செப்டம்பர் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் (Economist Lars Heikensten Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் – முனைவர் பு. அன்பழகன்

லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் (Lars Johan Heikensten) செப்டம்பர் 13, 1950இல் பிறந்த ஸ்வீடிஷ் நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் ஸ்வீடனின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். 1984 மற்றும் 1992க்கும் இடையில், ஹெய்கென்ஸ்டன் ஸ்வீடன் நிதி அமைச்சகத்தில் இயக்குநர் ஜெனரல் மற்றும் பொருளாதார விவகாரத் துறையின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். 2011 முதல், நோபல் பரிசு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர், நோபல் பரிசின் நிதியுதவிக்குப் பொறுப்பானவராக உள்ளார். சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள், நிதிச் சந்தைகள் மற்றும் சொத்து ஒதுக்கீடு, பொருளாதாரக் கொள்கை, அறிவியல், கலாச்சாரம் மற்றும் கொடைத்தன்மை ஆகியவை அவரது ஆர்வமுள்ள துறைகளாகும். ஹெய்கென்ஸ்டன் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் ஸ்வீடிஷ் மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கை விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்கவும் செய்துள்ளார்.

இந்தியாவும் நோபல் பரிசு பெற்றவர்களும்

ஹெய்கென்ஸ்டன் ஒரு நேர்காணலில், மேம்பட்ட அறிவியல் பெரும்பாலும் உயர் மட்ட பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது என்றும், இந்தியாவில் குறைந்த அளவிலான பொருளாதார வளங்கள் காரணமாக மிகவும் வளர்ந்த அறிவியல் அமைப்பு இல்லாததால், நோபல் பரிசு பெற்றவர்கள் மிகக் குறைவு என்றும் அவர் . அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா பல நோபல் பரிசு பெற்றவர்களைப் பெறும் என்றும் அவர் நம்புகிறார். இந்தியாவைப் பொருத்தமட்டில் மிகவும் வளர்ந்த அறிவியல் அமைப்பு இல்லை, பொருளாதார வளங்களும் இல்லை என்றும் எனவேதான் இந்தியர்கள் குறைவாக நோபல் பரிசு பெற்றதற்கான முக்கியக் காரணம் குறிப்பிடுகிறார்.  அதே சமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் மற்ற நாடுகளுக்குச் சென்று அங்கு பணிபுரியும் போது  இவ் விருதுகளைப் பெறுகின்றனர் என்கிறார்.

ஆதாரம்: www.nobelprize.org ; www.weforum.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *