த பிரெஞ்சு அரசியல்வாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஜெர்மன் சுங்க ஒன்றியத்தைச் சமநிலைப்படுத்த லத்தீன் நாடுகளுக்கு இடையிலான சுங்க ஒன்றியத்தை அவர் ஆதரித்தார். ஆனால் அத்தகைய நடவடிக்கையின் நடைமுறைக்குச் சாத்தியமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு 1842இல் அவரது திட்டத்தை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் இடையே ஒரு சுங்க ஒன்றியமாகச் சுருக்கினார். வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த இடங்களை உருவாக்குவதற்கு தொழில் மயமாக்கலும், நகரமயமாக்கலும் முக்கியம் என்று ஃபௌச்சர் நம்பினார். தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் தூய்மையில் தொழில்துறை புரட்சியின் எதிர்மறையான தாக்கங்களை ஃபௌச்சர் வெளியிட்டார்.

தங்குதடையற்ற வர்த்தக பிரச்சாரத்திற்காக ஃபௌச்சர் சங்கத்தை ஒழுங்கமைக்க அவர் உதவினார், மேலும் 1847ஆம் ஆண்டில் ரீம்ஸின் நகர பகுதிக்குப் பிரதிநிதிகள் சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1848ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு அவர் மார்னே துறைக்கான அரசியலமைப்பு சபையில் நுழைந்தார், அங்கு அவர் குடியரசுக் கட்சி நடவடிக்கைகளை பலவற்றை எதிர்த்தார் – உழைப்பு நேர வரம்பு, பாரிஸில் தேசிய நிவாரணப் பணிகளை உருவாக்குதல், மரண தண்டனையை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டார். லூயிஸ் நெப்போலியனின் தலைமையில் அவர் பொதுப்பணி அமைச்சராகவும், பின்னர் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.brainly.com; www.en.wikisource.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *