செப்டம்பர் 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரணாப் பர்தன் (Economist Pranab Bardhan Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரணாப் பர்தன் – முனைவர் பு. அன்பழகன்

பிரணாப் பர்தன் (Pranab Bardhan) செப்டம்பர் 11, 1939 இந்தியப் பொருளாதார அறிஞரான இவர் 1979முதல் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அவர் தொடக்கத்தில் வளர்ச்சி மற்றும் வர்த்தகக் கோட்பாடுகள் பற்றிய ஆய்வுத் தளங்களில் பயணித்தார். அதைத் தொடர்ந்து, வளரும் நாடுகளில் உள்ள கிராமப்புற நிறுவனங்கள், வளர்ச்சிக் கொள்கைகளின் அரசியல் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கல் குறித்து தத்துவார்த்த மற்றும் அனுபவ ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அவரது ஆய்வுக் களமானது பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூக மானுடவியல் ஆகிய துறைகளைச் சார்ந்திருந்தது.

பிரணாப் பர்தனின் புகழ்பெற்ற புத்தகமான, “Awakening Giants, Feet of Clay: Assessing the Economic Rise of China and India”, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 1984ஆம் ஆண்டில், பிரணாப் பர்தன் தனது உன்னதமான படைப்பான “The Political Economy of Development in India” ஐ வெளியிட்டார். இது சுதந்திர இந்தியாவின் சீர்திருத்தத்திற்கு முந்தைய காலத்தில் வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம் குறித்த மிகவும் துள்ளிய குறிப்புகளை பதிவுசெய்திருந்தது. அவர் 1985முதல் 2003வரை Journal of Development Economicsன் தலைமை ஆசிரியராகவும், பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் பொருளாதார சமத்துவத்திற்கும் செயல்திறனுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்த Inequalities and Economic Performance (சமத்துவமின்மை மற்றும் பொருளாதார செயல்திறன்) குறித்த மெக்ஆர்தர் அறக்கட்டளை சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பின் இணைத் தலைவராகவும் இருந்தார்.

ஆதாரம்: www.econ.berkeley.edu; www.igidr.ac.in

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *