1. தியோடர் இம்மானுவேல் குகன்ஹெய்ம் கிரிகோரி (Theodore Emmanuel Gugenheim Gregory) செப்டம்பர் 10, 1890இல் பிறந்து டிசம்பர் 24, 1970இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். குகன்ஹெய்ம் கிரிகோரி 1917 முதல் 1937வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். அவர் இந்திய அரசாங்கத்தின் முதல் பொருளாதார ஆலோசகராகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் அயர்லாந்து அரசாங்கங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். அவரது முக்கிய விருப்பமான களமாக பொது மற்றும் பணவியல் பொருளாதாரம் ஆகும். Gold, Unemployment, and Capitalism (1933), The Gold Standard and Its Future (1932, 1935), India on the Eve of the Third Five-Year Plan (1961) போன்ற முக்கியப் புத்தகங்கள் அவரின் முக்கிய வெளியீடாகும்.
போர்களுக்கு இடையிலான செலாவணி பற்றிய குகன்ஹெய்ம் கிரிகோரி புத்தகங்கள் தங்க முறை மீண்டும் திரும்பும் என்றும் இது பணவீக்கத்தை நிர்வகிக்க இயலும் என்றது. அவரது பகுப்பாய்வு துல்லியமாக இருந்தது, நேரம், சமநிலைகள் மற்றும் தங்கத்திற்கான நீண்டகால அளிப்பு மற்றும் தேவைக் கண்ணோட்டத்தின் சிக்கல்களை ஆராய்ந்தது. மாற்று விகித நிலைத்தன்மை நாடுகளுக்கு இடையிலான ஒப்பீட்டு விலைகளின் நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் வாதிட்டார். எனவே, இதை அடைவதற்கான சிறந்த வழி விலைகளை ஒரே தரத்துடன், அதாவது தங்கத்துடன் இணைப்பதாகும் என்றார். காகிதப் பணத்தின் பணவீக்கத்திற்கு எதிராக அவர் கடுமையாக வாதிட்டார், மேலும் நிர்வகிக்கப்பட்ட செலாவணிகளை விடத் தங்கம் நிலையானது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.encyclopedia.com; www.blogs.lse.ac.uk
**************************
2. ராபர்ட் ரால்ப் நீல்ட் (Robert Ralph Neild) செப்டம்பர் 10, 1924இல் பிரித்தானியாவில் பிறந்து டிசம்பர் 18, 2018இல் மறைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஆவார். கீன்ஸியப் பொருளாதார அறிஞரான இவர், தொழிலாளர் கொள்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐரோப்பாவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையத்தின் செயலகத்தில் பணியாற்றியுள்ளார் மற்றும் உலகப் புகழ்பெற்ற MIT சர்வதேச ஆய்வுகள் மையத்தில், இந்தியா திட்டத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
ராபர்ட் நீல்ட் 1966 முதல் 1971வரை SIPRIஇன் நிறுவன இயக்குநராகப் பணியாற்றினார். ஆயுத வர்த்தகம் மற்றும் வேதியியல் மற்றும் உயிரியல் போர் குறித்த ஆராய்ச்சி உட்படப் பல திட்டங்களை நீல்ட் நிறுவினார். ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த அதிநவீன தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகளின் தொகுப்பான SIPRI ஆண்டு அறிக்கையினை வெளியிட முக்கியமாக அவர் பணியாற்றினார். ராபர்ட் நீல்ட் தனது 94 வயதில் மறைந்தார்.
ஆதாரம்: www.sipri
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

