ராபர்ட் இ. லூகாஸ், ஜூனியர் (Robert E.Lucas, Jr.) செப்டம்பர் 15, 1937இல் பிறந்து மே 15, 2023இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொருளாதார அளவீட்டு ஆணுமான பகுத்தறிவு எதிர்பார்ப்புகளின் கோட்பாட்டை (Rational Expectations theory) உருவாக்கிப் பயன்படுத்தியதற்காக 1995ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். இது, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் போன்ற எதிர்காலப் பொருளாதார மாறிகள் குறித்து தனிநபர்கள் எவ்வாறு எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது. மக்கள் தங்கள் பொருளாதார நலன் குறித்துப் பகுத்தறிவு முடிவுகளை எடுப்பதால், அவர்களின் செயல்கள் அரசாங்கக் கொள்கைகளின் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை மாற்றக்கூடும் என்பதை அவர் விளக்கியுள்ளார். இது பேரியல் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் பொருளாதாரக் கொள்கையில் விளைவுகளை ஏற்படுத்தியது.
லூகாஸ் இரண்டு தனித்துவமான பேரியல் பொருளாதாரக் கோட்பாட்டை முன்வைத்தார், இரண்டுமே கீன்ஸியன் பொருளாதாரம் என்ற தலைப்பைக் ஒற்றி வந்ததாகும். ஒன்று, பேரியல் பொருளாதாரத்தை நிலையான நுண்ணியல் பொருளாதாரத்துடன் பொருத்தச் செய்யும் முயற்சி. மற்றொன்று, தரவுகளுக்குப் பொருந்தக்கூடிய மற்றும் கணிப்புகளைச் செய்யப் பயன்படுத்தக்கூடிய பேரியல் பொருளாதார அளவீட்டு மாதிரிகள். 1972ஆம் ஆண்டில், லூகாஸ் தனது புரட்சிகரமான ஆய்வறிக்கையான Expectations and the Neutrality of Moneyயை வெளியிட்டார், அதில் அவர் Phillips curve (பிலிப்ஸ் வளைகோடு)ஐப் பயன்படுத்தினார், இது பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையிலான உறவினை விளக்குகிறது.
அதிகரித்த பணவீக்கம் வேலையின்மை விகிதங்களைக் குறைக்கும் என்பது நடைமுறையில் இருந்த சிந்தனையாக இருந்தாலும், லூகாஸின் டைனமிக் மாதிரியானது (Lucas’s dynamic model), பணவீக்கம் நீண்ட கால சராசரியைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டியது, இதனை லூகாஸ் அளிப்பு மற்றும் தேவை மாதிரி என்று அழைக்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில், பேரியல் பொருளாதார அளவீட்டு மாதிரிகளின் Lucas critique (லூகாஸ் விமர்சனம்) என்று அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தினார். அத்தகைய மாதிரிகளில் மதிப்பிடப்பட்ட பல்வேறு சமன்பாடுகள் அரசாங்கக் கொள்கை குறித்து மக்கள் குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த காலங்களிலிருந்து பெறப்பட்டவை என்பதைக் காட்டினார். அந்த எதிர்பார்ப்புகள் மாறியவுடன், அவரது பகுத்தறிவு எதிர்பார்ப்புகளின் கோட்பாடு கணித்தபடி, ஆதார அடிப்படையிலான சமன்பாடுகளும் மாறும் என்பதாகும்.
பொருளாதார வளர்ச்சித் துறையிலும் லூகாஸ் முன்னியில் இருந்துள்ளார். 1988இல் அவரால் வெளியிடப்பட்ட On the Mechanics of Economic Developmentஇல், பொருளாதார மேம்பாட்டுப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே இருந்த தடையை உடைக்க அவர் உதவினார். ஒரே அடிப்படை பொருளாதார கட்டமைப்பு ஒவ்வொன்றிற்கும் பொருந்த வேண்டும் என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எவ்வாறு வளர்ச்சியை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்று லூகாஸ் வாதிட்டார். மனித மூலதனக் குவிப்பைச் சார்ந்து நீண்டகால பொருளாதார வளர்ச்சியை விளக்கும் Lucas-Uzawa model (லூகாஸ்-உசாவா மாதிரி). உகந்த வரி அமைப்பு மற்றும் முதலீட்டிற்கும் லூகாஸ் முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.
Studies in Business Cycle Theory (1981),
Rational Expectations and Econometrics Practice (1981),
Recursive Methods in Economic Dynamics (1989),
Lucas’ Lectures on Economic Growth (2002),
Collected Papers on Monetary Theory (2013) உள்ளிட்ட பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.news.uchicago.edu; www.econlib.org; www.investopedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

